Homeகோவில்கள்அருள்மிகு காலீசுவரர் திருக்கோயில் - Arulmigu Kaliswarar Temple, சீட்டஞ்சேரி

அருள்மிகு காலீசுவரர் திருக்கோயில் – Arulmigu Kaliswarar Temple, சீட்டஞ்சேரி

Arulmigu Kaliswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு காலீசுவரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Kaliswarar Temple

அருள்மிகு காலீசுவரர் திருக்கோயில் மூலவர்:

காலீசுவரர்

அருள்மிகு காலீசுவரர் திருக்கோயில் தாயார்:

சிவகாமசுந்தரி

அருள்மிகு காலீசுவரர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு காலீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

சீட்டஞ்சேரி

அருள்மிகு காலீசுவரர் திருக்கோயில் வரலாறு:

யாதவ குலத்தைச் சேர்ந்த மூவர், சீட்டண்ணன், குரும்பண்ணன், சாத்தண்ணன் ஆகியோர், தங்கள் பசுக்கூட்டங்களோடு இங்கு வாழ்ந்து வந்துள்ளனர். அந்த இடங்களே சீட்டணஞ்சேரி, குருமஞ்சேரி, சாத்தண்ணஞ்சேரி என்று வழங்கலாயின. மணிபுங்க மரத்தினடியில் பசுக்கூட்டம் ஒன்று, சிவலிங்கத் திருமேனிமீது பாலைப் பொழிந்து வருவதை மிளகு, கிராம்பு சுமையுடன் இவ்வழியே வந்த வியாபாரி ஒருவர் கண்டு அதிசயித்தாராம். அவர் கனவிலும் ஈசன் தோன்றி ஆலயம் அமைக்கப் பணித்தாராம்.

கண்ணபிரான் வழிபட்ட காலீசுவரர்: கண்ணபிரானுக்கு ஆவினங்கள் மீது அலாதி அன்பு என்பது அனைவருக்கும் தெரிந்ததே! சீட்டணஞ்சேரியில் எழுந்தருளியுள்ள திருக்காலீசுவரரை கண்ணபிரானும் தரிசித்து வழிபட்டுள்ளார் என்கிறது தலவரலாறு. காளை ஈசுவரர் என்பதே பிற்காலத்தில் காலீசுவரர் என்றும் மருவியிருக்கலாம்.  கண்ணன் மட்டுமல்ல, பரத்வாஜ முனிவரோடு, பாண்டவர் ஐவரும் காலீசுவரை வணங்கி வழிபட்டுள்ளனர். கிருஷ்ணபுரம் என்றும் இத்தலத்திற்குப் பெயர் உண்டு.

மணிபுங்கமரத்தின் அடியில்: மிகவும் அரிதான மணிபுங்க மரத்தடியில் சுயம்புலிங்கமாய் எழுந்தவரே இந்த காலீசுவரர். முக்காளமரம் மூன்று இலைகளோடு செழிப்பாக கம்பீரமாக நிற்கிறது. மிகப்பெரிய பிராகாரம், ஐந்துநிலை ராஜகோபுரம் ஏழு கலசங்களுடன் விண்ணைத் தொட்டிட, ஒரே நேர்கோட்டில் அமைந்த இரண்டு கொடி மரங்கள் உள்ளன. சுவாமி, அம்மன் சன்னதிகளுக்கு எதிரே தனித்தனியே கொடி மரங்கள் அமைந்திருப்பது, ஒரு சில திருக்கோயில்களில் மட்டுமே! கொடிமரத்தின் அருகில் பச்சைக்கல் நந்தி கம்பீரமாக வீற்றிருக்கிறார். எட்டடி உயரம் கொண்ட துவாரபாலகர் இருபுறமும் கம்பீரமாக நிற்க, சன்னதியை நோக்கி உள் சுற்றில் விரைகிறோம். காசிவிசுவநாதரைப் போன்ற சிறிய சிவலிங்கத் திருமேனியராய் திருக்காலீசுவரர் கருவறையில் எழுந்தருளியுள்ளார். அன்னையின் திருநாமம் சிவகாமசுந்தரி

மண்டபங்கள்: மகாமண்டபம், உற்சவமண்டபம், ஊஞ்சல் மண்டபம், வாகன மண்டபம், யாகசாலை மண்டபம், அர்த்தமண்டபம், சிறிய தான மண்டபம் என்று திருக்கோயில் அமைப்பின் அத்தனை அம்சங்களும் கொண்டதாய் திருக்கோயில் அமைந்துள்ளது. வெளிச்சுற்றில் திருக்குளம் நிறையப் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது.

அருள்மிகு காலீசுவரர் திருக்கோயில் சிறப்பு:

இங்கு காலீசுவரர் சுயம்புவாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு காலீசுவரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

பவுர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம்

அருள்மிகு காலீசுவரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு காலீசுவரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

குடும்பம் செழிக்கவும், மன அமைதி பெறவும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

அருள்மிகு காலீசுவரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

அருள்மிகு காலீசுவரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Kaliswarar Temple:

அருள்மிகு காலீசுவரர் திருக்கோயில்
சீட்டஞ்சேரி, காஞ்சிபுரம்.

அருள்மிகு காலீசுவரர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular