Homeகோவில்கள்அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில் - Arulmigu Panchanadeeswarar Temple, கொரடாச்சேரி

அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Panchanadeeswarar Temple, கொரடாச்சேரி

Arulmigu Panchanadeeswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Panchanadeeswarar Temple

அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

பஞ்சநதீஸ்வரர்

அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில் தாயார்:

தர்ம சம்பர்த்தினி அம்பிகா

அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

கொரடாச்சேரி

அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

கல்வெட்டுகள் அதிகளவில் அழிந்துள்ளதால் வரலாறுகள் தெரியவில்லை. 1500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில் . கருவூரார் வழித்தோன்றலில் வந்த திருப்பதி அருகில் காளகஸ்தியில் அவதரித்த சுப்பிரமணிய சுவாமிகள் இக்கோயிலை புதுப்பித்துள்ளார். திருஞான சம்மந்தர் பூதூர் வழியாக செல்லும் திருக்கொள்ளிகாடு பொங்கு சனீஸ்வரர் கோயிலுக்கும், திருவிடைவியல் கோயிலுக்கும் சென்று பாடல் பாடியதற்கு இவ்வழியாக சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

1925, 1957 மற்றும் 1958 ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. ஒரே இடத்தில் சிவ வைண வதலமாக இருப்பது சிறப்பு. நந்திகேஸ்வரர் திருமேனியில் சிவபானம் அடங்கிருப்பது அபூர்வமான செய்தியாகும். சூரியபகவான், மகாவிஷ்ணு, பெருமாள் பூஜித்த தலம்.

பஞ்ச நதீஸ்வரர் பெயராலும், பஞ்சலோங்களை கொண்டு, பஞ்சபூதங்கள், ஐம்புலங்கன்களை அடக்கி சிவனை வழிபட்டதால், பஞ்சாட்சரபுரம் என அழைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பார்வையற்றவர்கள் சிலர் இங்கு வழிபாடு நடத்தியதால் குருடர்சேரி என்றாகி பின்னர் கொரடாச்சேரி என மருவியதாக கூறப்படுகிறது.

சிவவிஷ்னு தலமான இங்கு மேற்கு பக்கம் நான்கு கலசம் அமைக்கப்பட்டுள்ள ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் கிழக்குப் பக்கம் நந்தியும், மேற்குபக்கம் நாக ஆபரணத்தில் மூலவரும் அருள்பாலிக்கின்றனர்.

அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

பங்குனி 7ம் தேதியில் இருந்து 13ம்தேதி வரை ஏழு நாட்கள் மாலை 6 மணிக்கு நந்திகேஸ்வரரின் இரு கொம்புகள் வழியாக சூரிய ஒளி ஊடுருவி மூலவர் மீது படர்வது சிறப்பு.

அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபவிழா, பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், மாசிமகம், சிவராத்திரி, சூரிய பூஜை, பங்குனி உத்திரம் மற்றும் வைகுண்ட ஏகாதசி

அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

வேண்டுதல் நிறைவேறியவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தியும், அன்னாபிஷேகம் செய்தும், நவக்கிரக ஹோமம் செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Panchanadeeswarar Temple:

அருள்மிகு தர்ம சம்பர்த்தினி அம்பிகா சமேத பஞ்ச நதீஸ்வரர் திருக்கோயில், கொரடாச்சேரி,
குடவாசல் தாலுகா, திருவாரூர்-613703.

அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular