Sri Lakshmi Narasimhar 108 Potri ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 108 போற்றி Narasimha மந்திரம் ஸ்லோகம் Narasimmar slogan pdf mp3 Jayanti Lord God shri
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 108 போற்றி
கடன் தொல்லையில் இருந்து விடுபட ஏதிரிகளின் பிரச்சனையில் இருந்து வெளியேற ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 108 போற்றியை தினமும் கூறி வந்தால் ஆனைத்தும் தொல்லைகளும் பறந்து போய் விடும். மேலும் இது தைரியதை அளிப்பதோடு பல காலமாக தடை பட்ட காரியம் கை கூட வழி வகுக்கும்.
1. ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி 2. ஓம் திருமாமகள் கேள்வா போற்றி 3. ஓம் யோக நரசிங்கா போற்றி 4. ஓம் ஆழியங்கையா போற்றி 5. ஓம் அக்காரக் கனியே போற்றி 6. ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி 7. ஓம் எக்காலத்தும் எந்தாய் போற்றி 8. ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி 9. ஓம் சங்கரப்ரியனே போற்றி 10. ஓம் சார்ங்க விற்கையா போற்றி
11. ஓம் உலகமுண்ட வாயா போற்றி 12. ஓம் உவப்பில் கீர்த்தியம்மா போற்றி 13. ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி 14. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி 15. ஓம் தாமரைக் கண்ணா போற்றி 16. ஓம் காமனைப் பயந்தாய் போற்றி 17. ஓம் ஊழி முதல்வா போற்றி 18. ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி 19. ஓம் ராவணாந்தகனே போற்றி 20. ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி
21. ஓம் பெற்ற மாளியே போற்றி 22. ஓம் பேரில் மணாளா போற்றி 23. ஓம் செல்வ நாரணா போற்றி 24. ஓம் திருக்குறளா போற்றி 25. ஓம் இளங்குமார போற்றி 26. ஓம் விளக்கொளியே போற்றி 27. ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி 28. ஓம் வந்தெனை ஆண்டாய் போற்றி 29. ஓம் எங்கள் பெருமான் போற்றி 30. ஓம் இமையோர் தலைவா போற்றி
31. ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி 32. ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி 33. ஓம் வேதியர் வாழ்வே போற்றி 34. ஓம் வேங்கடத்துறைவா போற்றி 35. ஓம் நந்தா விளக்கே போற்றி 36. ஓம் நால் தோளமுதே போற்றி 37. ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி 38. ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி 39. ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி 40. ஓம் வாமதேவனுக்கு அருளினாய் போற்றி
41. ஓம் மூவா முதல்வா போற்றி 42. ஓம் தேவாதி தேவா போற்றி 43. ஓம் எட்டெழுத்திறைவா போற்றி 44. ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி 45. ஓம் வரவரமுனி வாழ்வே போற்றி 46. ஓம் வட திருவரங்கா போற்றி 47. ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி 48. ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி 49. ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி 50. ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி
51. ஓம் மாலே போற்றி 52. ஓம் மாயப் பெருமானே போற்றி 53. ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி 54. ஓம் அருள்மாரி புகழே போற்றி 55. ஓம் விண் மீதிருப்பாய் போற்றி 56. ஓம் மண்மீது உழல்வோய் போற்றி 57. ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி 58. ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி 59. ஓம் முந்நீர் வண்ணா போற்றி 60. ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி
61. ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி 62. ஓம் முற்ற இம் மண்ணளந்தாய் போற்றி 63. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி 64. ஓம் அரவிந்த லோசன போற்றி 65. ஓம் மந்திரப் பொருளே போற்றி 66. ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி 67. ஓம் குரு பரம்பரை முதலே போற்றி 68. ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி 69. ஓம் பின்னை மணாளா போற்றி 70. ஓம் என்னையாளுடையாய் போற்றி
71. ஓம் நலம்தரும் சொல்லே போற்றி 72. ஓம் நாரண நம்பி போற்றி 73. ஓம் பிரகலாதப்ரியனே போற்றி 74. ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி 75. ஓம் பேயார் கண்ட திருவே போற்றி 76. ஓம் ஏழு மாமுனிவர்க்கு அருளே போற்றி 77. ஓம் ஏமகூட விமானத்து இறைவா போற்றி 78. ஓம் ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி 79. ஓம் கல்மாரி காத்தாய் போற்றி 80. ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி
81. ஓம் வில்லியறுத்த தேவா போற்றி 82. ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி 83. ஓம் இனியாய் போற்றி 84. ஓம் இனிய பெயரினாய் போற்றி 85. ஓம் புனலரங்கா போற்றி 86. ஓம் அனலுருவே போற்றி 87. ஓம் புண்ணியா போற்றி 88. ஓம் புராணா போற்றி 89. ஓம் கோவிந்தா போற்றி 90. ஓம் கோளரியே போற்றி
91. ஓம் சிந்தாமணி போற்றி 92. ஓம் சிரீதரா போற்றி 93. ஓம் மருந்தே போற்றி 94. ஓம் மாமணி வண்ணா போற்றி 95. ஓம் பொன் மலையாய் போற்றி 96. ஓம் பொன்வடிவே போற்றி 97. ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி 98. ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி 99. ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி 100. ஓம் தயரதன் வாழ்வே போற்றி 101. ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி 102. ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி 103. ஓம் வள்ளலே போற்றி 104. ஓம் வரமருள்வாய் போற்றி 105. ஓம் சுதாவல்லி நாதனே போற்றி 106. ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி 107. ஓம் பத்தராவியே போற்றி 108. ஓம் பக்தோசிதனே போற்றி.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
Click to View Latest Web Stories
இதையும் படிக்கலாமே
Sri Lakshmi Narasimhar 108 Potri ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 108 போற்றி Narasimha மந்திரம் ஸ்லோகம் Narasimmar slogan pdf mp3 Jayanti Lord God shri
Like this: Like Loading...
Related