Home கோவில்கள் அருள்மிகு கருத்தீஸ்வரன் திருக்கோயில் – Arulmigu Karutheeswaran Temple, பாப்பான்குளம்

அருள்மிகு கருத்தீஸ்வரன் திருக்கோயில் – Arulmigu Karutheeswaran Temple, பாப்பான்குளம்

அருள்மிகு கருத்தீஸ்வரன் திருக்கோயில் – Arulmigu Karutheeswaran Temple, பாப்பான்குளம்

Arulmigu Karutheeswaran Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு கருத்தீஸ்வரன் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Karutheeswaran Temple

அருள்மிகு கருத்தீஸ்வரன் திருக்கோயில் மூலவர்:

கருத்தீஸ்வரன்

அருள்மிகு கருத்தீஸ்வரன் திருக்கோயில் தாயார்:

அழகம்மை

அருள்மிகு கருத்தீஸ்வரன் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு கருத்தீஸ்வரன் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

பாப்பான்குளம்

அருள்மிகு கருத்தீஸ்வரன் திருக்கோயில் வரலாறு:

ராமர், வனவாசத்தின்போது அத்ரி மகரிஷி – அனுசுயாதேவியின் ஆசிகளைப் பெறுவதற்காக திரிகூட மலைப்பகுதிக்கு வந்தார். பதிவிரதா தன்மையில் தலைசிறந்த அனுசுயா தேவி, தங்கள் தபோவனத்திற்கு வந்த சீதையை நகைகளால் அலங்கரித்து மகிழ்ந்தாள். அதன்பின் அப்பகுதியின் இயற்கை எழிலை ரசித்தவாறே நடந்தார் ராமபிரான். மாலைவேளை வந்ததையும் மறந்து அந்த சூழலில் லயித்தார். சந்தியா வந்தனம் செய்யும் நேரம் அது என்பதை அத்தலத்தில் லிங்க வடிவில் தோன்றிய ஈசன், அசரீரியாக ராமனுக்கு உரைத்தார். இப்படிக் கருத்தினை உணர்த்தியதால் இறைவன் கருத்தீஸ்வரன் எனப் பெயர் பெற்றார். ராமனின் சித்தம் அறிந்து உரைத்ததால், சித்தநாதீஸ்வரர் என்று வடமொழியில் கூறுகின்றனர். ராமனின் பாதம் பதிந்த பாறையை, இவ்வூரில் உள்ள ராமசுவாமி கோயிலில் வைத்து வழிபடுகின்றனர். அன்னை அழகிய வடிவுடன் அருள்வதால் தமிழில் அழகம்மை என்றும், வடமொழியில் சவுந்தர்ய நாயகி எனவும் அழைக்கின்றனர்.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னன் ஆதித்தவர்மனால் இக்கோயிலின் திருப்பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. நெற்கட்டும் செவல் மன்னனான பூலித்தேவன், இப்பகுதியில் உள்ள நெற்கட்டும் பாறையில் தங்கி கருத்தீஸ்வரனையும் அழகம்மையையும் வழிபட்டுள்ளான். இங்கு விளையும் நெல் மற்றும் தானியங்களை தல இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபட்ட பின்னரே மக்களுக்கு வழங்கினான். இப்பகுதியில் விளையும் தானியங்களுக்குக் கப்பம் கட்டவேண்டும் என, பூலித்தேவனை ஆங்கிலேயர் நிர்ப்பந்தம் செய்தனர். அந்நியருக்குக் கப்பம் கட்ட மறுத்தான், பூலித்தேவன். ஆங்கிலேயப் படை அவனைக் கைது செய்து சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்றது. கருத்தீஸ்வரரை நோக்கி முறையிட்டான் பூலித்தேவன். நெற்கட்டும் பாறைக்கு நிகரில்லை என்றிருந்தேன்; பொய்க் கட்டாய்க் கட்டி வீதியிலே போகவிட்டான் சண்டாளன்! கருத்தலிங்கம் உனக்குச் சம்மதம் தானா? என்று கருத்தீஸ்வரனை அவன் கேட்க, மறுநிமிடமே பூலித்தேவனின் கைவிலங்குகள் ஈசன் அருளால் தெறித்தன. கட்டியிருந்த இரும்புச் சங்கிலிகள் தகர்ந்து விழுந்தன. இது மாயவித்தை என நினைத்து பயந்து ஓடியது, ஆங்கிலேயர் படை.

அருள்மிகு கருத்தீஸ்வரன் திருக்கோயில் சிறப்பு:

சந்தியா வந்தனம் செய்யும் நேரம் நெருங்கியதை அசரீரியாக ராமனுக்கு உரைத்து கருத்தினை உணர்த்தியதால் கருத்தீஸ்வரன் என சிறப்புப்பெயர் பெற்றார்.

அருள்மிகு கருத்தீஸ்வரன் திருக்கோயில் திருவிழாக்கள்:

பிரதோஷம், சோமவார வழிபாடு, நவராத்திரி விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

அருள்மிகு கருத்தீஸ்வரன் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு கருத்தீஸ்வரன் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

இத்தலத்தில் வழிபடுவோர் மனக்கவலைகள் நீங்கவும்; திருமணத் தடைகள் விலகவும், மணப்பேறு கைகூடிட பெண்கள் அழகம்மையை வழிபடுகின்றனர்.

அருள்மிகு கருத்தீஸ்வரன் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள இறைவனுக்கு பால்அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

அருள்மிகு கருத்தீஸ்வரன் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Karutheeswaran Temple:

அருள்மிகு கருத்தீஸ்வரன் திருக்கோயில், கடையம், பாப்பான்குளம், திருநெல்வேலி மாவட்டம்.

அருள்மிகு கருத்தீஸ்வரன் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here