aathichoodi | ஔவையாரின் ஆத்தி சூடி
- அறஞ் செய விரும்பு
- ஆறுவது சினம்
- இயல்வது கரவேல்
- ஈவது விலக்கேல்
- உடையது விளம்பேல்
- ஊக்கமது கைவிடேல்
- எண் எழுத்து இகழேல்
- ஏற்பது இகழ்ச்சி
- ஐயம் இட்டு உண்
- ஒப்புரவு ஒழுகு
- ஓதுவது ஒழியேல்
- ஔவியம் பேசேல்
- அஃகஞ் சுருக்கேல்
- கண்டு ஒன்று சொல்லேல்
- ஙப் போல்வளை
- சனி நீராடு
- ஞயம் பட உரை
- இடம் பட வீடு எடேல்
- இணககம்அறிந்து இணங்கு
- தந்தை தாய்ப் பேண்
- நன்றி மறவேல்
- பருவத்தே பயிர் செய்
- மண் பறித்து உண்ணேல்
- இயல்பு அலாதன செயேல்
- அரவம்ஆடேல்
- இலவம் பஞ்சில் துயில்
- வஞ்சகம் பேசேல்
- அழகு அலாதன செயேல்
- இளமையில் கல்
- அரனை மறவேல்
- அனந்தல் ஆடேல்
- கடிவது மற
- காப்பது விரதம்
- கிழமைப் பட வாழ்
- கீழ்மை அகற்று
- குணமது கைவிடேல்
- கூடிப்பிரியேல்
- கெடுப்பது ஒழி
- கேள்வி முயல்
- கைவினை கரவேல்
- கொள்ளை விரும்பேல்
- கோதாட்டு ஒழி
- கௌவை அகற்று
- சக்கர நெறி நில்
- சான்றோர் இனத்திரு
- சித்திரம் பேசேல்
- சீர்மை மறவேல்
- சுளிக்கச் சொல்லேல்
- சூது விரும்பேல்
- செய்வன திருந்தச் செய்
- சேரிடம் அறிந்து சேர்
- சை எனத் திரியேல்
- சொல் சோர்வு படேல்
- சோம்பித் திரியேல்
- தக்கோன் எனத் திரி
- தானமது விரும்பு
- திருமாலுக்கு அடிமை செய்
- தீவினை அகற்று
- துன்பத்திற்கு இடம் கொடேல்
- தூக்கி வினை செய்
- தெய்வம் இகழேல்
- தேசத்தோடு ஒத்து வாழ்
- தையல் சொல் கேளேல்
- தொண்மை மறவேல்
- தோற்பன தொடரேல்
- நன்மை கடைப்பிடி
- நாடு ஒப்பன செய்
- நிலையில் பிரியேல்
- நீர் விளையாடேல்
- நுண்மை நுகரேல்
- நூல் பல கல்
- நெல் பயிர் விளை
- நேர்பட ஒழுகு
- நைவினை நணுகேல்
- நொய்ய உரையேல்
- நோய்க்கு இடம் கொடேல்
- பழிப்பன பகரேல்
- பாம்பொடு பழகேல்
- பிழைபடச் சொல்லேல்
- பீடு பெற நில்
- புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
- பூமி திருத்தி உண்
- பெரியாரைத் துணைக் கொள்
- பேதமை அகற்று
- பையலோடு இணங்கேல்
- பொருள்தனைப் போற்றி வாழ்
- போர்த் தொழில் புரியேல்
- மனம் தடுமாறேல்
- மாற்றானுக்கு இடம் கொடேல்
- மிகைபடச் சொல்லேல்
- மீதூண் விரும்பேல்
- முனைமுகத்து நில்லேல்
- மூர்க்கரோடு இணங்கேல்
- மெல்லி நல்லாள் தோள் சேர்
- மேன் மக்கள் சொல் கேள்
- மை விழியார் மனை அகல்
- மொழிவது அற மொழி
- மோகத்தை முனி
- வல்லமை பேசேல்
- வாது முற்கூறேல்
- வித்தை விரும்பு
- வீடு பெற நில்
- உத்தமனாய் இரு
- ஊருடன் கூடி வாழ்
- வெட்டெனப் பேசேல்
- வேண்டி வினை செயேல்
- வைகறைத் துயில் எழு
- ஒன்னாரைத் தேறேல்
- ஓரம் சொல்லேல்
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]