Arulmigu Thirst Tirthapuriswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு தாகம் தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.
Details of Arulmigu Thirst Tirthapuriswarar Temple
அருள்மிகு தாகம் தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:
தாகம் தீர்த்தபுரீஸ்வரர்
அருள்மிகு தாகம் தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் தாயார்:
அன்னபூரணி
அருள்மிகு தாகம் தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:
பலா மரம்
அருள்மிகு தாகம் தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:
திட்டக்குடி
அருள்மிகு தாகம் தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு:
திருஞானசம்பந்தர் தில்லை (சிதம்பரம்), திருஎருக்கத்தம்புலியூர் (ராஜேந்திரப்பட்டிணம்), திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), திருத்துாங்கானை மாடம் (பெண்ணாடம்) ஆகிய சிவத்தலங்களை வணங்கி, திருப்பதிகங்கள் பாடிப் பின்னர், திருநெல்வாயில் அறத்துறை (திருவட்டத்துறை) ஈசனை வணங்கவேண்டுமென்ற விருப்பத்தினால், தொண்டர்கள் புடைசூழ தம் தந்தையராகிய சிவபாத இருதய திருத்தோள்களின் மேல் அமர்ந்து செல்லும் வழக்கத்தை விடுத்து, 5 வயது குழந்தையாய் இருந்து திருப்பாதங்கள் நோக நடந்து சென்றார். வழி நடந்த களைப்பாலும் மாலை நேரம் ஆனதாலும் இளைப்பாற எண்ணி திருமாறன்பாடியில் உள்ள சிவாலயத்தில் அடியார்களோடு தாகந்தீர்க்க அருளுள்ளம் கொண்டு தமது தண்டாயுதத்தை தரையில் ஊன்றியபோது நீர்ப்பெருக்கெடுத்து வந்தது. அதனை அனைவரும் அருந்தி தாகம் தணிந்து மகிழ்ந்தனர்.
எனவே, ஈசனுக்கு தாகம் தீர்த்தபுரீஸ்வரர் என்றும், அடியார்களின் பசி நீங்க அன்னம் பாலித்தமையால் அம்பாள் அன்னபூரணி என்றும் திருநாமம் பெற்றார்.
திருமாறன்பாடியில் இரவு நேரத்தில் தங்கியிருந்த திருஞானசம்பந்தர் குழந்தையின் திருவடிகள் வருந்தும் துயர் நீக்க நினைத்த திருநெல்வாயில் அறத்துறை (திருவட்டத்துறை) நாதர் (தீர்த்தபுரீஸ்வரர்) ஏறுவதற்கு முத்துச் சிவிகையும், நிழலுக்கு மணிக் குடையும், ஊதுவதற்கு பொற்சின்னமும் இருக்குமாறு அருள்புரிந்தார். அதோடு, அவ்வூர் அந்தணர்கள் கனவிலும் தோன்றி சம்பந்தன் நம்மால் அணைகின்றான்; சிவிகை, குடை, சின்னம் ஆகியவற்றை அவன்பால் அணைந்து கொடும் என்று திருவாய் மலர்ந்தருளினார்.
மறுநாள் காலையில் கோவிலில் கூடிய அந்தணர்களும், அடியார்களும் ஈசன் அருளாள் சிவிகையும், குடையும், சின்னமும் இருப்பதை கண்டார்கள். அதிசயக்கப்பட்ட ஈசன் அருளைப்போற்றி பாடிப்பரவி வணங்கினார். பின்னர் பல்லியம் முழங்க சிவிகை, குடை, சின்னங்களை எடுத்துக்கொண்டு திருஞானசம்பந்தரை எதிர்கொள்ள திருமாறன்பாடி (இறையூர்) சென்றார்கள்.
