நமது இந்து மரபுகள் படி தினமும் பூஜை செய்வது வழக்கமாகிவிட்டது. இப்பழக்கத்தால் பலரும் தினமும் காலை, மாலை தீபாராதனை செய்து அந்த இறைவனை வணங்குகின்றனர்.
அதேபோல், வாரம் முழுவதும் சிலர் சாமி அறையை சுத்தம் செய்து, தங்கள் குலதெய்வத்துக்கு சிறப்பு பூஜைகளை செய்கின்றனர். இது போன்ற வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சியுடன் நம் குலதெய்வம் நம் வீட்டில் தங்கம் படி வேண்டிக்கொள்கிறார்கள்.
ஆனால் நாம் செய்யும் வழிபாடு இரட்டிப்பு பலனை அடைய இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
சுவாமி அறையை முதல் நாள் இரவே சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும் பூஜைக்கு உகந்த மலர்களையே பயன்படுத்த வேண்டும். பூஜை அறையில் கடவுளின் புகைப்படங்களை சுத்தம் செய்து பொட்டு வைப்பது வழக்கமானது. முக்கியமாக சிவபெருமானுக்கு விபூதியும், பெருமாளுக்கு சந்தனத்தால் பொட்டு வைக்க வேண்டும்.
பலரும் திரியை வைத்து விட்டு எண்ணெய் ஊற்றுவார்கள். அது மிகவும் தவறு. எப்போதுமே திரியை வைத்த பின்பே தீப எண்ணெய் ஊற்ற வேண்டும்.
இறைவனுக்கு சாதம் வைக்கும் தட்டு வெள்ளி கிண்ணத்திலே அல்லது வாழை இலை அல்லது வெற்றிலையில் வைக்க வேண்டும். தவறுதலாக கூட இரும்பு கிண்ணத்தை பயன்படுத்தக் கூடாது.
பிரசாதம் வைத்த பிறகு, தீபாரதனை கொடுக்க வேண்டும். தீபாரதனை கொடுத்த பிறகு அதனைச் சுற்றி இரண்டு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்களது பிரசாதமும் தேவாரத் தனையும் நேரடியாக இறைவனுக்கே செலுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.
இவ்வாறு நாம் தினமும் தீபாராதனை செய்வதன் மூலம் இறைவனின் அருளைப் பெற நம் பிரார்த்தனை இரட்டிப்பாக வேலை செய்கிறது. சர்வம் சக்தி மயம்!!.
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]