Home கோவில்கள் அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில் – Arulmigu Choleswarar (Tholeswarar) Temple, திருவாலந்துறை

அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில் – Arulmigu Choleswarar (Tholeswarar) Temple, திருவாலந்துறை

அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில் – Arulmigu Choleswarar (Tholeswarar) Temple, திருவாலந்துறை

Arulmigu Choleswarar (Tholeswarar) Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Choleswarar (Tholeswarar) Temple

அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில் மூலவர்:

சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்)

அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில் தாயார்:

அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

திருவாலந்துறை

அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில் வரலாறு:

திருமால், பிரம்மா இருவருக்கும் தங்களுள் யார் பெரியவர் என்ற போட்டி உருவானது. அவர்களுக்கு திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தந்த சிவபெருமான் உண்மையைப் புரிய வைத்தார். அதுபோல இந்த தலத்திலும் சிவபெருமான் அவர்களின் சந்தேகத்தைத் தீர்த்து வைத்தார். திருமாலும் அயனும் சிவனை வழிபட்ட துறை எனும் பொருளில் திருமால் அயன்துறை என வழங்கி, காலப்போக்கில் திருவாலந்துறையென மருவியதாகச் சொல்லப்படுகிறது. கூகையூர் கோட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மூன்றாம் குலோத்துங்க மன்னன் வானவ கோவராயர் கி.பி. 1179-ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் ஒன்றாம் தேதி இவ்வாலயத்துக்கு வருகை புரிந்திருக்கிறார். இறை தரிசனத்தின்போது இறைவனுக்கு அருகே படமெடுத்த கோலத்தில் நாகம் ஒன்று காட்சி தந்து மறைந்தது. இதனையடுத்து, அம்மன்னன் இவ்வாலயத்துக்கு நிலங்கள் தந்து இதனை விரிவுபடுத்திக் கட்டினான் என்று ஆலய வரலாறு கூறுகிறது.

திருமாலும் பிரம்மனும் சிவபெருமானிடம் வந்து தங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டது முதல், கரிகால் சோழன் வந்து வணங்கியது வரை பல சிறப்புகளைக் கொண்டது இக்கோயில். சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகும் வெள்ளாறு பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களின் ஊடாகச் சென்று பரங்கிப்பேட்டை அருகே கடலில் கலக்கிறது. இதற்கு ஸ்வேதா நதி, நீவா நதி என்ற பெயர்களும் உண்டு. நீவா நதி என்பது வசிஷ்டர் அழைத்த பெயராகும். அர்ச்சுனனின் பாணத்தால் இந்த நதி உருவானதாக புராணக்கதை ஒன்றுண்டு. தீர்த்த யாத்திரை மேற்கொண்ட அர்ச்சுனன் தீர்த்த மலை அடிவாரத்துக்கு வந்தபோது சிவபூஜை செய்ய ஆயத்தமானான். அப்போது பூஜைக்குத் தண்ணீர் தேவைப்படவே, கண்ணனின் ஆலோசனைப்படி தனது பிறைவடிவ பாணத்தால் மலையைத் துளைத்தான். அப்போது கங்கையில் பத்திலோர் பகுதி கொண்ட நீர் மலையிலிருந்து பெருகி ஓடியது. அதைத் தொடர்ந்து நடந்த சிவபூஜையின் முடிவில், சிவபெருமான் அர்ச்சுனனுக்கு காட்சி தந்து பாசுபதாஸ்திரத்தை அருளினார். அர்ச்சுனன் காலத்திலேயே தோன்றிய நதியென்பதால் இது 5000 வருட வரலாறுடையதென சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்புடைய வெள்ளாற்றின் கரையில் பல கோயில்கள் உள்ளன. அவற்றில் சப்த துறைகள் எனப்படும் காரியானுதுறை, திருவாலந்துறை, திருமாந்துறை, ஆடுதுறை, திருவட்டத்துறை (திட்டக்குடி), திருவரத்துறை, முடவன்துறை என்னும் ஏழு துறைகள் உள்ளன. திருவரத்துறை நாதரை தரிசிக்க வந்த திருஞானசம்பந்தர் இந்த ஏழு துறைகளையும் பற்றி பத்து பாடல்கள் பாடியுள்ளார்.

அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில் சிறப்பு:

திருமாலும் பிரம்மனும் சிவபெருமானிடம் வந்து தங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டது முதல், கரிகால் சோழன் வந்து வணங்கியது வரை பல சிறப்புகளைக் கொண்டது இக்கோயில்.

அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில் திருவிழாக்கள்:

சிவராத்திரி, பிரதோஷம்

அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 9 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில் பிரார்த்தனைகள்:

ராகு-கேது தோஷம், நாகதோஷம், சனி பாதிப்பு உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள கிணற்று நீரில் நீராடி பிரார்த்தனை செய்தால் சனிதோஷ பாதிப்பு குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில் நேர்த்திக்கடன்:

வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள இறைவனுக்கு புது வஸ்திரம் சார்த்தியும், நெய் அபிஷேகம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Choleswarar (Tholeswarar) Temple:

அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில், திருவாலந்துறை, பெரம்பலூர் மாவட்டம்.

அருள்மிகு சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here