அதேபோல், சம்பந்தரின் கனவிலும் தோன்றிய ஈசன் முத்து நற்சிவிகை முதலாயின யாம் அளித்தோம். அவற்றைக் கொள்வாயாக’ என்று அருளினார். பொழுது புலர்ந்ததும், பல்லியம் முழங்க அந்தணர்களும், அடியார்களும், மணி, குடை, சின்னம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வந்து திருஞானசம்பந்தர் முன் நின்று ‘அந்தமில் சீர் அறத்துறை நாதர் தங்களுக்கு இவற்றை அருளியுள்ளார்; பேரருள் தாங்குவீர்’ என்று விண்ணப்பிக்க ஞானசம்பந்தர் இது மன்றுளார் அருள் என்று போற்றி வணங்கி இறையருள் நினைத்து இன்புற்று எந்தையீசன் என்று தொடங்கும் திருப்பதிக்கத்தினை பாடிப் பரவி, முத்துச் சிவிகையை மும்முறை வலம் வந்து, பார் மீது தாழ்ந்து திருவைந்தெழுத்து ஓதி உலகெலாம் உய்ய சிவிகையில் ஏறி அமர்ந்தார்.
அடியார்கள் ஈசன் அருளை நினைத்து வியந்து போற்றி, அண்ணலாரைச் சிவிகை மேற்கொண்டு சென்று திருநெல்வாயில் அறத்துறை ஈசன் திருக்கோவிலை வலம் வந்து, எந்தை ஈசன் திருமுன் நின்று தொழுதார் என்று சம்பந்தர் பதிகம் பாடிப் பரவினார். அடியார்களோடு அங்கு சிலநாள் தங்கி பின்னர் தலயாத்திரை மேற்கொண்டார். இவ்வரலாற்றை பெரியபுராணம் நுால் தெரிவிக்கிறது.
இவ்வரலாற்றால் திருஞானசம்பந்தர் தங்கியிருந்து வழிபட்ட திருத்தலம் திருமாறன்பாடி என்பதையும், அவரது காலமாகிய ஆறாம் நுாற்றாண்டிற்கு முந்தைய பழமை வாய்ந்ததையும் அறிய முடிகிறது. நெல்லும், கரும்பும், வாழையும் நிறைந்து நிலத்துக கணி செய்யும் நெடு வயல்கள் புடைசூழ மருதவளமும், நீர்வளமும், ஈசன் திருவருளும் நிறைந்து விளங்குவதால் திருமாறன்பாடி (இறையூர்) என்ற பெயரும், மூர்த்தி, தலம், தீர்த்தம் முப்பெருமையும் பெற்றதால் திருமாறன்பாடி என அழைக்கப்படுகிறது. தாகம் தீர்த்தபுரீஸ்வரர் என்ற நாமத்திற்கேற்ப இன்றைக்கும் இவ்வூரிலிருந்து 40 கிராமங்களுக்கு தண்ணீர் (கூட்டுக் குடிநீர்) வழங்கப்படுகிறது.
–
அருள்மிகு தாகம் தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:
திருஞானசம்மந்தர் அடியார்களோடு தங்கிய திருத்தலம்.
அருள்மிகு தாகம் தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:
கந்தசஷ்டி 8 நாட்கள் திருவிழா. நவராத்தி திருவிழா , மார்கழி மாத பூஜை.
அருள்மிகு தாகம் தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5.30 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு தாகம் தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:
பசி நீக்க வேண்டி பிரார்த்திப்போர்க்கு பசி போக்கும் தலமாகவும்; திருமணம், குழந்தை வரம் வேண்டும். பக்தர்களுக்கு குழந்தை வரம் அருளும் தலமாக உள்ளது. அதேபோல், கார்த்திகை மாதத்தில் 1,008 முறை கோவில் பிரகாரத்தை வலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
அருள்மிகு தாகம் தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறினால் பக்தர்கள் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றுகின்றனர்.
அருள்மிகு தாகம் தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Thirst Tirthapuriswarar Temple:
அருள்மிகு அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோவில்.
இறையூர் அஞ்சல், 606111
திட்டக்குடி, கடலுார் மாவட்டம்.
அருள்மிகு தாகம் தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்: