ஆண்டாள் தேவி என அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருக்கும் இந்த திருப்பாவை அருளிய கோதை நாச்சியாரின் மந்திரம் இது. ஆண்டாள் ஸ்லோகத்தை தினமும் அல்லது மார்கழி மாதம் முழுவதும் பாராயணம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் ஆகும், திருமணமான தம்பதியர்களுக்கு இடையே ஏற்படும் மனக் கசப்புகளும் குடும்ப சூழ்நிலையின் காரணமாக வரும் கஷ்டங்களும் நீங்கி நன்மை தரும் இல்லற வாழ்வை மேம்படுத்தும் ஆண்டாள் ஸ்லோகம் இதோ….
Andal slokas – ஆண்டாள் ஸ்லோகம்
அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்
அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:
தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா
தந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:
கோதா ஸ்துதி
பொருள்:
ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாத்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம். ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார். தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்? அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான். அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய். அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார். அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம்.
இதையும் படிக்க:
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]