Home கோவில்கள் அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் – Arulmigu Kulasekaranathar Temple, காருகுறிச்சி

அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் – Arulmigu Kulasekaranathar Temple, காருகுறிச்சி

அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் – Arulmigu Kulasekaranathar Temple, காருகுறிச்சி

Arulmigu Kulasekaranathar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Kulasekaranathar Temple

அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் மூலவர்:

குலசேகரநாதர்

அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் தாயார்:

சிவகாமி அம்மன்

அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

காருகுறிச்சி

அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் வரலாறு:

6ம் நுாற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்தவர் பூதல வீர உதய மாரத்தாண்டன். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த இவர், குலம் தழைக்க வாரிசு இல்லையே என வருந்தினார். கார்த்திகை சோம வார விரதம் இருந்து குலசேகரநாதரை வழிபட்டு வந்தார். மனைவியோடு சேர்ந்த மன்னருக்கு சிவனருளால் ஆண் குழந்தை பிறந்தது. வம்சத்தை விளங்கச் செய்த குலசேகரநாத சுவாமிக்கு இதனால் ‘வம்ச விருத்தீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டானது.

திருப்புடைமருதுார் ஸ்ரீ கஜானன் மஹராஜ் கைங்கர்ய சபா ஜன.29ல் இக்கோயிலில் மகாபிரதோஷ பூஜை நடத்த உள்ளனர். அன்று மாலை 4:30 மணிக்கு சுவாமி, அம்மன், நந்திகேஸ்வரருக்கு 1008 செவ்விளநீர் அபிேஷகமும், செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை மலர்களால் அலங்காரமும் நடக்கும். ஒரு நபருக்கு 20 விளக்கு என்ற எண்ணிக்கையில் 50 நபர்கள் 1000 தீபங்களை மாலை 5:30 மணிக்கு ஏற்றுவர். அதன்பின் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் மூன்று முறை தீப ஒளியின் நடுவில் எழுந்தருள்வர். ஜாதக ரீதியாக கெடுபலன் உள்ளவர்கள் இதில் பங்கேற்றால் தோஷ நிவர்த்தி உண்டாகும்.

அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் சிறப்பு:

கிழக்கு நோக்கி குலசேகரநாதரும், தெற்கு நோக்கி சிவகாமி அம்மனும் அருள்புரிகின்றனர். அம்மனின் வலது கை மலரைத் தாங்கியும், இடது கையை தொங்கவிட்ட நிலையிலும் உள்ளது. களத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கி நல்ல மணவாழ்க்கை அமையும்.

அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் திருவிழாக்கள்:

பிரதோஷம், கார்த்திகை சோம வாரம், மகாசிவராத்திரி

அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 7:00 – 9:00 மணி, மாலை 5:00 – 7:30 மணி

அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

தோஷம் நீங்கி நல்ல மணவாழ்க்கை அமையும். குழந்தையில்லாதவர்கள் தங்களின் பெயர், நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்ய வீட்டில் மழலைக்குரல் ஒலிக்கும். கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்த தம்பதியர் வேண்டினால் பிரச்னை தீரும்.

அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Kulasekaranathar Temple:

அருள்மிகு குலசேகரநாதர் கோயில்
காருகுறிச்சி , திருநெல்வேலி

அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here