Homeகோவில்கள்அருள்மிகு கடம்பவனநாதர் திருக்கோயில் - Arulmigu Kadambavanathar Temple, பாப்பாக்கோவில்

அருள்மிகு கடம்பவனநாதர் திருக்கோயில் – Arulmigu Kadambavanathar Temple, பாப்பாக்கோவில்

Arulmigu Kadambavanathar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு கடம்பவனநாதர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Kadambavanathar Temple

அருள்மிகு கடம்பவனநாதர் திருக்கோயில் மூலவர்:

கடம்பவனநாதர்

அருள்மிகு கடம்பவனநாதர் திருக்கோயில் தாயார்:

பாலகுஜாம்பாள்

அருள்மிகு கடம்பவனநாதர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு கடம்பவனநாதர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

பாப்பாக்கோவில்

அருள்மிகு கடம்பவனநாதர் திருக்கோயில் வரலாறு:

அசுரர் குலத்தை அழித்தப் பின், முருகப்பெருமானுக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டது. பார்வதி தேவியர் அறிவுரைப்படி, தோஷ நிவர்த்தியாக, காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள பஞ்சகடம்ப ஸ்தங்களுக்கு வந்த முருகப்பெருமானுக்கு துணையாக முனிவர்களும் வந்தனர். முதலில் தேவூர் அருகில் உள்ள மஞ்சவாடிக்கு வந்த முருகப்பெருமான், மஞ்சளால் விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிப்பட்ட பின், பஞ்சகடம்ப ஸ்தலங்களான ஆதிகடம்பனூர்,அகரகடம்பனூர், இளங்கடம்பனூர், பெருகடம்பனூர், கடம்பரவாழ்க்கை பகுதிகளில் அமைந்துள்ள சிவதலங்களை வழிப்பட்டு பின்னர் கடம்பவனத்தில் வந்து தங்கி, கடம்பரிஷியிடம் ஆசி பெற்று  சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வந்த சிவனை வழிப்பட்டதாக ஐதீகம். முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள் வழிப்பட்ட தலம். முன் காலத்தில் கடம்பமரங்கள் அதிகம் இருந்ததால் கடம்பவனம் என்றழைக்கப்பட்டது. பழமைவாய்ந்த சிவாலயம் காலப்போக்கில் சிதிலமடைந்தது. பெருநிலக்கிழார் சொக்கப்ப முதலியார் என்பவர்  இக்கோயிலை பராமரித்து கடந்த 1928 ம் ஆண்டில் திருப்பணி செய்துள்ளார். பின் கவனிப்பாரின்றி சிதிலமடைந்த சிவாலயத்தை, கிராம மக்கள் சார்பில் 2013 ம் ஆண்டு நவ.14 ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. தற்போது கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

கி.பி.12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட  பழமைவாய்ந்த இக்கோயில் முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. தொன்மை வாய்ந்த இக்கோயில் சோழப் பேரரசர்கள் வழிப்பட்ட தலம்.

அருள்மிகு கடம்பவனநாதர் திருக்கோயில் சிறப்பு:

சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். பங்குனி உத்திரத்தில் சூரிய ஒளி சிவன்மேல் படுதல் சிறப்பு.

அருள்மிகு கடம்பவனநாதர் திருக்கோயில் திருவிழாக்கள்:

ஆடிவெள்ளி 108 குத்துவிளக்கு பூஜை,நவராத்திரி விழா,அன்னாபிஷேகம்,மாசிமஹா சிவராத்திரி,பங்குனி உத்திர விழா, பங்குனி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 6.15 மணி வரை சூரிய பூஜை.

அருள்மிகு கடம்பவனநாதர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு கடம்பவனநாதர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

மூன்று பவுர்ணமி தீர்த்தகுளத்தில் நீராடி, கடம்ப வனநாதரை  அர்ச்சித்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும். திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அருள்மிகு கடம்பவனநாதர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள சிவனுக்கு புது வஸ்திரம் சாற்றியும், நெய் விளக்கேற்றியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

அருள்மிகு கடம்பவனநாதர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Kadambavanathar Temple:

அருள்மிகு கடம்ப வனநாதர் திருக்கோயில்,
பாப்பாக்கோவில், நாகப்பட்டினம்.

அருள்மிகு கடம்பவனநாதர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular