Home கோவில்கள் அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Kolhuntiswarar Temple, குன்னூர்

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Kolhuntiswarar Temple, குன்னூர்

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Kolhuntiswarar Temple, குன்னூர்

Arulmigu Kolhuntiswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Kolhuntiswarar Temple

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

கொழுந்தீஸ்வரர்

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் தாயார்:

மரகதவள்ளி

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

குன்னூர்

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

விருதுநகர் மாவட்டத்தின் எண்ணற்ற கோயில்கள் இருப்பினும், கி.பி., எட்டாம் நூற்றாண்டில் பாறைகளை குடைந்து அமைக்கப்பட்ட முதல் குடவறை சிவன் கோயில் இங்கு அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்தது. விருதுநகர் மாவட்டம் மூவரை வென்றான் அருகே குன்னூர் மலைப்பாறையில் அமைந்துள்ள மரகதவள்ளி அம்பாள் சமேத மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் சிவ தலங்களில் பிரசித்தி பெற்றது.

அர்ச்சுனன் சுனை தீர்த்தம்:  மகாபாரதப் போரில் அர்ச்சுனன் எய்த அம்புகளில் ஒன்று, கோயில் அமைந்துள்ள பாறையில் விழுந்ததாக ஐதீகம். இதன் காரணமாக அம்பு குத்திய இடத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பின் அதுவே வற்றாத சுனை நீரூற்றாக அர்ச்சுனன் சுனை தீர்த்தமாக உள்ளது. இத்தீர்த்தம் அடிவாரத்தில் அர்ச்சுனன் நதியாக இன்றளவும் ஓடுகிறது. அர்ச்சுனன் சுனை அருகே திருவோட்டுக்கேணி வற்றாத நீரூற்று உள்ளது. அர்ச்சுனன் சுனை தீர்த்தம், திருவோட்டுக்கேணி தீர்த்தம், நோய்களை தீர்க்கும் அருமருந்தாக இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

முதல் குடைவரைக்கோயில் என்பது சிறப்பு

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

சிவராத்திரி, பிரதோஷம், பவுர்ணமி நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேகங்கள் நடக்கின்றன.

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

நோய்கள் தீர மரகதவள்ளி அம்பாள் சமேத மலைக்கொழுந்தீஸ்வரரை வழிபடுகின்றனர் பக்தர்கள்.

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

மூலவருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்.

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Kolhuntiswarar Temple:

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், குன்னூர், விருதுநகர்.626138

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here