Home கோவில்கள் அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Veerattaneswarar Temple, கோனேரிகுப்பம்

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Veerattaneswarar Temple, கோனேரிகுப்பம்

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Veerattaneswarar Temple, கோனேரிகுப்பம்

Arulmigu Veerattaneswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Veerattaneswarar Temple

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

வீரட்டானேஸ்வரர்

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் தாயார்:

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

கோனேரிகுப்பம்

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

தன்னை வழிபட்டு கடுமையாகத் தவம் செய்யும் அரக்கர்களுக்குக் கூட அன்பு காட்டி, அவர்கள் கேட்ட வரத்தைக் கொடுத்துவிடுவார் சிவன். அப்படித்தான் கமலாட்சன், தாரகாசுரன், வத்யுன்மாலி என்ற மூன்று அசுரர்கள் கடுந்தவம் புரிந்து ஈசனிடம் ஒரு வரம் பெற்றார்கள். நாங்கள் தனித்தனியாக இருக்கும்போது, எங்கள் மரணம் அமையக் கூடாது. ஒன்õறகச் சேர்ந்திருக்கும் போதுதான் மரணிக்க வேண்டும் என்பதுதான் வரம். அவர்களின் கடுந்தவத்தை மெச்சி வரத்தைக் கொடுத்து விட்டார் ஈசன். அதன் பின்புதான் அவர்களின் கொடுமைகள் துவங்கின. மூவரும் தனித்தனியே சென்று பல அக்கிரமங்களைச் செய்தார்கள். தேவர்களைப் பிடித்து சித்ரவதை செய்தார்கள். இந்திரனின் அமராவதி கோட்டையை அழித்தார்கள். இதற்கு ஒரு முடிவுகட்ட இந்திரனின் தலைமையில் தேவர்கள் ஈசனைச் சந்தித்தார்கள். ஈசன், திருமாலிடம் ஆலோசனை கலந்தார். நான் கூப்பிட்டால் வருவதற்கு யோசிப்பார்கள். நீங்கள் அவர்களை அழையுங்கள் என்று திருமாலிடம் சொன்னார் ஈசன். பூமிக்கு வந்த திருமால் அவர்களை அழைத்தார். நம்மைக் காத்து ரட்சிக்கும் பெருமாள்தானே அழைக்கிறார் என்று பூமியில் திருமால் பிரத்யட்சமான இடத்துக்கு மூன்று அரக்கர்களும் வந்தார்கள். மூன்று பேரும் ஒன்றாக வந்த சூழலை பயன்படுத்தி, ஈசன் தன் நெற்றிக்கண்ணால் அவர்களை எடுத்துவிட்டார். அவர்களை பஸ்மம் செய்தபிறகு, வீரம் தொனிக்கும் வகையில் அட்டகாசமாகச் சிரித்தார் ஈசன். பிறகு வீரட்டானேஸ்வரர் என்ற திருநாமத்தோடு பூவுலகில் பக்தர்களுக்கு காட்சியளிக்கத் துவங்கினார்.

மலரை அர்ச்சித்து பக்தர்கள் ஈசனை வணங்குவார்கள். ஆனால் 63 நாயன்மார்களில் ஒருவரான சாக்கிய நாயனார் கல்லை வீசி அர்ச்சித்து ஈசனை வணங்கினார். மழலைகளிடம் அடி வாங்கி பெருமிதம் கொண்ட தாய்மார்களைப் போல், கல்லை வீசிய நாயனாருக்கும் கனிவு காட்டி முக்தியடைய வைத்தார் ஈசன். இந்த வரலாற்றை வெளிப்படுத்துகிறது.  பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கொங்கணர், ஈஸ்வரனைப் பரிசோதிக்க நினைத்தார். அவரிடம் ஒரு குளிகை இருந்தது. அதை எந்தப் பொருளின் மீது வைத்தாலும், அந்தப் பொருள் நீராகி விடும். கொங்கணர், அந்தக் குளிகையை வீரட்டானேஸ்வரர் ஆலயத்துக்கு வந்து லிங்க பாணத்தின் மீது வைத்தார். லிங்கம், குளிகையை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டது. மெய்சிலிர்த்த கொங்கணர் அங்கேயே அமர்ந்து இசனை வழிபட்டு, பல சித்திகள் பெற்றார்.
இந்த வீரட்டானேஸ்வரர் மீதுதான் கல்லை வீசினார் சாக்கிய நாயனார். இவர் காஞ்சி அருகிலுள்ள திருச்சங்கமங்கை என்ற ஊரில் பிறந்தவர். இளைஞனாக வளர வளர ஒரு ஞானத் தேடல் இவரை ஆக்ரமித்தது. ஊர் ஊராக அலைந்தார். காஞ்சிபுரத்தில் அப்போது கொடிகட்டிப் பறந்த பவுத்த சமயத்தில் இணைந்தார். பவுத்தத்துக்குத் தமிழில் சாக்கியம் என்று பெயர். பவுத்தத்தில் இணைந்து காவி கட்டினாலும் மனம் என்னவோ, இது நமக்கு ஏற்ற இடம் தானே? என்ற கேள்வியை எழுப்பியவாறே இருந்தது. கால் போன போக்கில் நடந்தவர். கடுமையான ஒரு கோடை மதியத்தில் வீரட்டானேஸ்வரர் பிரதிஷ்டை ஆகியிருந்த இடத்துக்கு வந்தார். லிங்கத்துக்கு எதிரில் அமர்ந்தார். அருகில் புஷ்பம் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்தார். கிடைக்கவில்லை. நிறைய கற்கள் பக்கத்தில் இருந்தன. ஒரு கல்லை எடுத்தார் லிங்கத்தின் மீது எறிந்தார். ஞானத் தேடல் என்ற நோக்கில் அலையடித்துக் கொண்டிருந்த மனத்தில் ஏதோ அமைதி ஏற்பட்டது போல இருந்தது. அதன்பின் அங்கு வந்து தினசரி லிங்கத்தின் மேல் கல்லெறிவது அவர் வழக்கமாயிற்று. ஒவ்வொரு முறை கல் எறிந்தபோதும், ஒரு பூரணத்துவ நிலைக்கு தான் உயர்வதை அவரால் உணர முடிந்தது. ஒருநாள் ஏதோ அசதியில் சாப்பிட அமர்ந்தவருக்கு, அட, இன்று சுவாமிக்கு கல் அர்ச்சனை செய்யவில்லையே என்று தோன்றியது. அங்கே ஈசனும் என்ன இது! நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது. நமது பக்தனைக் காணோமே! என்று காத்துக் கொண்டிருந்தார்.
ஓடோடி வந்த சாக்கியர், கல்லை லிங்கத்தின் மீது வீசிவிட்டு, ஸ்வாமி! மன்னிக்கணும் நேரமாகிவிட்டது என்றார். அவருடைய பக்தியில் உருகிப்போன ஈசன், அம்பாளுடன் காட்சியளித்து அவருக்கு முக்தியை அளித்தார்.

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

மேற்கு நோக்கி இருக்கிறார் சுவாமி. அவருக்கு நேர் எதிரில் கையில் கல்லுடன் இருக்கிறார் சாக்கிய நாயனார். எதிரில் விநாயகரும் இருக்கிறார். சாக்கிய நாயனார் கல்லெறிந்ததன் அடையாளமாக லிங்க பாணத்தின்மீது புள்ளிப் புள்ளியாக இருக்கிறது.

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 7மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு8 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

நினைத்த காரியம் தடையின்றி நடக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Veerattaneswarar Temple:

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்
அப்பாராவ் தெரு, கோனேரிகுப்பம், காஞ்சிபுரம்.

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here