Home கோவில்கள் அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Jurahareswarar Temple, காஞ்சிபுரம்

அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Jurahareswarar Temple, காஞ்சிபுரம்

அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Jurahareswarar Temple, காஞ்சிபுரம்

Arulmigu Jurahareswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Jurahareswarar Temple

அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

ஜுரஹரேஸ்வரர்

அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் தாயார்:

அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

காஞ்சிபுரம்

அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

தாரகன் என்ற அசுரன், சிவனுடைய சக்தியால் மட்டுமே தனக்கு அழிவு வர வேண்டும் என்ற வரம் பெற்றிருந்தான். இதன் காரணமாக தேவர்களைத் துன்புறுத்தினான். வருத்தமடைந்த தேவர்கள், சிவனிடம் முறையிட்டனர். அவர்களிடம் கவலை வேண்டாம் என சிவன் சொல்லிவிட்டாலும் காலதாமதமாகிக் கொண்டே வந்தது. இந்நிலையில், சிவன் திடீரென தவத்தில் ஆழ்ந்து விட்டார். அவரை மன்மதன் மூலமாக எழுப்பும் முயற்சியில் மன்மதன் இறந்தானே தவிரபலன் கிடைக்க வில்லை. எனவே, தேவர்கள் சிவனைப் பல ஸ்தோத்திரங்கள் சொல்லி துதித்தனர். இதையடுத்து சிவனின் கருணைப் பார்வை கிடைத்தது. அவர் தன் நெற்றிக்கண்ணில் இருந்து சுடரை வெளிப்படுத்தி அதை அக்னியிடம் கொடுத்தார். அக்னியின் வயிற்றை அந்த நெருப்பு தாக்கியது. அப்போது, எல்லா தேவர்களுமே அதன் உக்கிரத்தை உணர்ந்தனர். கடும் காய்ச்சல் போல உடல் நெருப்பாய் சுட்டது. தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக தேவர்கள் மேலும் துடித்தனர். சிவனையே அவர்கள் சரணடைந்தனர். அவர்களிடம் சிவன், பூலோகத்தில் காஞ்சி என்னும் திருத்தலத்தில் சுரன் என்ற அரக்கனை ஒழித்துவிட்டு லிங்கவடிவில் எழுந்தருளியுள்ளேன். அதை ஜுரஹரேஸ்வரர் என்று அழைக்கிறார்கள். நீங்கள் அந்த லிங்கத்தை வழிபட்டால் உஷ்ணம் தணியும் என்றார். தேவர்களும் இங்கு வந்து வழிபட்டு, சுரஹரேஸ்வர தீர்த்தத்தில் நீராடி உடல் குளிர்ந்தனர்.

இந்த கோயிலில் ஸ்ரீரங்கத்தைப் போல தோற்றமுடைய பிரணவாகார விமானம் உள்ளது. இந்த அபூர்வ விமானத்தின் நான்குபுறமும் ஜன்னல்கள் உள்ளன. காய்ச்சல் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடும் போது, இந்த ஜன்னல்களின் வழியே வரும் காற்று, வெளிச்சம் ஆகியவை நோயைக் குணமாக்குவதாக தகவல் இருக்கிறது. மூலஸ்தானத்திலும் கருங்கல் ஜன்னல் உள்ளது குறிப்பிடத்தக்கது. பழமையான கோயில் என்பதால், தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.

அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

ஸ்ரீரங்கத்தைப் போல தோற்றமுடைய பிரணவாகார விமானம் உள்ளது. இந்த அபூர்வ விமானத்தின் நான்குபுறமும் ஜன்னல்கள் உள்ளன.

அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

பிரதோஷம், சிவராத்திரி

அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

தீராத காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் இங்குள்ள ஜுரஹரேஸ்வரரை வழிபட்டுச் செல்கின்றனர்.

அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

இங்குள்ள சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Jurahareswarar Temple:

அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம்.

அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here