Arulmigu Matheswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.
Details of Arulmigu Matheswarar Temple
அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில் மூலவர்:
மாதேஸ்வரர்
அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில் தாயார்:
–
அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:
–
அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:
குட்டையூர்
அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு:
சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம்.. இந்தப் பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற காராம்பசு ஒன்று, ஓரிடத்தில் நின்று தானாகவே பால் சொரிந்ததாம். பசுவின் மடியில் பால் குறைவது கண்டு குழம்பிய மக்கள், ஒருநாள் அதைப் பின்தொடர்ந்து வந்து பார்த்தபோது, வியந்தே போனார்கள்! அங்கே… பசு சொரிந்த இடத்தில் அழகிய சிவலிங்கத் திருமேனியைத் தரிசித்துச் சிலிர்த்தார்கள். பின்னர் அங்கே கோயில் அமைத்து வழிபடத் துவங்கினார்கள்.
வீட்டில் சுபகாரியம் நடத்துவதாக இருந்தாலோ, நிலத்தில் விதைப்பதற்கு நாள் குறித்துவிட்டுச் செய்ய முற்பட்டாலோ.. மாதேஸ்வரரிடம் பூப்போட்டு சம்மதம் கேட்கும் சடங்கு இங்கே பக்தர்களிடம் உள்ளது. அப்படிப் பூப்போட்டு சம்மதம் கிடைத்துவிட்டால், வீட்டில் சுபகாரியம் விமரிசையாக நடந்தேறி விடும், விளைச்சல் அந்த முறை அமோகமாக இருக்குமாம்.
அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:
நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக நந்தியை பிரதிஷ்டை செய்வது இக்கோயிலின் தனிச்சிறப்பு.
அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:
சிவராத்திரி, பிரதோஷம்
அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:
பிள்ளை வரம் வேண்டுவோர், இங்கு வந்து ஈஸ்வரனைத் தரிசித்து, குழந்தை வரம்
தந்தால் நந்திப் பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக் கொள்கிறார்கள். பசு வணங்கி,
சிவனாருக்கு அபிஷேகித்து, ஊர்மக்களுக்கு சிவ தரிசனம் கிடைக்கச் செய்த தலம்
என்பதால், இந்த ஊரிலும் சுற்று வட்டாரத்திலும் கால்நடைகளுக்கு ஏதேனும்
பிரச்னை, நோய் என்றால், இங்கு வந்து சிவனாரை வழிபட்டு, தீர்த்தப் பிரசாதம்
வாங்கிச் சென்று, கால்நடைக்குத் தருகின்றனர். இதனால், விரைவில் அவை குணமாகி
விடும் என்கின்றனர் பக்தர்கள்.
அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:
பிள்ளை பிறந்ததும் கோயில் சுற்றுச் சுவர்களில் நந்தி சிலை வாங்கி வைத்து, நேர்த்திக்கடனைச் செலுத்திச் செல்கின்றனர். தவிர, குழந்தை பொம்மைச் சுதைச் சிற்பங்களைச் செய்து வைப்பவர்களுக்கு உண்டு. தவிர, தொழிலில் லாபம், வழக்கில் வெற்றி என வேண்டுவோரும் நந்தி பிரதிஷ்டை செய்வதாக, பவுர்ணமி கிரிவலம் வந்து வேண்டிக்கொள்கின்றனர்.
அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Matheswarar Temple:
அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில், குட்டையூர், கோவை.
அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்: