Arulmigu Meenakshi Sundareswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.
Details of Arulmigu Meenakshi Sundareswarar Temple
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மூலவர்:
சுந்தரேஸ்வரர்
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தாயார்:
–
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:
வில்வமரம்
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:
மூலங்குடி
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வரலாறு:
நமது நாட்டில் எந்த ஒரு ஆலயத்திலும் இல்லாத தனி சிறப்பானது. நமது ஆலயத்தில் 18 கைகளுடன் அருள் சுறக்கும் முகத்தோடு சிவபெருமானுக்கு வலது புறத்தில் அமைந்து இருக்கும் ஸ்ரீதுர்க்காதேவி நவகிரகத்தில் ராகு பகவானை பார்த்த நிலையில் அருள் பாழிப்பது கோவில் வணப் பகுதியில் அமைந்து இருப்பதும் இத்தலத்தின் பெருமையாகும். இப்படி பெருமைநிறைந்த ஸ்ரீ துர்க்கா தேவியை செவ்வாய் கிழமைகளில் ராகு கால நேரத்தில் (03-4.30) வணங்கி எலும்பிச்சம்பழம் விளக்கு ஏற்றுவதும் பரிகாரங்கள் செய்வதும் நாக தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் தோஷம் மூலநட்சத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் ஸர்ப்ப தோஷம் குழந்தை பாக்கியம் திருமணத்தடை தார தோஷம் கணவன் மனைவி ஒற்றுமையாக வாழவும் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இவ்வாலயத்தின் வருடத்திற்க்கு ஒரு முறை ஸ்ரீதுர்க்கா தேவிக்கு ஸ்ரீ நவசண்டி ஹோமமானது அதி விமர்சியாக நடைபெறுகிறது இத் திருக்கோவிலில் பௌர்ணமி தினத்தன்று துர்க்கா தேவிக்கு மாலை ஆறு மணியளவில் சிறப்பு ஹோமங்களும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகிறது.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:
மிகப் பழமை வாய்ந்த சக்தி நிறைந்த மூலங்குடி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். இவ்வாலயத்தில் துர்க்காதேவிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. எல்லா சிவாலயத்திலும் துர்க்காதேவி சிவனுக்கு இடது புறம் இருக்க இவ்வாலயத்தில் மட்டும் சிவனுக்கு வலது புறம் எழுந்து நின்று 18 திருக்கரங்களில் ஆயுதங்களை எந்திக்கொண்டு ஜ்வாலா கேசத்துடன் நவகிரகங்களில் ராகு பகவானை பார்த்த நிலையில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கிறாள். இத்திருக்கோயிலில் ஸ்தல விருட்சமாக விலங்கக்கூடிய வில்வமரமானது ஆலயத்தின் வாயிலில் அமைந்துள்ளது நந்தி தேவரின் பின்புறம் நின்று இருகொம்புகள் நடுவில் பார்க்கும் பொழுது சிவனின் நெற்றிக்கண் தெரிவதுபோல் நந்திதேவரின் முன் புறம் நின்று இரு கொம்புகள் நடுவே பார்க்கும் பொழுது வில்வமரம் தெரியும் வில்வமரத்தில் நின்று நந்தி தேவரைப் பார்க்கும் பொழுது இருக்கொம்புகள் நடுவே சிவபொருமான் மிக அழகாகத் தெரிவது இவ்வாலயத்தின் சிறப்பாகும்.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:
மஹாசிவராத்ரி, நவராத்ரி, சித்ராபௌர்ணமி.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:
தோஷம் நீங்கவும், தொழில் செழிக்கவும், நினைத்த காரியம் நிறைவேறவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:
சிவனுக்கு சங்காபிஷேகம் செய்து வழிபட்டால் தொழில் துறையில் இடையூறுகள் நீங்கி நல்ல முன்னேற்றம் அடைவார்கள் துர்க்காதேவிக்கு துர்க்கா ஹோமம் செய்து வழிபட்டால் அவர்கள் எந்த காரியத்தை நினைத்து இந்தகோமம் செய்கிறார்கலோ அது விரைவாக நிறைவேறும் என்பது இக்கோவிலின் ஐதீகம்.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Meenakshi Sundareswarar Temple:
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
மூலங்குடி, புதுக்கோட்டை.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்: