Arulmigu Kayaroganeswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.
Details of Arulmigu Kayaroganeswarar Temple
அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் மூலவர்:
காயாரோகணேஸ்வரர்
அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் தாயார்:
–
அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:
–
அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:
காஞ்சிபுரம்
அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் வரலாறு:
புண்டரீக மகரிஷி, சிவபெருமானை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார். அவருடைய தவத்தை ஏற்ற சிவன், வேண்டிய வரத்தை தருவதாக வாக்களித்தார். மகரிஷி சிவனிடம், ஐயனே! மனிதனின் உயிர் மட்டுமே முக்தி இன்பம் (பிறவாநிலை) பெறும். உடலோ மண்ணோடு மண்ணாகி விடும். நான் உயிரால் மட்டுமல்ல, உடம்போடும் முக்தி பெற விரும்புகிறேன். தாங்கள் எனக்கு அந்த பாக்கியத்தை அருள வேண்டும், என்று கேட்டார். சிவனும் அவருடைய காயத்தை (உடம்பை) தன்னோடு தழுவி ஏற்றார். இதனால் காயாரோகணேஸ்வரர் என்று பெயர் பெற்றார். காயம்+ஆரோகணம்+ஈஸ்வரர் என்று இந்தச்சொல்லைப் பிரிக்கலாம். காயம் என்றால் உடம்பு. ஆரோகணம் என்றால் தழுவுதல். ஈஸ்வரர் என்றால் சிவன். பக்தனை உடலோடு தழுவிய சிவன் என்பதே சமஸ்கிருதத்தில் காயாரோகணேஸ்வரர் ஆயிற்று. கோயிலுக்கு தெற்கில் காயாரோகணத்தீர்த்தம் உள்ளது. இதற்கு தாயார்குளம் என்றும் பெயருண்டு.
கைகூப்பிய குரு: இது ஒரு குரு ஸ்தலம். பிருகஸ்பதியாகிய குரு, இத்தலத்தில் சிவனை வழிபட்டு சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். தேவகுருவான இவர் காயாரோகணேஸ்வரருக்கு எதிரில் மேற்கு நோக்கி வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இவரது கைகள் மார்புக்கு நேராக குவிந்த நிலையில் உள்ளது. குருவின் அருள் இருந்தால் தான் ஒருவரின் வாழ்வில் திருமண யோகம், குழந்தைபாக்கியம் உண்டாகும். அவருக்குரிய வியாழக் கிழமையில், இங்கு வழிபட்டால் நன்மை உண்டாகும்.
எமதர்ம ஈஸ்வரர்: காயாரோகண தீர்த்தத்தின் மேற்குக் கரையில் எமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் தனிக் கோயிலாக அமைந்துள்ளது. எமதர்ம ஈஸ்வரர் என இவர் அழைக்கப்படுகிறார். நெய்தீபம் ஏற்றி இவரை வழிபட மரணபயம் நீங்கும்.
பெரியவர் வழிபட்ட சிவன்: காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 13வது பீடாதிபதியான சத்சித்கனேந்திர சரஸ்வதி சுவாமி கி.பி.272ல் இக்கோயிலில் சிவனோடு ஐக்கியமாகி ஸித்தி பெற்றார். இதன் காரணமாக, காஞ்சிப்பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி, ஆண்டுதோறும் தவறாமல் இங்கு வழிபடுவதை தன் வழக்கமாக கொண்டிருந்தார்.
அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:
இது ஒரு குரு ஸ்தலம்.
அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:
சிவராத்திரி, பவுர்ணமி, பிரதோஷம்
அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:
திருமண யோகம், குழந்தைபாக்கியம் உண்டாக இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Kayaroganeswarar Temple:
அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்
காஞ்சிபுரம்.
அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்: