Home கோவில்கள் அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Anandiswarar Temple, திருநின்றவூர்

அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Anandiswarar Temple, திருநின்றவூர்

அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Anandiswarar Temple, திருநின்றவூர்

Arulmigu Anandiswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Anandiswarar Temple

அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

ஆனந்தீஸ்வரர்

அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் தாயார்:

அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

கல்லால மரம்

அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

திருநின்றவூர்

அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

கயிலாயத்தில் சிவபார்வதி திருமணத்தைக் காண விண்ணுலக தேவர் முதல் மண்ணுலக உயிர்கள் வரை அனைவரும் ஒன்றாகக் கூடினர். அதனால் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது. பூமியை சமநிலைப்படுத்தும் நோக்கில் சிவன், அகத்திய முனிவரை தென்னகத்திற்குப் புறப்பட்டுச் செல்ல உத்தரவிட்டார். வரும்வழியில், அவர் பல இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார். அவ்வாறு வழிபடப்பட்ட லிங்கங்களில் ஒன்றே திருநின்றவூர் பாக்கம் ஆனந்தீஸ்வரர். இவருக்கு சோழமன்னன் முதலாம் ராஜேந்திரன் கி.பி.1022ல் திருப்பணி செய்ததாகக் கல்வெட்டு கூறுகிறது. ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் ஈக்கோடு கோட்டத்தில் புலியூர் நாட்டு சதுர்வேதி மங்கலம் என இப்பகுதியை கல்வெட்டு குறிப்பிடுகிறது. இக்கோயிலில் விளக்கேற்றவும், அன்னதானம் செய்யவும் 56 காணி நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும் கல்வெட்டு கூறுகிறது.

குரு ஸ்தலம்: இங்குள்ள சிவலிங்கத்தின் ஆவுடையார் (பீடம்) தாமரை இதழ் வடிவமாக காட்சியளிப்பது அதிசயமாகும். இவரை வழிபட்டவருக்கு குபேர சம்பத்து கிடைக்கும். அகத்திய மகரிஷி பூஜித்த மூர்த்தி என்பதால், பாவம் நீங்கி புண்ணியம் பெருகும். தலவிருட்சமாக கல்லால மரம் இருப்பதால் குரு மிதுனத்திற்கு பெயர்ச்சியாகி உள்ள இந்த சமயத்தில், இங்கு வழிபடுவது சிறப்பு. தட்சிணாமூர்த்தி, தனது சீடர்களான சனகாதி முனிவர்களுக்கு கல்லால மரத்தடியில் அமர்ந்து உபதேசம் செய்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இதை குரு ஸ்தலம் என்றும் சொல்கின்றனர்.
திருப்பணி: ஆயிரம் ஆண்டு பழமையான இக்கோயில் சிதிலமடைந்துள்ளது. மூலவர் சிவன், நந்தி, சண்டிகேஸ்வரர் தவிர மற்ற சிலைகள் கிடைக்கவில்லை. 15 ஆண்டுகளுக்கு முன், பாக்கம் கிராம மக்கள் கோயிலைச் சுத்தப்படுத்தி வழிபாடு செய்யத் தொடங்கினர்.

அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

அகத்திய மகரிஷி வழிபட்ட சிவன் மற்றும் இது குரு ஸ்தலம்.

அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

பிரதோஷம், சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம் சிறப்பாக நடக்கிறது.

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

திருமணத்தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

வியாழனன்று, இந்த மரத்தின் முன் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத்தடை நீங்குவதோடு குழந்தைப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Anandiswarar Temple:

அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில்
பாக்கம், திருநின்றவூர், திருவள்ளூர்.

அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here