Arulmigu Kailasanathar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.
Details of Arulmigu Kailasanathar Temple
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் மூலவர்:
கைலாசநாதர்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தாயார்:
–
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தல விருட்சம்:
–
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:
அரிதாரிமங்கலம்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு:
இப்பரந்த உலகத்தை ஒரு தேவாலயமாகக் கருதினால் திருவண்ணாமலை தலத்தை அதன் கருவறையாகக் கொள்ளலாம். அருணாசல மலையே அக்கருவறையிலுள்ள சிவலிங்கம் ஆகும். முழுமுதற்கடவுளான பரமசிவனே அருணாசலமாக அமர்ந்திருக்கிறார். நான்முகனுக்கும் திருமாலுக்கும் அக்னி மலையாகக் காட்சி தந்த ஞானகுரு, உலகம் உய்யும்பொருட்டு கோதிர் லிங்க வடிவமாய்த் தரிசனம் தந்து கொண்டிருக்கிறார். திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி. சிதம்பரத்தை பார்த்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி.
ஒரு சமயம் படைக்கும் கடவுளான பிரம்ம தேவனுக்கும் காத்தல் கடவுளான மகா விஷ்ணுவுக்கும் இடையே யார் பெரியவர்? என்ற சர்ச்சைக்கு விடை காண திருவுளம் கொண்டார் முழுமுதற் கடவுளான பரமேச்சுவரன். ஒரு பிரம்மாண்டமான அக்னி மலையாக ஓங்கி நின்றார். இம்மலையினுடைய முடியையும் அடியையும் யார் முதலில் கண்டு பிடிக்கிறார்களோ அவறே பெரியவர் என்று பிரும்மாவும் திருமாலும் தங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டார்கள். அதன்படி பிரும்மா அன்னப் பறவையாகவும், மகாவிஷ்ணு வராகமாகவும் உருவெடுத்துக் கொண்டு அம்மலையின் முடியையும், அடியையும் தேடிப் புறப்பட்டனர். விஷ்ணு அடிமுடியை காணாமல் திரும்பி வந்துவிட இந்த அரிதாரமங்கலத்தில் தங்கியதாக வரலாறு.
அதைத் தவிர சப்த கைலாய ÷க்ஷத்திரத்தில் ஒன்றான அரிதாரமங்கலம், செய்யாற்றின் கரையில் உள்ளது. உத்தர வாகினியான செய்யாற்றின் கரையில் சப்த கைலாய ÷க்ஷத்திரங்கரும் சப்த கரைகண்ட ÷க்ஷத்திரங்களும் உள்ளது. இறைவனை மனம்முடிந்த காஞ்சியிலிருந்து திருவண்ணாமலை வந்துகொண்டிருந்த அன்னை பார்வதிதேவிக்கு தண்ணீர் தாகம் எடுக்க, தன் மைந்தனான முருகனிடம் தண்ணீர் கேட்க முருகனும் தண்ணீர் மலையை நோக்கி அம்பு எய்ய அம்பானது அங்கு தவம் செய்து கொண்டிருந்த ஏழு ரிஷிகளின் தலையை கொய்து, தீர்த்த மலையை அடைய, தீர்த்த மலையிலிருந்து அந்த தண்ணீரில் அவர்களது உதிரம் கலக்க தண்ணீர் சிகப்பாக மாற, பின் செய்யாறு என்ற நதியானது சிகப்பாக இருப்பதாலும். முருகன் என்ற சேயியால் உண்டாக்கப்பட்டதாலும் செய்யாறு என்றும் பெயர் பெற்றது.
ஏழு ரிஷிகளின் நிலையைக் கண்ணுற்ற தவற்றுக்கு வருந்தி இறைவனை நோக்கி தவஞ்செய்ய, இறைவனும் உன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் போக ஏழு லிங்கங்களை செய்யாற்றின் கரையில் பிரதிஷ்டை செய்து வழிபடு என்று சொல்ல, முருகனும் ஏழு இடங்களில் சிவனை பிரதிஷ்டை செய்ய, அதுதான் சப்த கரைகண்ட ÷க்ஷத்திரமாயிற்று. அதேபோல் பார்வதிதேவியும் மனம் வருந்தி தன்னால் தான் தன்குழந்தைக்கு இந்தநிலை வந்தது என இறைவனிடம் வேண்ட, இறைவனும் நீ ஏழு இடங்களில் லிங்கத்தை வைத்து வழிபடு என பணிக்க, அந்த ஒரு இடங்களிலும் சப்த கைலாச சேத்திரமாயிற்று. அரிதாரமங்கலம் செய்யாற்றின் கரையில் இருப்பதாலும், இறைவன் இறைவி திருநாமம் பெரியநாகி, கைலாசநாதர், இருப்பதாலும் இதுவும் கைலாச ÷க்ஷத்திரமாக கருதப்படுகிறது.
கைலாசநாதர் மிக மிக அழகானத் தோற்றத்துடன் மிகவும் சாந்நித்தியம் நிறைந்தவராகவும் காணப்படுகிறார், இறைவி பெரியநாயகி என்கிற ப்ரஹன் நாயகி மிக மிக வசீகரத் தோற்றத்துடன் பார்பவர்களை கொள்ளைக் கொள்ளும் அழகுடனும், மிகவும் சாந்தமாகவும். வேண்டும் வரங்களையெல்லாம் உடனே அருளுபவளாகவும் வீற்றிருக்கிறார். மகாவிஷ்ணு இங்கு தங்கி எல்லாருக்கும் மஙகளத்தை வாரி வழங்குவதாலும் அரிதாரமங்களம் என பெயர்பெற்றது.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சிறப்பு:
இது சப்த கைலாய சேத்திரம்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் திருவிழாக்கள்:
சிவராத்திரி, பவுர்ணமி, பிரதோஷம்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை மணி முதல் மணி வரை, மாலை மணி முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:
திருமணம் தடை நீங்கவும், குழந்தை பேறு கிட்டவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:
நான்கு ஞாயிற்றுக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Kailasanathar Temple:
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அரிதாரிமங்கலம் செங்கம் வட்டம் திருவண்ணாமலை.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கூகுள் மேப்: