Home கோவில்கள் அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Iravathiswarar Temple, அபிஷேகபுரம்

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Iravathiswarar Temple, அபிஷேகபுரம்

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Iravathiswarar Temple, அபிஷேகபுரம்

Arulmigu Iravathiswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Iravathiswarar Temple

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

ஐராவதீஸ்வரர்

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் தாயார்:

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

மகிழ, வில்வ மரம்

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

அபிஷேகபுரம்

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

சதா அபிஷேகப் பிரியரான ஈசனுக்கு கோயில் அமைந்த ஊரின் பெயரிலேயே அபிஷேகம் அமைந்தது. அபிஷேகபுரம் என்ற அந்தத் தலத்தில் கொங்கு சோழர்கால கட்டடக் கலையில் உருவானது. ஐராவதீஸ்வரர் கோயில். பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரராஜேந்திர சோழனால் இது கட்டப்பட்டது. என்பதை இங்கு காணப்படும். இரண்டு கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. இந்திரனின் யானையான ஐராவதத்தின் சாபத்தை நீக்கியவர் என்பதால் இக்கோயில் இறைவன் ஐராவதீஸ்வரர்.

ஒரு சமயம் வனப்பகுதியில் சென்றுகொண்டிருந்த இந்திரனின் வாகனமான ஐராவதத்தால் அங்கிருந்த முனிவரின் தவம் கலைந்துபோனது வெகுண்டெழுந்த முனிவர் யானையை பூனையாக மாற சாபமிட்டு, மீண்டும் தவத்தில் ஆழ்ந்துபோனார். நடந்த விவரத்தை நாரதர் மூலம் அறிந்து வருந்திய இந்திரன், பூனையாக உருவமாறிய ஐராவதம் பழையபடி யானையாக மாற, பாவ விமோசனம் கேட்டு அன்னை உமாமகேஸ்வரியை வணங்கினார். அபிஷேகபுரத்தில் ஒரு மண்டலம் தங்கியிருந்து தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன் இறைவனை நன்னீராட்டி ஆராதித்து வர, பழைய உருவை ஐராவதம் அடையும், என்று அம்பாள் கூற, ஐராவதம் அதன்படியே செய்து தனது பழைய உருவை அடைந்தது என்பது தலவரலாறு.

அம்பாள் அபிஷேகவல்லி தனிச் சன்னதியில் அழகிய பத்மபீடத்தின் மீது நான்கு கரங்களுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றாள். மேலிரு கரங்களில் பத்மங்களையும், கீழிரு கரங்கள் அபயவரத முத்திரைகளையும் கொண்டு, வேண்டும் வரங்களை அருளும் தாயாக தரிசனம் தருகிறாள். அம்பிகை, வெள்ளிக்கிழமைகளில் பூவாக்கு கேட்க வரும் பெண்களின் கூட்டம் அதிகம் வருகின்றனர். அபிஷேகவல்லியின் கோஷ்டத்தில் வராகி. மகாலட்சுமி, சாமுண்டி உள்ளனர். மேற்கு பிராகாரத்தில் சப்த கன்னியர் அழகிய படைப்புச் சிற்பங்களாக காணப்படுகின்றனர். இக்கோயிலில் காணப்படும் தசாவதாரச் சிற்பங்கள் கலை அழகுமிக்கவை. பிராகாரத்தைச் சுற்றி வந்தால் மங்கள விநாயகர் உள்ளார்.

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

மூலவர் ஐராவதீஸ்வரர் கருவறையில் கிழக்கு நோக்கி லிங்க வடிவில் அருள்கிறார். அர்த்தமண்டப வாயிலில் புடைப்புச் சிற்பமாக கோயிலின் தலவரலாறு செதுக்கப்பட்டுள்ளது.

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

பிரதோஷ பூஜை, ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம், கார்த்திகை, சிவராத்திரி மற்றும் சிவனுக்கு உகந்த தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை, 6:00 முதல் மதியம், 12:00 மணி வரை. மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை.

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

இங்கு அருட்காட்சி தரும் ஈசனையும் அம்பிகையையும் வேண்டினால் சகல பிணிகளும் தீரும்; சர்வ மங்களங்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை. மேலும் கால சர்ப்ப தோஷத்தால் பாதிப்புகுள்ளானவர்களும் வணங்கி நற்பேறு அடைந்திருக்கிறார்கள்.

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

வாரிசு இல்லாத தம்பதியர் இத்தலம் வந்து வில்வ மாலையை ஐராவதேஸ்வரருக்கு அணிவித்து வேண்டி குழந்தை பாக்கியம் பெற்றிருக்கிறார்கள்.

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Iravathiswarar Temple:

அருள்மிகுஐராவதீஸ்வர சுவாமி திருக்கோவில்
அபிஷேகபுரம், மேற்குப்பதி அஞ்சல்
குன்னத்தூர் வழி, திருப்பூர் மாவட்டம் -638 103.

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here