Arulmigu Kasiviswanathar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.
Details of Arulmigu Kasiviswanathar Temple
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் மூலவர்:
காசிவிஸ்வநாதர்
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் தாயார்:
விசாலாட்சி
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் தல விருட்சம்:
பன்னீர் புஷ்பம், மாவிலங்கம், கஸ்தூரி, அரளி, மற்றும் வில்வம்
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:
குழிக்கரை
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் வரலாறு:
சோழவளநாட்டின் சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவாரூக்கும் மேற்கே ஆறு கி.மீ., தொலைவில் குழிக்கரை கிராமம் உள்ளது. இப்பகுதியில் இரண்டாம் குலோத்துங்க சோழன் திருப்ணி செய்து அருள்பொழித் தேவவளநாடு என்று இவ்வூருக்கு தன் விருது பெயரான எதிரிலி சோழன் என்பதை எதிரிலி சோழபுரம் என இந்த ஊருக்கு சூட்டி மகிழ்ந்துள்ளான். அதன் பின் கி.பி., 1246-ல் ஆட்சி செய்த மூன்றாம் இராஜேந்திர சோழன் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்து தன் பெயரை சேர்த்து ஒட்டக்குடி இராஜேந்திர சோழபுரம் என பெயர் மாற்றம் செய்ததாக வரலாற்று செய்தி கூறுகிறது. இப்பகுதியில் இக்கோயிலும் இருப்பதால் சோழ வம்சத்தினர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. அப்பகுதி சொக்கப்ப முதலியார் (செல்வந்தர்) மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. தோல் நோயால் பாதிக்கப்பட்ட முத்துசாமி தீட்சிதர் கடை காலத்தில் இங்குள்ள திருக்குளத்தில் குளித்து பன்னீர் புஷ்பம் கொண்டு வழிபாடு நடத்தியதால் தோல் நோய் நீங்கி குணமடைந்ததால் இக்கோயில் குறித்து பாடல் பாடியுள்ளார். தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். மேலும் அப்பகுதியில் ஆறு சிவத் தலங்கள் இருப்பது இக்கோயிலுக்கும் சிறப்பு சேர்க்கிறது.
சோழ மன்னர்கள் வம்சத்தினர்கள் கட்டிய 108 சிவலத்தலங்களில் இதுவும் ஒன்று. முத்துசாமி தீட்சிதரால் பாடல் பெற்ற ஸ்தலம் தற்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாடில் உள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோயில் போன்று நவக்கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் மேற்கு பக்கம் பார்த்துள்ளன. தோல் நோய் தீர்க்கும் பரிகார ஸ்தலம். மகா மண்டபத்தில் பிரதோஷம் செய்யும் இடத்தில் மேல் தளத்தில் மனித பிறவி எத்தனை இருக்கும் என்பதை செடி, கொடி, புழு மற்றும் பூச்சி பிற பிறவிகள் பின்னே மனிதப்பிறவி அதில் சிறப்பாக இருந்தால் இறைவனுடன் கலப்பதை விளக்கும் மூலிகை படம் கடந்த பல ஆண்டுகளாக அழியாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் சிறப்பு:
திருவாரூர் தியாகராஜர் கோயில் போன்று நவக்கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் மேற்கு பக்கம் பார்த்துள்ளன என்பது சிறப்புக்குரியவையாகும்.
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் திருவிழாக்கள்:
பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், மாசிமகம், சிவராத்திரி மற்றும் பங்குனி உத்திரம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும் மாலை 4 மணிமுதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:
தோல் நோய்க்கான பரிகார ஸ்தலம். சகல ஐஸ்வர்யங்களுக்கும், திருமணத்தடை மற்றும் புத்திர பாக்கியத்திற்கு பிரார்த்தனை செய்யும் ஸ்தலமாதலால் பக்தர்கள் வந்து பிரார்த்திக்கின்றனர்.
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:
வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கோயிலில் நடைபெறும் அன்னாபிஷேகத்தில் பங்கேற்று அதற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கின்றனர்.
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Kasiviswanathar Temple:
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், குழிக்கரை மற்றும் அஞ்சல், குடவாசல் தாலுகா, திருவாரூர் – 613704
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் கூகுள் மேப்: