Arulmigu Ananda Natarajar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு ஆனந்த நடராஜர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.
Details of Arulmigu Ananda Natarajar Temple
அருள்மிகு ஆனந்த நடராஜர் திருக்கோயில் மூலவர்:
ஆனந்த நடராஜர்
அருள்மிகு ஆனந்த நடராஜர் திருக்கோயில் தாயார்:
–
அருள்மிகு ஆனந்த நடராஜர் திருக்கோயில் தல விருட்சம்:
அரசமரம்
அருள்மிகு ஆனந்த நடராஜர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:
விளாங்குறிச்சி
அருள்மிகு ஆனந்த நடராஜர் திருக்கோயில் வரலாறு:
சென்ற நூற்றாண்டில், கச்சிதிருமலை சுவாமிகள் என்ற அருந்தவ ஞானி தமிழ்நாட்டில் அருட்பணியாற்றி வந்தார். தன் கலசத்தில் இருக்கும் சர்க்கரையை துன்பமுற்ற மக்களுக்கு அருட்பிரசாதமாக வழங்கியதன் பலனாக துன்ப பிணி நீங்கி நல்வாழ்வு பெற்றனர். ஒருசமயம் கோவைக்கு அருகே உள்ள விளாங்குறிச்சி கிராமத்திற்கு அவர் எழுந்தருளிய போது தன்னை வணங்க வந்த ஒரு சிறுமியை ஆசீர்வதித்தவர், உரிய காலத்தில் உன் வயிற்றில் ஒரு ஞானி அவதரிப்பார் என அருளாசி வழங்கினார். அதன்படியே பருவம் அடைந்த அச்சிறுமியான சின்னம்மை என்ற அச்சிறுமி, தகுந்த வயதில் சுப்பராயன் என்பவரை மணந்தாள். அத்தம்பதியினருக்கு 1827 ஆண்டில் ஆண்மகவு ஒன்று பிறந்தது. வெங்கடரமணன் என்று குழந்தைக்குப் பெயரிட்டனர். மூன்றாவது வயதிலேயே சிவபெருமானிடம் தீவிர பக்தி கொண்டார். வெங்கடரமணன். தனது ஏழாவது வயதில் பள்ளிக்கே செல்லாமல் கல்வி கேள்விகளில் சிறந்து சிவஞான நூல்களையும் கற்றறிந்தார். அதோடு தங்களின் குலத்தொழிலான பொன்வேலையிலும் சிறந்து விளங்கினார். வெங்கடரமணருக்கு பதின்மூன்று வயது நிரம்பிய சமயத்தில் ஜடாமுடியுடன் ரிஷி வடிவில் திருநீறு அணிந்து உத்திராட்சமும், முப்புரி நூலணிந்த வயதான தோற்றத்துடன் ஒருவர் அப்பகுதிக்கு வந்த ஞானி ஒருவர், அவருக்கு பஞ்சாட்சர மந்திர உபதேசம் செய்தார். அது முதல் தீவீர சிவ வழிபாட்டில் ஈடுபட்டவர்,
இச்சிறு வயதிலேயே தன் வல வலிமையால் மகா சித்துக்கள் கைவரப் பெற்று ஞான முனிவராகத் திகழந்தார். தன்னை நாடி வரும் மக்களின் துன்பங்களைப் போக்கி நல்லருள் புரிந்து வந்தார். வடலூர் ராமலிங்க சுவாமிகளிடம் ஆழ்ந்த பக்தியும் ஈடுபாடும் கொண்டிருந்ததுடன், அவரை தம் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார் வெங்கடரமணர். வடலூரில் உள்ள சத்திய சன்மார்க்க சங்கத்தைப் போலவே, தாம் வாழ்ந்து வரும் விளங்குறிச்சி கிராமத்திலும் ஒரு ஞான சபையை நிறுவ எண்ணினார். அதற்கென தன் சீடர்களை வடலூருக்கு அனுப்பி அச்சபையினைப் பார்த்து விவரங்களைச் சேகரித்து வருமாறு பணித்தார். அவ்வாறே அவர்கள் தேவையான விபரங்கள் அனைத்தையும் திரட்டி ஊர் திரும்பினர். ஒரு சுபயோக நல்லதொரு நாளில் வேதியர்களைக் கொண்டு பூஜை செய்து அஸ்திவாரம் இட்டு, அடியவர்களுக்கு அன்னதானமிட்டு மகிழ்ந்தார். அதற்கு அடிக்கல் இடப்பட்டது. எண்கோண வடிவில் தாமரை மலர் போன்ற அற்புதத் திருக்கோயிலையும், அதன் முன் இருபத்து நான்கு தூண்களைக் கொண்ட சன்மார்க்க சபாமண்டபமும் கட்டி முடிக்கப்பட்டன.
