Homeகோவில்கள்அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் - Arulmigu Amirthakadeswarar Temple, சேலையூர் கேம்ப்

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Amirthakadeswarar Temple, சேலையூர் கேம்ப்

Arulmigu Amirthakadeswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Amirthakadeswarar Temple

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

அமிர்தகடேஸ்வரர்

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் தாயார்:

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

சேலையூர் கேம்ப்

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

1970-ல் காஞ்சி மகாபெரியவர் சென்னை விஜயம் செய்தபோது இவ்வூரில் பழங்காலச் சிலைகள் புதைந்துள்ளன. அவற்றைக்கண்டு பிடித்துக் கோயில் கட்டுங்கள் என்று அருளாசி வழங்கக் கிடைத்ததுதான் இத்திருக்கோயில். இக்கோயில் இருந்த இடம் முன்னர் மண்மேடாக இருந்தது. அதை அகற்றும்போது அமிர்தகடேஸ்வரர் மூல விக்கிரகம் கிடைத்தது. அருகில் இருக்கும் முத்தாலம்மன் கோயிலிலும் அச்சமயம் பல சிலைகள் கிடைத்தன. அதில் அன்னை அபிராமியின் விக்கிரகமும் கிடைத்தது. சிலைகள் பல கிடைத்தமையால் சிலையூர் என வழங்கப்பட்டுவந்த இந்த ஊர். நாளடைவில் சேலையூராக மாறிவிட்டது 1972-ஆண் ஆண்டு கிராமப் பெரியோர்களால் முதலில் அபிராமி அம்மன் கோயிலும், அமிர்தகடேஸ்வரர் கோயிலும் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாசி மகத்தன்று 18 நதிகளின் புனித நீர் கொணரப்பட்டு, ஹோமங்கள் வளர்த்து, 18 குடங்களில் உள்ள தீர்த்தத்தால் 18 நதி தேவதைகளுக்கும் தனித்தனியாக பூஜை செய்து, பின்னர் இந்த 18 நதி நீரை திருக்குளத்தில் கலக்கிறார்கள். இதன்பின்னரே பக்தர்கள் 18 நதிகளிலும் தனித்தனியாக கொட்டும்  தீர்த்தத்தில், வரிசையாக குளத்தைச் சுற்றி நீராடுகிறார்கள். நிறைவாக 18 நதி நீரும் கலந்துள்ள இந்தத் திருக்குளத்தில் நீராடுகிறார்கள். பின்னர் சிவனையும் அம்பாளையும் வணங்கி அர்ச்சனை செய்தல் சிறப்பு. ஸ்நானம் செய்ய இயலாத பக்தர்கள் தலையில் இந்த நதி நீரை ப்ரோக்ஷித்துக் கொள்ளலாம். திருக்கடையூரில் நடைபெறும் சஷ்டியப்த பூர்த்தி ஹோமம் போன்று இங்கும், மாதத்துக்கு நான்கு ஐந்து சஷ்டியப்த பூர்த்தி ஹோமங்களை அவரவர் வசதிக் கேற்ப எளிமையாக நடத்துகிறார்கள்.

அபிராமிக்குச் சிறப்பானது தை அமாவாசை. அன்று, மாலை 4.30-5 க்குள் அபிராமி அந்தாதி பாட ஆரம்பிப்பார்கள். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் கூடை புஷ்பம் அம்பாளுக்கு அபிஷேகமாகச் சமர்ப்பிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். பாராயண நிறைவில் அம்மனுக்கு 9 வகையான பதார்த்தங்கள் நைவேத்யம் செய்விக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அன்னை மிகச்சிறந்த வரப்பிரசாதி. இங்குள்ள அம்பாள் ஒரு அடியை முன்னே எடுத்துவைத்து நமக்கு அருள்வதுபோல் இருக்கும் காட்சி ஒரு சிறப்பம்சம். அம்பாளை ஒருதரம் பிரதக்ஷிணம் வந்தாலே, ÷ஷாடச மண்டபத்தில் அமைத்திருக்கும் ÷ஷாடச லக்ஷ்மிகளையும் வலம் வந்த பலன், வெள்ளிக் கிழமைகளில் இந்த ÷ஷாடச லக்ஷ்மிக்கு சிறப்பு அர்ச்சனையும் உண்டு.

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

இங்கு சுவாமியும், அம்பாள் இருவருமே சுயம்பு என்பது சிறப்பு

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

மாசி மகம், சிவராத்திரி, அமாவாசை, ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம்.

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Amirthakadeswarar Temple:

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
சேலையூர் கேம்ப், சென்னை.

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


இதையும் படிக்கலாமே

Latest

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular