Home கோவில்கள் அருள்மிகு உமா மகேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Uma Maheswarar Temple, எட்டியலூர்

அருள்மிகு உமா மகேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Uma Maheswarar Temple, எட்டியலூர்

அருள்மிகு உமா மகேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Uma Maheswarar Temple, எட்டியலூர்

Arulmigu Uma Maheswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு உமா மகேஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Uma Maheswarar Temple

அருள்மிகு உமா மகேஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

உமா மகேஸ்வரர்

அருள்மிகு உமா மகேஸ்வரர் திருக்கோயில் தாயார்:

உமா மகேஸ்வரி

அருள்மிகு உமா மகேஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு உமா மகேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

எட்டியலூர்

அருள்மிகு உமா மகேஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

சோழ மன்னர் அவர் மண்டலத்தில் 108 கோயில் கட்டியதில் இப்பகுதியில் உமா மகேஸ்வரி உடனுறை உமா மகேஸ்வரர் திருக்கோயில் அமைந்தது சிறப்பு. மேலும் இப்பகுதியில் காசியிலிருந்து பிரதிஷ்டை செய்த விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோயிலும் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. இக்கோயில் நாளடைவில் பராமரிப்பில்லாமல் சிதலமடைந்துவிட்டது. அச்சமயம் இவ்வூரில் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது ஒரு தலையாறி கனவில் இறைவன் தோன்றி மூன்று சுமங்கலி பெண்களை தண்ணீர் கொண்டு வந்து என் திருமேனியை சுத்தம் செய்து, மிளகாய் சாந்து அறைத்து தடவி வழிபாடு நடத்தினால் கட்டாயம் மழை வரும் பஞ்சம் தீரும் என்று கூறினார். இதை தலையாறி ஊர் பெரியவரிடம் கூறினார். அதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சில தினங்கள் கடந்த பின் தலையாறி கூறியதை நிறைவேற்றினார்கள். உடனே மழை பெய்து அப்பகுதி செழிப்பானது. அதன்பின் காட்டில் மறைந்து கிடந்த சிவலிங்கம் உள்ளிட்ட பல விக்கரஹங்களை பாலாலயம் செய்து கும்பாபிஷேகம் நடத்தினார்கள்.

திருவாரூர் தியாகராஜர் கோயில் எட்டிய தொலைவில் உள்ளதால் எட்டியலூர் என்றும்,  இப்பகுதியில் தானியங்கள் மற்றும் மலர்கள் எட்டுவகையானது உற்பத்தி செய்து தியாகராஜர் கோயிலுக்கு அனுப்பியதால் எட்டு இயல்புகளையுடைதால்  எட்டியலூர் என மறுவிய தாகவும் கூறப்படுகிறது. சோழ மன்னன், அவர் மண்டலத்தில் 108 கோயில்கள் கட்டியதில் இந்த கோயிலும் ஒன்று.

அருள்மிகு உமா மகேஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

இங்குள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு உமா மகேஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி

அருள்மிகு உமா மகேஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு உமா மகேஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம் கிடைக்கவும், செல்வ வளம் பெருகவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

அருள்மிகு உமா மகேஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

தாலிக்கயிறு, வளையல், மஞ்சள் புத்தாடை அம்மனுக்கு படைத்து சுமங்கலிக்கு கொடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

அருள்மிகு உமா மகேஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Uma Maheswarar Temple:

அருள்மிகு உமா மகேஸ்வரர் திருக்கோயில்
எட்டியலூர், திருக்கண்ணமங்கை அஞ்சல்,
குடவாசல் தாலுகா,
திருவாரூர்-610104.

அருள்மிகு உமா மகேஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here