Arulmigu Avaniswarar (A) Simmapuriswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.
Details of Arulmigu Avaniswarar (A) Simmapuriswarar Temple
அருள்மிகு அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:
சிம்மபுரீஸ்வரர்
அருள்மிகு அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில் தாயார்:
மங்களாம்பிகை
அருள்மிகு அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:
வில்வம், மகிழம்பூ மரம்
அருள்மிகு அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:
ஆவணியாபுரம்
அருள்மிகு அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு:
அத்திரி முனிவர் – அனுசூயா தம்பதிகளின் புத்திரர் ஏரண்டர். அவர் காகபுஜண்டரின் சீடர். இம்முனிவர் சிவனை வேண்டி தவம் செய்வதற்கு தகுந்த இடம் தேடி அலைந்தார். ஓரிடத்தில் சிம்மம் ஒன்று அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்துடன் ஒரு மலையையும், அதையொட்டிய வனப்பகுதியையும் கண்டார். அதுவே சரியான இடம் என்றுணர்ந்த முனிவர் அங்கேயே கடுந்தவம் புரிந்தார். முனிவரின் தவத்தில் மகிழ்ச்சியுற்ற இறைவன் அவருக்கு காட்சியளித்து அருள் புரிந்தார். அந்த இடமே முற்காலத்தில் சிம்மபுரம் என்றழைக்கப்பட்டு, தற்போது ஆவணியாபுரம் என்று அழைக்கப்படுகிறது.
ஏரண்ட முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டு, சிம்மபுரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் இறைவன் வீற்றிருந்த அந்த ஆலயம் நாளடைவில் சிதிலமடைந்து மண்ணோடு மறைந்து போனது. பிற்காலத்தில் ஆதிசங்கர பகவத்பாதர் பாரத நாடு முழுவதும் புண்ணிய யாத்திரை மேற்கொண்டபோது இப்பகுதிக்கு வந்ததாகவும், அப்போது அவருடைய கனவில் ஏரண்ட முனிவர் தோன்றி, தான் சிம்மபுரீஸ்வரரை பிரதிஷ்டை செய்த விவரத்தை உணர்த்தியதாகவும், சங்கரரும் மண்ணில் புதையுண்டு போன அந்த லிங்கத்தை கண்டெடுத்து தமது திருக்கரங்களாலேயே திரும்பப் பிரதிஷ்டை செய்ததாகவும் செவி வழிச் செய்தி ஒன்று கூறுகிறது. ஆதிசங்கரர் பூஜித்து வழிபட்ட அந்த ஈசனுக்கு அவணீ ஸ்வரர் என்று பெயர் சூட்டி, ஆலயம் எழுப்பி வழிபாட்டினை தொடர்ந்து வந்துள்ளனர்.
கருவறையில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் பெரிய ஆவுடையாரைக் கொண்டுள்ளது. ஆவுடையார் மேல் அமைந்துள்ள பாணம் மரகதத் திருமேனி என்பது சிறப்பு. தெற்கு நோக்கி அம்பாள் சன்னிதி உள்ளது. மங்களாம்பிகை என்ற திருப்பெயருடன் அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். இறைவன் சன்னிதிக்கு முன் நந்தீஸ்வரர் அழகிய வடிவத்துடன் காட்சியளிக்கிறார். மேலும் பன்னிரு கரங்களுடன் காட்சியளிக்கும் ஆறுமுகக் கடவுள் மிக அழகாக உள்ளது. இக்கடவுள் பெருமாள் அம்சம் கொண்டது. கையில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாது.
அருள்மிகு அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:
கருவறையில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் பெரிய ஆவுடையாரைக் கொண்டுள்ளது. ஆவுடையார் மேல் மரகதத் திருமேனி அமைந்துள்ளது. இது சிம்மராசிக்காரர்களுக்குரிய தலமாகக் கருதப்படுகிறது.
அருள்மிகு அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:
பங்குனி உத்திரம், மகாசிவராத்திரி, அன்னாபிஷேகம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அருள்மிகு அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:
தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருள்மிகு அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:
வியாபார விருத்தி, திருமணத்தடை, குழந்தை பாக்கியமின்மை போன்ற தடைகளை நிவர்த்தி செய்யும் தலமாகவும் திகழ்கிறது.
அருள்மிகு அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:
திருமணம், புத்திர சந்தானம், மற்றும் வேண்டுதல்கள் அனைத்தும் வேண்டியபடி நிறைவேறும் என்பது ஐதீகம்.
அருள்மிகு அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Avaniswarar (A) Simmapuriswarar Temple:
அருள்மிகு அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில், ஆவணியாபுரம், திருவண்ணாமலை-604504.
அருள்மிகு அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]