Homeகோவில்கள்அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் - Arulmigu Kailasanathar Temple, ராஜபதி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் – Arulmigu Kailasanathar Temple, ராஜபதி

Arulmigu Kailasanathar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Kailasanathar Temple

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் மூலவர்:

கைலாசநாதர்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தாயார்:

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

ராஜபதி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு:

அகத்திய முனிவரின் முதல் சீடர் உரோமச முனிவர். தாம் ஜீவன் முக்தி அடைவதற்காக சிவபெருமானை நோக்கி கடுந்தவம் மேற்கொண்டார். தவத்தை மெச்சிய பெருமான் அவர் முன் தோன்றி “குருவருள் பெற்று உய்க ” என உபதேசித்தருளினார்.

உடனே தம் பரம குருவாகிய அகஸ்தியரை அணுகி விபரங்களை எடுத்துரைத்தார். அதைச் செவிமடுத்த அகஸ்தியர், “பொருநையாற்றில் (தற்போது தாமிரபரணி) யாம் ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடுகிறோம். அம் மலர்கள் நீரோட்டத்தில் பயணித்து எங்கெங்கெல்லாம் ஒதுங்குகிறதோ அங்கு நவகிரக வரிசையில் சிவ லிங்கத்தை நிறுவி வழிபட்ட பின் பொருநையாறு கடலோடு கலக்குமிடத்தில் நீராடி ஜீவன் முக்தி பெறுவீர். உம்மால் நிறுவப்படும் இறைவன் கைலாச நாதர் எனவும் இறைவி சிவகாமி எனவும் அழைக்கப் படுவார்கள்” என அருளுரைத்தார்.

முதல் தாமரை மலர் பாப நாசத்தில் தொடங்கிசேரன்மகாதேவி,
கோடக நல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுந்தம், தென்திருப்பேரை, இராஜபதி, சேர்ந்த பூ மங்கலம் என ஒன்பது தலத்தில் தாமரை மலர்கள் ஒதுங்கி நின்றன. அகஸ்திய முனிவரின் ஆணைப்படி அத்தலங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன், கேது, சுக்கிரன் ஆகிய நவகிரக வரிசையில் சிவலிங்கங்களை நிறுவி வழிபட்ட பின் தாமிரபரணி நதி கடலோடு கலக்குமிடத்தில் நீராடி ஜீவன் முக்தி அடைந்தார். உரோமசர் நிறுவி வழிபட்ட தலங்கள்
நவகைலாயம் என அழைக்கப்படுகின்றன.

அவ்வாறு மிதக்க விடப்பட்ட தாமரை மலர்களில் எட்டாவது மலர் மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இருந்த இப்பகுதியில் ஓதுங்கியது. ராஜாவின் அரண்மனை இங்கு இருந்ததால் இவ்வூர் இராஜபதி எனப் பெயர் பெற்றது.

அங்கே சிவலிங்கத்தை நிறுவி பூஜை செய்தார். பின் அந்த இடத்தில் சந்திரகுல பாண்டிய மன்னன் கோயில் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

சுமார் 400 ஆண்டுகட்கு முன் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் இக்கோயில் அழிந்து போயிற்று. நவகைலாயத்தில் இது கேது பகவான் வணங்கிய தலம். அழிந்த கோயிலைப்பற்றிய தாக்கம் நீண்ட நாட்களாக அப்பகுதி சிவனடியார்கள் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. சிவனடியார்கள் ஒன்றுகூடி சிறப்பான ஓர் கோயிலை அந்த இடத்திலேயே எழுப்புவதற்கு முடிவெடுத்து அதற்கென ஒரு குழுவை அமைத்தனர். சிவனடியார்களின் பெருமுயற்சியாலும், பங்களிப்புடனும் அழிந்து போன இப் புனித ஸ்தலம், 2008 ம் ஆண்டு திருப்பணி தொடங்கி அழகிய வடிவமைப்பில் கட்டப்பெற்றுள்ளது. இதன் கும்பாபிஷேகம் 2011ல் நடந்தது. இத்தனை பெருமைகளைக் கொண்ட இந்த சிவன் கோயிலிற்கு ஒரு ராஜகோபுரம் இல்லையே என்பது இங்கு வரும் பக்தர்களின் மனக்குறையாகவே இருந்தது. கோவில்பட்டி திருச்சிற்றம்பலம் அறக்கட்டளை சிவனடியார்கள் முயற்சியால் “கைலாஷ் டிரஸ்ட்” அமைப்பின் மூலம் 7 நிலை ராஜ கோபுரம் அமைக்கும் பணி நிறைவடைந்து 14.06.19 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது

தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம்
கோவை

இங்கு “நித்ய அக்னி” எனப்படும் விநாயகர், கைலாச நாதர், அம்பாள் ஆகியோருக்காக மூன்று கலசங்கள் வைத்து தினசரி யாகம் நடத்தி பூஜைகளும் ஆராதனைகளும் நடப்பது சிறப்பாகும். பொதுவாக ஈசனுக்கு முன் தீபாராதனை மட்டும் காட்டுவர். ஆனால் இங்கு ஈசனைச் சுற்றிலும் பஞ்ச தீபாராதனை காட்டுகின்றனர். காரணம் ஈசனுக்கு ஈசானம் தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம் அகோரம் என ஐந்து முகங்கள் உண்டு என்பதால், நெல்லிமரம் தலவிருட்சமாகவும் பாலாவி தீர்த்தமாகவும் விளங்குகிறது.

ஞாயிறு பகல் 12 மணிமுதல் 1.30 வரையிலும் செவ்வாயன்று காலை 9.00 முதல் 10.30 மணி வரை நடக்கும் பரிகார பூஜைகளில் பங்கு பெறுவதன் மூலம் கிரக தோஷங்கள் நீங்குகின்றன. கால சர்ப்ப தோஷம், திருமண தடை, பிதுர் தோஷம் ஆகியவற்றுக்கு சிறந்த பரிகார ஸ்தலம். ஈசனுக்கு “ஆஷூதோஷ” என்ற திருநாமமும் உண்டு. அதன் பொருள், “எதை விரும்பி ஈசனிடம் கேட்கிறோமோ அதை முழு மனதுடன் ஆனந்தமாக வழங்குவார்” என்பதாகும். கலியுகத்தில் சிவபெருமானுக்கு பூஜை செய்வதைத் தவிர வேறு எந்த வழியும் தோஷ நிவர்த்திக்கு இல்லை என்பது வேத ஆகம விதிகளில் காணப்படும் நியதி ஆகும்.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சிறப்பு:

இத்தலம் நவகைலாயங்களில் கேது தலமாகும். தமிழகத்தில் வேறு எங்கும் காணப்படாத கண்ணப்ப நாயனாருக்கென தனிச் சன்னதி உள்ளது. இச்சிலையின் உயரம் 4 1/2 அடி மிருகசீரிட நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இங்கு நடந்து வருகின்றன. பொதுவாக சிவன் கோயில்களில் நவகிரக சன்னதி இருக்கும். மாறாக இங்கு நவலிங்க சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால் இதை தென் காளஹஸ்தி எனச் சொல்லப்படுகிறது

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் திருவிழாக்கள்:

திருவாதிரை, சிவராத்திரி,மாதபிறப்பு, ,பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, கிருத்திகை, சஷ்டி, கார்த்திகை
சோம வாரம் அன்று 108 சங்காபிஷேகம், ஐப்பசி பவுர்ணமி அன்று அன்னாபிஷேகம் என சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
நடைபெறுகின்றன. அம்பாள் சன்னதியில் நவராத்திரி கொலுவும் மகாசிவராத்திரியன்று இரவு முழுவதும் பூஜை, உட்பிரகார உலாவும் நடைபெறுகின்றன.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 7.00 முதல் 12.00 வரை, மாலை 4.00 முதல் 8.00 வரை. ஞாயிறன்று மதியம் 1.30 மணி வரை.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

நவகிரகத்தில் எந்த கிரக தோஷம் இருக்கிறதோ அந்த கிரக லிங்கத்திற்கு பக்தர்களே தங்கள் கைகளால் அபிஷேகம் பூஜை செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ள தமிழகத்தில் உள்ள ஸ்தலம் இது தான். குறிப்பாக கேது தோஷம் இருப்பவர்கள் இத்தலத்தில் உள்ள கைலாச நாதரை வேண்ட தோஷம் நிவர்த்தி ஆகின்றது. அரசர்கள் ஆண்ட காலத்தில், கேதுவின் அம்சமான இத்தல ஈசனை வணங்கியே போரில் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.

மரணபயம், நரம்புசம்பந்தப்பட்ட நோய்கள், குடும்ப சண்டை சச்சரவுகள் ஆகியவற்றிக்கு இத்தலத்தில் வேண்டுதல் செய்ய நிவர்த்தியாகி விடுவதாக பலன் பெற்றோர் தெரிவிக்கின்றனர். அடியார்களும் மிகுந்த நம்பிக்கையுடன் இத்தலத்திற்கு வருகின்றனர்.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

சிவனுக்கும் அம்மனுக்கும் அபிேஷகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Kailasanathar Temple:

அருள்மிகு கைலாச நாதர் திருக்கோயில்
ராஜபதி- 628 207
துாத்துக்குடி மாவட்டம்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular