Arulmigu Viswanathaswamy Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.
Details of Arulmigu Viswanathaswamy Temple
அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில் மூலவர்:
விஸ்வநாதசுவாமி
அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில் தாயார்:
–
அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில் தல விருட்சம்:
–
அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:
கணபதி
அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில் வரலாறு:
1990 களில் கணபதியை அடுத்து சக்தி ரோட்டில் பி.எஸ்.என்.எல்.,தலைமை அலுவலகத்தின் பின்புறம் புதிய குடியிருப்புகள் உருவாயின. அப்போது தாங்கள் வழிபட அங்கு இருந்த அரச மரத்தின் அடியில் பிள்ளையார் சிலை வைத்து வழிபட்டுள்ளனர். பின் நாளைடைவில் இங்கு கோயில் அமைக்கலாம் என முடிவெடுத்த பக்தர்கள் மற்றும் குடியிருப்புவாசிகளுக்கு என்ன கோயில் அமைக்கலாம் என்ற குழப்பம் ஏற்பட்டது. அங்கு குடியிருந்த பலர் அரசு பணியில் ஓய்வு பெற்றவர்களாக இருந்ததால், தாங்கள் இறுதி காலத்தில் காசி சென்று மோட்சம் தேட விருப்பம் உள்ளது என்றும், ஆனால் வயதான காலத்தில் தங்களால் அவ்வளது துாரம் செல்ல முடியாது என்றும் தங்கள் கருத்தை கூறினர். இதையடுத்து கோயில் கமிட்டியினர் இங்கு காசி விஸ்வநாதர் ஆலயம் அமைப்பதுதான் சிறப்பாக இருக்கும் என முடிவெடுத்து, உடனடியாக காசி நோக்கி சென்றனர். அங்கு இறைவனின் வடிவம், வழிபாடு, பூஜை முறைகள் அனைத்தையும் அறிந்து கொண்டு இங்கு வந்து அதே போல் 1995 ம் ஆண்டு கோயில் அமைத்தனர். சரவணம்பட்டி குமரகுருபர சாமிகள் ஆசி கொண்டு கும்பாபிேஷக விழா நடத்தி, கோயிலில் மற்ற முருகன், துர்க்கை அம்மன், நவகிரக சன்னதிகள் அமைத்து வழிபட துவங்கினர்.
காசிக்கு சென்று வந்த பலன் இக்கோயிலுக்கு சென்று வந்தால் என்ற பெருமை இக்கோயிலுக்கு உண்டு.
அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில் சிறப்பு:
காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயத்தின் ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்ட கோயில் என்ற சிறப்பு பெற்றது.
அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில் திருவிழாக்கள்:
சிவராத்திரி விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி, பிரதோசம், அன்னாபிேஷகம், அம்மாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி, விசாகம், தைபூசம், சங்கடஹார சதுர்த்தி, கார்த்திகை தீபம், வார வெள்ளிக்கிழமைகள், ஆடி வெள்ளிக்கிழமைகள், குரு வழிபாடு ஆகியவை உண்டு.
அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை: 6 மணி முதல் 9 மணி வரை மாலை: 5 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில் பிரார்த்தனைகள்:
திருமண தடை, தொழில் வளர்ச்சி, குழந்தை பாக்கியம், உடல் நலன் உள்பட சகலவிதமான பிராத்தனைகளும் பக்தர்கள் மேற்கொள்கின்றனர்.
அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில் நேர்த்திக்கடன்:
அங்க வஸ்திரம் சாத்துதல், அன்னதானம் வழங்குதல், பிரசாதம் வழங்குதல், தீபம் ஏற்றி வழிபாடு செய்தல் போன்றவை உண்டு.
அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Viswanathaswamy Temple:
அருள்மிகு விஸ்வநாதசுவாமி கோயில், சக்தி ரோடு, பி.எஸ்.என்.எல்.,அலுவலகம் பின்புறம், கே.ஆர்.ஜி.,நகர், கணபதி, கோயமுத்துார்
அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில் கூகுள் மேப்: