Home கோவில்கள் அருள்மிகு உத்திராபதி பசுபதியார் திருக்கோயில் – Arulmigu Uthirapathy Pasupathiyar Temple, ராதாவிளாகம்

அருள்மிகு உத்திராபதி பசுபதியார் திருக்கோயில் – Arulmigu Uthirapathy Pasupathiyar Temple, ராதாவிளாகம்

அருள்மிகு உத்திராபதி பசுபதியார் திருக்கோயில் – Arulmigu Uthirapathy Pasupathiyar Temple, ராதாவிளாகம்

Arulmigu Uthirapathy Pasupathiyar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு உத்திராபதி பசுபதியார் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Uthirapathy Pasupathiyar Temple

அருள்மிகு உத்திராபதி பசுபதியார் திருக்கோயில் மூலவர்:

உத்திராபதி பசுபதியார்

அருள்மிகு உத்திராபதி பசுபதியார் திருக்கோயில் தாயார்:

மாரியம்மன்

அருள்மிகு உத்திராபதி பசுபதியார் திருக்கோயில் தல விருட்சம்:

வில்வம், வேம்பு

அருள்மிகு உத்திராபதி பசுபதியார் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

ராதாவிளாகம்

அருள்மிகு உத்திராபதி பசுபதியார் திருக்கோயில் வரலாறு:

பிச்சாவரம் ஜமீன் பரம்பரை உறவினர்கள் இங்குள்ள கருவை முட்புதற்கள் சூழ்ந்த வனப்பகுதியில் வசித்தனர். அவர்களை காண ராதா ருக்மணி வந்தனர். அங்கு நீண்ட காலங்கள் வசித்து வந்ததால் ராதா வளாகம் என்று அழைக்கப்பட்டு தற்போது ராதா விளாகமாக மறுவியுள்ள இங்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு வசித்த கோவிந்தராஜ் செட்டியார் பட்டத்துடன் கூடியவர் மண் பாண்டம் செய்யும் தொழில் செய்துவந்துள்ளார்.

 இவரும், இவருடைய மனைவியும் சிவ பக்தர்களாக வசித்தனர். அவர்களின் கனவில் தோன்றிய சிவன் தனக்கு கோவில் கட்டி வழிபாடு செய்தால் சகல செல்வங்களையும் வழங்கும் நிலை ஏற்படும் என மாறு கூறி சிறிய கல் ஒன்றை கொடுத்து மறைந்துள்ளார்.

அந்தக் கல் லிங்க வடிவில் இருந்தால் ஊருக்கும் நடுவில் அந்தக்கல்லை வைத்து வழிபாடு செய்தார். கிராம மக்களும் வணங்கினர், சலக தோஷங்களும் நீங்கி அப்பகுதி மக்கள் விவசாயத்தில் செல்வ செழிப்புடன் வசிக்கின்றனர்.  கீற்றுக் கொட்டகையாகி பின் நாளில் ஓட்டு கட்டமாகி 1961 ம் ஆண்டுகாங்கிரிட் கட்டத்தில் காசி விஸ்வநாதரை போன்று தெற்கு முகம் பார்த்து ஸ்ரீ உத்திரா பசுபதியாராக அருள் பாலிக்கிறார். 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிேஷகம் நடக்கிறது.   புத்திர பாக்கியத்திற்கு சிறந்த கோவிலாக உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் திருமணமான அனைவரும் புத்திர பாக்கியத்துடன் வசிக்கின்றனர்.  முற்றிலும் கிராம நிர்வாகத்தின் கட்டுப் பாட்டில் கோவில் உள்ளது.

இது  ஒரு புறமிருக்க கோவிலில் அம்மன் இல்லாதால் அருகில் ஸ்ரீமாரியம்மன் சிரித்தநிலையில் கிழக்கு முகம் பார்த்து அருள் பாலிக்கும்  அம்மனுக்கு தனி சந்நதியில் ஒரு கலசத்துடன் கோவில் அமைந்துள்ளது.  சகல நிகழ்ச்சிகளுக்கும் இந்த அம்மனை அப்பகுதி மக்கள் வணங்கி செல்கின்றனர். அப்பகுதி சிறுவர்கள் சிறு தொண்டர் வரலாற்றை நாடமாக நடித்து வெளிபடுத்துகின்றனர்.

சிதம்பரம் நடராஜர், தில்லை காளி மற்றும் கீழத்தெரு மாரியம்மன் கோவில், ஸ்ரீ முஷ்ணம் பூவராக சுவாமி ஆலயத்தால் இக்கோவிலுக்கு பெருமையாக உள்ளது.

அருள்மிகு உத்திராபதி பசுபதியார் திருக்கோயில் சிறப்பு:

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் காலை நேரத்தில் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழுதல்

அருள்மிகு உத்திராபதி பசுபதியார் திருக்கோயில் திருவிழாக்கள்:

சிவராத்திரி, வினாயகர் சதுர்த்தி, ஏப்ரல் மாதம் பரணி நட்சத்திரத்தில் அமுது படையல் அதன் 21 ம் நாள் வீதியுலா, ஐப்பசி மாதம் அன்னாபிேஷகம், பங்குனி உத்திரம், கார்த்திகை, பிரதோஷம், நவராத்திரி உள்ளிட்டவை

அருள்மிகு உத்திராபதி பசுபதியார் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை முதல் 5.30 மணி முதல் பகல் 10.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

அருள்மிகு உத்திராபதி பசுபதியார் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

கல்வி, திருமணத்தடை, புத்திர பாக்கியம் மற்றும் சகல நோய்களையும் போக்கும் தன்மை கொண்டவராக விளங்குகின்றார்.

அருள்மிகு உத்திராபதி பசுபதியார் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

நெய் தீபம், பக்தர்கள் விருப்பத்திற்கு ஏற்ப.,

அருள்மிகு உத்திராபதி பசுபதியார் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Uthirapathy Pasupathiyar Temple:

அருள்மிகு உத்திராபதி பசுபதியார் கோயில்
ராதாவிளாகம், உத்தமசோழமங்கலம் அஞ்சல், அண்ணாமலை நகர் வழி, சிதம்பரம் வட்டம் 608 002

அருள்மிகு உத்திராபதி பசுபதியார் திருக்கோயில் கூகுள் மேப்:

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here