Arulmigu Kulasekara Nathar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு குலசேகர நாதர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.
Details of Arulmigu Kulasekara Nathar Temple
அருள்மிகு குலசேகர நாதர் திருக்கோயில் மூலவர்:
குலசேகர நாதர்
அருள்மிகு குலசேகர நாதர் திருக்கோயில் தாயார்:
மட்டுவார்குழலி
அருள்மிகு குலசேகர நாதர் திருக்கோயில் தல விருட்சம்:
–
அருள்மிகு குலசேகர நாதர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:
களக்காடு
அருள்மிகு குலசேகர நாதர் திருக்கோயில் வரலாறு:
களா மரங்கள் நிறைந்த பகுதியாதலால் களக்காடு என்று பெயர் பெற்றதாகக் கூறுவர், பல போர்கள் நிகழ்ந்த இடமாதலால் (களம்) களக்காடு என்றும், களப்பிரர்கள் இப்பகுதியைத் தலையிடமாகக் கொண்டதால் இப்பெயர் பெற்றது என்றும் சொல்வர். முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்(1268-1308) சுமார் 40 ஆண்டுக்காலம் ஆட்சிசெய்தபோது பாண்டியநாடு அமைதியாகவும் செழிப்பாகவும் இருந்ததால் அவரது ஆட்சிக்காலம் பாண்டியர்களின் பொற்காலமாகப் போற்றப்படுகிறது. இவனது ஆட்சியில் எண்ணற்ற புதிய ஆலயங்கள் கட்டப்பட்டு பல ஆலயங்களுக்குத் திருப்பணிகளும் செய்யப்பட்டன. குலசேகர மன்னன் பெயராலேயே பல ஊர்களும் ஆலயங்களும் அழைக்கப்பட்டன. அப்போது தமிழகத்திற்கு விஜயம் செய்த வெனிஸ் யாத்ரீகர் மார்கோ போலோ இந்த பாண்டிய மன்னன் ஆட்சியின் சிறப்பைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். களக்காட்டிலிருந்து சுமார் இரண்டு கி.மீ தொலைவில் உள்ளது பத்தை என்ற குக்கிராமம். பச்சைப்பசேல் என்று காட்சிதரும் வயல்கள் சூழ்ந்த இந்த அழகிய கிராமத்தில் பச்சையாற்றின் கரையில் அமைந்துள்ளது. மட்டுவார்குழலி அம்மன் சமேத குலசேகர மகாலிங்கசுவாமி ஆலயம்.
இங்கு சிவபெருமான் குலசேகரநாதர் என்ற பெயரில் லிங்க வடிவில் எழுந்தருளியிருப்பதோடு மட்டுமின்றி, அவர் சன்னதி அருகிலேயே இன்னொரு தனிக்கோயிலில் ஆவுடைநாயகி என்ற திரிபுரசுந்தரி அம்மன் சமேத திரிபுரஹரேஸ்வரர் சிவாலயமும் உள்ளது. ஒரே வளாகத்திற்குள் இரண்டு தனித் தனி சிவாலயங்கள் கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் அரிய அமைப்பு இது.
கருவறையில் சுயம்பு லிங்கமான சிவபெருமான் குலசேகர நாதர் என்ற திருப்பெயரோடு எழுந்தருளியிருக்கிறார். இந்த லிங்கத் திருமேனி ஐந்து பட்டைகளோடு மேல்புறம் சற்று குவிந்து கூர்மையாக வித்தியாசமான வடிவில் உள்ளது. சிவபெருமானின் ஐந்து முகங்களான தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்களைக் குறிக்கின்ற வகையில் ஐந்து பட்டைகளுடன் குலசேகரநாதர் மகாலிங்கம் அமைந்துள்ளது சிறப்பாகும். தேவி, சுகந்த குந்தளாம்பிகை என்ற மட்டுவார் குழலி அம்மை.
குலசேகர மன்னன் ஆட்சியின்போது காடு மண்டிக் கிடந்த இப்பகுதியைச் சீரமைத்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்த இடத்தில் மண்ணுக்குள் புதைந்திருந்த சிவலிங்கத்தின் மீது மண்வெட்டி பட்டு ரத்தம் பீறிட, மன்னன் வேறு சிவலிங்கத்தை அங்கே பிரதிஷ்டை செய்து ஆலயம் கட்டியதாகச் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.
குலசேகரநாதர் மகாலிங்கம் சன்னதிக்கு வடபுறம் சற்றுத் தாழ்ந்த சன்னதியில் தனி மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறையோடு திரிபுரஹரேஸ்வரரின் சிறிய சன்னதி அமைந்துள்ளது. ஆவுடை இன்றி பாணம் மட்டும் உள்ள லிங்கத் திருமேனி கொண்ட இந்த சிவபெருமானை, பள்ளத்துடையார் என்கின்றனர். தேவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. ஆவுடைநாயகி என்றும் அழைக்கின்றனர். வானம் பொய்த்து மழையின்றி பூமி வறண்ட நாட்களில் பள்ளத்துடையாரின் கருவறையில் நீர் நிரப்பி வழிபட்டால் மழை பொழியும் என்பது நம்பிக்கை.
அருள்மிகு குலசேகர நாதர் திருக்கோயில் சிறப்பு:
ஒரே வளாகத்திற்குள் இரண்டு தனித் தனி சிவாலயங்கள் கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் அரிய அமைப்பு இது.
அருள்மிகு குலசேகர நாதர் திருக்கோயில் திருவிழாக்கள்:
பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி
அருள்மிகு குலசேகர நாதர் திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு குலசேகர நாதர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:
நினைத்த காரியம் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
அருள்மிகு குலசேகர நாதர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
அருள்மிகு குலசேகர நாதர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Kulasekara Nathar Temple:
அருள்மிகு குலசேகர நாதர் திருக்கோயில்
களக்காடு, திருநெல்வேலி.
அருள்மிகு குலசேகர நாதர் திருக்கோயில் கூகுள் மேப்: