Home கோவில்கள் அருள்மிகு சிவபார்வதி திருக்கோயில் – Arulmigu Sivaparvati Temple, செங்கல் மகேஸ்வரம்

அருள்மிகு சிவபார்வதி திருக்கோயில் – Arulmigu Sivaparvati Temple, செங்கல் மகேஸ்வரம்

அருள்மிகு சிவபார்வதி  திருக்கோயில் – Arulmigu Sivaparvati Temple, செங்கல் மகேஸ்வரம்

Arulmigu Sivaparvati Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு சிவபார்வதி திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Sivaparvati Temple

அருள்மிகு சிவபார்வதி திருக்கோயில் மூலவர்:

சிவபார்வதி

அருள்மிகு சிவபார்வதி திருக்கோயில் தாயார்:

அருள்மிகு சிவபார்வதி திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு சிவபார்வதி திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

செங்கல் மகேஸ்வரம்

அருள்மிகு சிவபார்வதி திருக்கோயில் வரலாறு:

இக்கோயில் நிறுவனர் சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி. இவரது ஆன்மிக, சமூக சேவைக்காக ‛சரஸ்வதி’ பட்டத்தை காஞ்சி ஜெயேந்திரர் வழங்கி உள்ளார்.  அவர் கூறியதாவது: இப்படியொரு சிவலிங்கம் அமைய வேண்டும் என்பது இறைவன், என் கனவில் வந்து சொன்ன விஷயம். இதற்காக நாடெங்கும் அலைந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். பல ஆண்டு சிந்தனையில் இதனை நானே வடிவமைத்தேன்.  நம்மை நாமே உணர வேண்டும்.  நீயும் நானும் ஒன்றே என்பதே அடிப்படை. நம் வாழ்க்கைக்கு தேவையான தத்துவம் இதனுள் உள்ளது. மனித உடலின் ஆதாரமாக உள்ள ஆறு சக்கரங்களை அடிப்படையாக வைத்து, ஆறு தளங்கள் அமைத்தேன். உயரம் 111 அடி என்பது போல, அகலமும் 111 அடி தான். அதாவது 1-1-1 அடிப்படையில் இந்த உலகை இயங்க வைக்கும் சிவன், பிரம்மா, விஷ்ணு என்ற மும்மூர்த்திகளை அடிப்படையாக வைத்து அளவை தீர்மானித்தேன், என்றார்.

கோயிலுக்குள் சென்றதும் மூலஸ்தானத்தில் இணைந்து காட்சியளிக்கும், உலகை ஆளும் சிவபெருமானையும், பார்வதி தாயையும்  தரிசிக்கலாம். பின்னர் அங்கேயே தனிக்கோயிலாக உள்ள விநாயகரையும், முருகனையும் தரிசித்து விட்டால் ‛சிவபரிவார தரிசனம்’ செய்ததாக அர்த்தம்.  சிவபெருமானின் குடும்பத்தை தரிசித்து விட்டோம் என்று நாம் மனதில் நினைத்தாலே மேனி சிலிர்க்கிறது.  
மகேஸ்வரம் கோயிலின் சிவபரிவார தரிசனத்திற்கு மகிமை பல. மனமுருகி வழிபட்டால், பிரிந்து கிடக்கும் குடும்பத்தினரிடையே, கணவன்-மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் அன்பு, அமைதி, ஆரோக்கியத்தை இந்த தரிசனம் தரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
அண்மையில் எழுப்பப்பட்ட கோயிலாக இருந்தும், ஒருவருக்கு கிடைக்கும் பலனை மற்றவருக்கு கூற, கோயிலில் தற்போது பக்தர்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.

அருள்மிகு சிவபார்வதி திருக்கோயில் சிறப்பு:

சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களும், விநாயகரின் 32 வடிவங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரே கோயில், உலகிலேயே உயரமான சிவலிங்கம் உடைய கோயில் என்ற பெருமை பெற்ற தலம் இது.

அருள்மிகு சிவபார்வதி திருக்கோயில் திருவிழாக்கள்:

மகாசிவராத்திரி, விநாயக சதுர்த்தி, விஷூ

அருள்மிகு சிவபார்வதி திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 4.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை.சிவலிங்கம்: காலை 8:00-பகல் 1:00 மணி பகல் 3:30-இரவு 7:30 மணி

அருள்மிகு சிவபார்வதி திருக்கோயில் பிரார்த்தனைகள்:

இங்குள்ள 32 விநாயகர் வடிவத்தையும் ஒரே நேரத்தில் தரிசித்தால் வாழ்வின் தடைகள் அகலும்.

அருள்மிகு சிவபார்வதி திருக்கோயில் நேர்த்திக்கடன்:

அருள்மிகு சிவபார்வதி திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Sivaparvati Temple:

அருள்மிகு சிவபார்வதி கோயில் செங்கல் மகேஸ்வரம், கேரளா

அருள்மிகு சிவபார்வதி திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here