அருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:
புங்கனூர்
அருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு:
800 ஆண்டுகளுக்கும் பழமையான இந்தக் கோவிலில், உமாமகேஸ்வரி சமேத ஆத்மலிங்கேஸ்வரர் வீற்றிருக்கிறார். காஞ்சிப்பெரியவர் 70 ஆண்டுகளுக்கு முன் புங்கனூர் வந்தபோது பக்தர்களிடம், இந்த ஊரில் புராதன சிவன் கோயில் இருக்கிறது. அதை உடனே தரிசிக்க வேண்டும், என்று சொல்ல அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் தேட முற்பட்டபோது, சிதிலமடைந்த நிலையிலிருந்த ஆத்மலிங்கேஸ்வரர் கோயிலைக் கண்டனர். கோயிலுக்கு வந்த காஞ்சிப்பெரியவர், சிவனை வழிபட்டதோடு,இன்னும் பல சிவலிங்கங்கள் இப்பகுதியில் இருக்கலாம், என்றும் கூறினார்.
புங்கனூர் சிவன், சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். தெய்வீக சக்தி தானாக வெளிப்படும் இடத்திலேயே சுயம்பு மூர்த்தியாக இறைவன் எழுந்தருள்வதாக ஐதீகம். இவர் ஆத்மஞானத்தை வழங்குபவராக இறைவன் திகழ்கிறார். அம்பிகையின் திருநாமம் உமாமகேஸ்வரி. உலக வாழ்வுக்கு இகபர சவுபாக்கியத்தை தந்தருள்கிறார். சிவனுக்குரிய பிரதோஷ வேளையில் இங்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தடைகள் நீங்கி குடும்பத்தில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும்.