Mahadevar Temple of Arulmigu Kailasan Eeswaram Moolavar, Details, History, Highlights. அருள்மிகு கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.
Details of Mahadevar Temple of Arulmigu Kailasan Eeswaram
அருள்மிகு கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர் திருக்கோயில் மூலவர்:
கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர்
அருள்மிகு கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர் திருக்கோயில் தாயார்:
–
அருள்மிகு கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர் திருக்கோயில் தல விருட்சம்:
–
அருள்மிகு கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:
கேசாவரம்
அருள்மிகு கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர் திருக்கோயில் வரலாறு:
கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத்தலைவன் முதலாம் குலோத்துங்க சோழன் தன் பட்டத்தரசி ஏமுலக முடையாளுடன் திருவூறல் திருத்தலத்திற்க்கு வழிபாடு செய்ய வந்தான். அப்போது மோக்ஷத் வீபத்தில் உறையும் கைலாச ஈஸ்வர முடைய மஹா தேவரை பற்றி அறிந்து. அங்கு வந்து நதிகளின் சங்கமாஸ்தானத்தில் பஞ்சாக்ஷரகிரியில் அமைந்த கூடல் சங்கமேஷ்வரரையும் கைலாசன் ஈஸ்வரத்தில் அமைந்த மஹா தேவரையும் தரிசித்தான்.
தவ வடிவில் வீற்றிருந்த இறைவனின் நிலைகண்டு ஏழுலகமுடையாள் கண்களில் நீர் சொரிய ஆதங்கம் தன் கணவரான மாமன்னரை நோக்கினாள். இத்தகைய சிறப்புமிக்க இறைவனுக்கு தாங்கள் ஏன் ஒரு கற்றளி எடுக்கக் கூடாது என வினவினாள். அவள் வேண்டுதலுக்கு இசைந்தான் குலோத்துங்க ராசன் விரைவில் எழும்பியது கற்றளி, முழுவதும் கருங்கல்லால் ஆன கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் அமர்ந்தார் கைலாய ஈஸ்வரமுடைய மஹாதேவர்.
–
அருள்மிகு கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர் திருக்கோயில் சிறப்பு:
சிவரத்ன பூதத்தினால் தவமிருந்து அனுதினமும் பூஜிக்கப்படும் தலமாகும். சோழ சக்ரவர்த்தியான முதலாம் குலோத்துங்க சோழன் தரிசித்து மனபாரம் நீங்கிய தலம்.
அருள்மிகு கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர் திருக்கோயில் திருவிழாக்கள்:
பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம், சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பிரதோஷம்
அருள்மிகு கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர் திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 9.30 மணி வரை, (விஷேச காலங்களில் மாலையிலும் திறந்திருக்கும்
அருள்மிகு கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:
இங்கு வந்து வேண்டிடும் அடியவர்களின் நியாயமான வேண்டுதல்களான புத்ரபாக்கியம், திருமணம் வாழ்வாதாரம் அனைத்தும் இறையருளால் நிறைவேறுகின்றது.
அருள்மிகு கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:
இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் அபிஷேக பிரியர் ஆதலால் பலவித அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்வித்து தீபமேற்றி வழிபட்டால் மனபாரமின்றி வளமான வாழ்வு வரும். புத்திரபாக்கியம் கிடைத்தவர்கள் துலாபாரம் நடத்தி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
அருள்மிகு கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர் திருக்கோயில் முகவரி – Address of Mahadevar Temple of Arulmigu Kailasan Eeswaram:
அருள்மிகு கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர் திருக்கோயில், கேசாவரம், புதுகேசாவரம் கிராமம். தக்கோலம் அஞ்சல், அரக்கோணம் வட்டம், வேலூர் மாவட்டம்.
அருள்மிகு கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர் திருக்கோயில் கூகுள் மேப்: