Home கோவில்கள் அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Ramalingeswarar Temple, திம்மராஜம்பேட்டை

அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Ramalingeswarar Temple, திம்மராஜம்பேட்டை

அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Ramalingeswarar Temple, திம்மராஜம்பேட்டை

Arulmigu Ramalingeswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Ramalingeswarar Temple

அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

இராமலிங்கேஸ்வரர்

அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் தாயார்:

பர்வத வர்தினி

அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

வில்வ மரம்

அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

திம்மராஜம்பேட்டை

அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

12ம் நூற்றாண்டு இப்பகுதியில் வாழந்த போஜராஜன் ரங்கபதி ராஜய்யன் என்பவர் கோவிலை கட்டிள்ளார். இந்த மன்னன் இராமேஸ்வரத்திலுள்ள பர்வதவர்த்தினி இராமாநாதசுவாமி மேலே சிறந்த பக்தி கொண்டதால் இறைவன் மன்னர் கனவில் தோன்றி இங்கும் இராமேஸ்வரம் போல் கோயில் அமைக்குமாறு கூறியதாக ஸ்தல வரலாறு தெரிவிக்கிறது. இங்குள்ள மூலவர் இராமேஸ்வரத்தில் உள்ளது போன்று இருப்பதால் இராமலிங்கேஸ்வரர் எனப்பெயர் பெற்றதாக புராணம் கூறுகிறது. இங்கு மூலர் பின்புறத்தில் சோமஸ்கந்தர் மணக்கோலத்தில் அம்பிகையுடன் வீற்றிருக்கிறார். எனவே இக் கோயில் மிகச்சிறந்த
திருமணப்பிரார்த்தனை தலமாக இருக்கிறது. இது பித்தோரு தோஷ நிவர்த்தி தலமாகும். புரட்டாசி மாத மாளய அமாவசைக்கு சிறப்பு ஹோமம் மற்றும் தர்ப்பணம் நடைறுகிறது. இதில் பங்கேற்றால் பித்ருதோஷம் நிவர்த்தியாகும்.

இங்கு பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இங்குள்ள மூலவர் மீது மாசி மாத பௌணர்மி அன்று சூரிய ஒளி விழுகிறது. இந்த கோயிலில் இருக்கும் பர்வதவர்த்தினி அம்பாள் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ரூபமாக விளங்குகிறார். வணிக வரி செலுத்துவதற்காக கோவிலை, இப்பகுதியை ஆண்ட திம்மராஜ அரசனிடம் குத்தகைக்கு விடுத்தார். இப்பகுதியை சுற்றி திம்மம்பேட்டை, யக்கன்பேட்டை, நத்தப்பேட்டை, ஏகானாம்பேட்டை, ஜயம்பேட்டை என 18 பேட்டை கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த பேட்டை கிராமங்களுக்கு, தலைநகரமாக திம்மராஜம் பேட்டை விளங்கியது. மேலும், இப்பகுதியை ஆண்ட அரசன் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள முருகப்பெருமானை தனி சிறப்பாக வணணங்கியுள்ளான. இதனால், வெறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில் இங்கு முருகபபெருமானுக்கு பெரிய பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பு.

பித்ருகடன் செய்ய தவறியவர்கள் இங்கு, அதற்கான தர்ப்பனங்கள் செய்வது சிறப்பு. மேலும், காஞ்சி மாநகருக்கு வெளியே உள்ள கோவில்களில் தனி கொடிமரத்துடன் விளங்கும் சிவ ஆலயம் இது. பித்ருகடன் செலுத்தப்படுவதால், வட இராமேஸ்வரம் என அழைக்கப்படுகிறது. கோவில் இந்து அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளது.

அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

மாசி மாத பௌர்ணமி அன்று மூலவர் மீது சூரிய ஒளி படும்.

அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

மாசிமகம், கந்த சஷ்டி, நவராத்திரி மற்றும் ஆடிமுதல் வெள்ளி விளக்கு பூஜை, குருப்பெயர்ச்சி.

அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 7:00 மணி முதல்10:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

திருமண தடை நீங்கும், பிரதோஷகால வழிபாடு சிறப்பு வாய்ந்தது.

அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Ramalingeswarar Temple:

அருள்மிகு பர்வத வர்தினி அம்பாள் சமேத இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்
திம்மராஜம்பேட்டை,
காஞ்சிபுரம் 631502.

அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here