ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு சிறப்பான நாள்கள் இருக்கும். அதே போல் வியாழக்கிழமை ஸ்ரீ சீரடி சாய்பாபாவிற்கும், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கும் உகந்த நாளாக உள்ளது. ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும், சாய்பாபாவிற்கு விரதமிருந்து பூஜை செய்தால், அவரின் முழு ஆசியும் கிடைக்கும்.
பூஜை சாமான்கள் : மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, அக்ஷதை, பஞ்சபாத்திரம், உத்தரணி, மணி, கலசம் அல்லது பெரிய டம்ளரில் தீர்த்தம், அகர்பத்தி, தீப்பெட்டி, தீப ஆராதனைக்கு பசு நெய் அல்லது நல்லெண்ணெய், தேங்காய், பூ, பழங்கள், பிரசாதம் இவை எல்லாம் வைக்க இரண்டு பெரிய தட்டுகள், அவசியமென்றால் கை துடைக்க துணி வைத்துக் கொள்ளலாம்.
சீரடி சாய்பாபாவை மனதில் நினைத்து, ஒன்பது வியாழக்கிழமை விரதம் இருந்து இம்மந்திரத்தை உச்சரித்து பூஜை செய்து, தங்களால் முடிந்த காணிக்கையை பக்தியுடன், சீரடிக்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், பாபாவின் முழு அருளும் கிடைக்கும்.அதேசமயம் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யத்தையும் பெற்று நிம்மதியுடன் வாழ முடியும்.