30 அடி உயரமும் 25 டன் எடையுமுள்ள ஒரே கல்லால் செய்யப்பட்ட துவஜஸ்தம்பத்துடன் கூடிய முன் மண்டபமும் எழுப்பப்பட்டது. 1901-ம் வருடம் ஆவணி மாதம் முதல் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஞான சபையில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, துரியம் என்ற ஏழு நிலைக்கும் ஏழு திரையிட்டு எவ்வுலகும் எவ்வுயிரும் ஞான இன்பமும் அடைதல் பொருட்டு அதி அற்புத அருள் ஞான ஆனந்தத் திருத்தாண்டவ திருநடனம் செய்யும் அருட்பெருஞ்சஜோதியை ஸ்தாபித்தார். சன்மார்க்க சபா மண்டபத்தில் கனகசபை அமைத்து, அதில் வலது காலை தூக்கி ஆடும் ஆனந்த நடராஜரையும், பார்வதி தேவியையும் எழுந்தருளச் செய்தார்.
படம், தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.
கோயில் அருகே 132 ஆண்டுகளுக்கு முன் ஸ்தாபிக்கப்பட்ட வேம்பு அரசு விநாயகர், ராகு-கேது மற்றும் கன்னிமார் சன்னிதி உள்ளன.
அருள்மிகு ஆனந்த நடராஜர் திருக்கோயில் சிறப்பு:
வலது காலை தூக்கி ஆடும் ஆனந்த நடராஜரை தரிசிப்பதும், ஜோதி தரிசனத்தைக் காண்பதும் சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது.
[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
அருள்மிகு ஆனந்த நடராஜர் திருக்கோயில் திருவிழாக்கள்:
இத்தலத்தில் பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜையும் ஞாயிறுகளில் மாலை 7 மணிக்கு ஜோதி தரிசனமும் நடைபெற்று வருகிறது. கடலூரில் நடப்பது போலவே இங்கும் ஏழு திரைகள் விலகி நிறைவாக ஜோதியைத் தரிசிக்கலாம்.இச்ஜோதியை தரிசிப்பது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. வருட திருவிழாக்களில் சித்ரா பவுர்ணமி, ஆருத்ரா தரிசனம் இவற்றோடு, மாசி மாத சித்திரை நட்சத்திரத்தில் குருபூஜையும் நடைபெறுகிறது. சிவாகம முறைப்படி பூஜைகள் நடக்கும்.
அருள்மிகு ஆனந்த நடராஜர் திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு ஆனந்த நடராஜர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:
இன்றும் நம்பிக்கையுடன் இத்தலம் வந்து பணிவோர்க்கு தாயினும் சாலப்பரிந்து அவர்களது துன்பங்களையும் அனைத்து உடல் பிணிகளையும் உள்ளத்து நோய்களையும் தீர்த்து நல் அருள் புரிகின்றார். செல்வமும் நன்மக்கட்பேறும் அளிக்கிறார். 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வளர்ந்து ஓங்கிய அரசு, வேம்பு மரங்களின் கீழ் அருள்பாலிக்கும் விநாயகரையும் ராகு கேது பகவான்களையும் தொழுவது தோஷத்தைப் போக்கவல்லதென்பது ஐதிகம்.
அருள்மிகு ஆனந்த நடராஜர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் சுவாமிக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்.
அருள்மிகு ஆனந்த நடராஜர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Ananda Natarajar Temple:
அருட்பெரும் ஜோதி நடராஜர் ஆலயம்
ஞானமடாலயம் , விளாங்குறிச்சி ,
கோவை 641 035.
அருள்மிகு ஆனந்த நடராஜர் திருக்கோயில் கூகுள் மேப்:
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]