Home கோவில்கள் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் – Arulmigu Kasi Vishwanathar Temple, சின்னையா சத்திரம்

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் – Arulmigu Kasi Vishwanathar Temple, சின்னையா சத்திரம்

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் – Arulmigu Kasi Vishwanathar Temple, சின்னையா சத்திரம்

Arulmigu Kasi Vishwanathar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Kasi Vishwanathar Temple

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் மூலவர்:

காசி விஸ்வநாதர்

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் தாயார்:

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் தல விருட்சம்:

மகிழ மரம்

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

சின்னையா சத்திரம்

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் வரலாறு:

சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடி விநாயகர் கோயிலுக்கு பாத யாத்திரையாக வந்தார் காஞ்சிப்பெரியவர். வரும் வழியில் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள சின்னையா சத்திரத்தில் பக்தர் ஒருவரது வீட்டில் தங்கினார். பெரியவரிடம் அந்த பக்தர், ‘தனக்கு நீண்டகாலமாக குழந்தைப்பேறு வாய்க்கவில்லை’ என வருந்தினார். காசி விஸ்வநாதர், விசாலாட்சிக்கு கோயில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என அருள்புரிந்தார் பெரியவர். அதனடிப்படையில் இங்கு விஸ்வநாதர் கோயில் கட்டப்பட்டது. காஞ்சிப்பெரியவர் தங்கிய வீடு கோயிலுக்கு அருகில் உள்ளது.

கோயிலைச் சுற்றியுள்ள 18 பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்களின் இல்ல
சுபநிகழ்ச்சிகளான நிச்சயதார்த்தம், திருமணம், பெயர்சூட்டுதல் போன்ற
சுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்துகின்றனர்.காசி தரிசனம்: குழந்தைப்பேறு இல்லாதவர்கள் காசியாத்திரை சென்று, மூன்று நாட்கள் கங்கையில் நீராடி விஸ்வநாதர், விசாலாட்சியை தரிசித்தால் தோஷம் நீங்கும். அதற்குரிய வசதி, வாய்ப்பு இல்லாதவர்கள் இக்கோயிலை தரிசித்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் சிறப்பு:

காஞ்சிப்பெரியவரால் நடப்பட்ட மகிழமரம் தலவிருட்சமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் திருவிழாக்கள்:

தமிழ்ப்புத்தாண்டன்று வருஷாபிஷேகம், திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை: 7.30 மணி முதல் 10 மணி வரை மாலை: 4.30 மணி முதல் 7 மணி வரை.

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

குழந்தை பாக்கியம், திருமண தடை உள்பட சகல விதமான பிராத்தனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

விஸ்வநாதரின் அருளால் குழந்தைப்பேறு அடைந்தவர்கள் முடிக்காணிக்கை செலுத்துகின்றனர்.

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Kasi Vishwanathar Temple:

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்
சின்னையா சத்திரம், புதுக்கோட்டை

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here