Home கோவில்கள் அருள்மிகு உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Uttara Vaithiyalingeswarar Temple, திருப்போரூர்

அருள்மிகு உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Uttara Vaithiyalingeswarar Temple, திருப்போரூர்

அருள்மிகு உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Uttara Vaithiyalingeswarar Temple, திருப்போரூர்

Arulmigu Uttara Vaithiyalingeswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Uttara Vaithiyalingeswarar Temple

அருள்மிகு உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

உத்திர வைத்தியலிங்கேஸ்வரர்

அருள்மிகு உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில் தாயார்:

தையல்நாயகி

அருள்மிகு உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

திருப்போரூர்

அருள்மிகு உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

தொண்டை மண்டலத்தின் அந்த வனப்பகுதியில், தவம் புரிவதற்காக வந்த அகத்தியர், அந்த இடத்தில் சிறிதளவும் தண்ணீர் இல்லாமல் இருந்ததை அறிந்தார். நித்தியப்படி பூஜைகளுக்காகவும் இந்த வழியே வருவோரின் தாகம் தணிப்பதற்காகவும் தண்ணீர் வேண்டி, சிவனாரைத் தொழுது முறையிட்டார். அவரின் கோரிக்கையை ஏற்ற சிவனார், அந்தத் திருவிடத்தில் தீர்த்தக் குளத்தை உருவாக்கியதுடன், திருமணக் கோலத்திலும் அகத்தியருக்கு காட்சி தந்தருளினார். இப்படி, திருக்காட்சி அருளியதாலும் வனமாகத் திகழ்ந்ததாலும் அந்தப் பகுதி காட்டூர் என்றானதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

ஒருகாலத்தில், மகரிஷிகளும் அந்தணர்களும் இங்கு வந்து தங்கி, வேதங்கள் ஒலிக்க, ஜபதபங்களில் ஈடுபட்டு, இறைவனின் பேரருளைப் பெற்றதால், இந்தத் தலத்துக்கு மறையூர் எனும் திருநாமமும் உண்டு. பாண்டிய மன்னர்கள் திருப்பணி செய்துள்ள ஆலயம், சிதம்பர சுவாமிகள் உள்ளிட்ட பலரும் வணங்கிய கோயில் எனப் பல பெருமைகள் கொண்டது, இந்தத் திருத்தலம்.

இந்த ஆலயத்தின் தீர்த்தக் குளத்தில் நீராடி, வைத்தியலிங்கேஸ்வரரையும் தையல்நாயகியையும் வணங்கித் தொழுதால், தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்! தீர்த்தக்குளத்தின் நீரை எடுத்துப் பருகினாலே, வியாதிகள் பறந்தோடிவிடும் என்கின்றனர் பக்தர்கள். திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்களும் பிள்ளைப் பாக்கியம் இல்லையே எனக் கண்ணீர் விடுபவர்களும் வியாபாரத்தில் அடுத்தடுத்த நஷ்டத்தால் அல்லல்படுபவர்களும் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டால், தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்; பிள்ளைச் செல்வம் கிடைக்கப் பெறுவர்;

நலிவுற்ற வியாபாரம் செழித்து விளங்கும் என்பது ஐதீகம்! கருவுற்ற பெண்கள், இங்கு வந்து தையல்நாயகியை மூன்று வெள்ளிக்கிழமைகள் நெய் தீபமேற்றி வழிபட்டால், சுகப்பிரசவம் உண்டாகும். கர்ப்பப்பைக் கோளாறுகள் நீங்கப் பெறுவர் என்பது நம்பிக்கை. சிதம்பரம் அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள், இங்கு வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதாகச் சொல்வர்.

அருள்மிகு உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலைப்போலவே இங்குள்ள ஆலயத்தின் தீர்த்தக் குளத்தில் நீராடி, வைத்தியலிங்கேஸ்வரரையும் தையல்நாயகியையும் வணங்கித் தொழுதால், தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்!

அருள்மிகு உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

பிரதோஷம், சிவராத்திரி

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

அருள்மிகு உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

கருவுற்ற பெண்கள் இங்குள்ள தையல்நாயகிக்கு மூன்று வெள்ளிக்கிழமைகள் நெய் தீபமேற்றி வழிபட்டால் சுகப்பிரசவம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அருள்மிகு உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அபிஷேகம் செய்து, விளக்கேற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

அருள்மிகு உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Uttara Vaithiyalingeswarar Temple:

அருள்மிகு உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில், மறையூர், திருப்போரூர், காஞ்சிபுரம்.

அருள்மிகு உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here