Home பாடல்கள் Pachai mayil vaahanane lyrics in tamil | பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் | முருகன் பாடல்

Pachai mayil vaahanane lyrics in tamil | பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் | முருகன் பாடல்

Pachai mayil vaahanane lyrics in tamil | பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் | முருகன் பாடல்

Pachai mayil vaahanane Lyrics Tamil: Murugan Song With Lyrics | பச்சை மயில் வாகனனே சிவ பால சுப்ரமணியனே வா | pachai mayil vaahanane shiva balasubramanyane | முருகன் பாடல்

பச்சை மயில் வாகனன் முருகன் பக்தி பாடல் வரிகள்

Lyrics: பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் தமிழில் உங்களுக்காக இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம். அனைத்து ஆன்மீக நண்பர்களுக்கும் பகிருங்கள்.

॥ பச்சை மயில் வாகனனே ॥
பச்சை மயில் வாகனனே – சிவ
பால சுப்ரமணியனே வா

இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
எள்ளளவும் பயமில்லையே
—- பச்சை

கொச்சை மொழியானாலும் – உன்னை
கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்
சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும்
சாந்தம் நிறைந்ததப்பா
—- பச்சை

நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்கு
நேர்மையெனும் தீபம் வைத்து
செஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகா
சேவல் கொடி மயில் வீரா
—- பச்சை

வெள்ளம் அது பள்ளந்தனிலே – பாயும்
தண்ணி போல் உள்ளந்தனிலே – ‍‍ நீ
மெல்ல மெல்ல புகுந்து விட்டாய் – எந்தன்
கள்ளமெல்லாம் கரைந்ததப்பா
—- பச்சை

ஆறுபடை வீடுடையவா
எனக்கு ஆறுதலை தரும் தேவா (2)
நீ ஏறுமயில் ஏறி வருவாய் – அப்பா
எங்கும் நிறைந்தவனே
நீ ஏறுமயில் ஏறி வருவாய் – முருகா
எங்கும் நிறைந்தவனே —- பச்சை

கோளறு பதிகம் | Kolaru Pathigam Lyrics In Tamil

அலைகடல் ஓரத்திலே – என்
அன்பான சண்முகனே – நீ
அலையா மனம் தந்தாய் – உனக்கு
அனந்த கோடி நமஸ்காரம்.
நீ அலையா மனம் தந்தாய்
உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.

பச்சை மயில் வாகனனே – சிவ
பால சுப்ரமணியனே வா
இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
எள்ளளவும் பயமில்லையே முருகா
எள்ளளவும் பயமில்லையே
—- பச்சை

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here