Arulmigu Kurunatha Swamy Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு குருநாத சுவாமி திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.
Details of Arulmigu Kurunatha Swamy Temple
அருள்மிகு குருநாத சுவாமி திருக்கோயில் மூலவர்:
குருநாத சுவாமி
அருள்மிகு குருநாத சுவாமி திருக்கோயில் தாயார்:
–
அருள்மிகு குருநாத சுவாமி திருக்கோயில் தல விருட்சம்:
–
அருள்மிகு குருநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:
திருப்பரங்குன்றம்
அருள்மிகு குருநாத சுவாமி திருக்கோயில் வரலாறு:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயில்.
கோயிலில் சிவராத்திரி அன்று சீலைக்காரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். மஹா சிவராத்திரிக்கு இரண்டு நாட்களுக்கு முன், கப்பரை பூஜை நடக்கும். அன்று சுவமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் முடிந்து, திருக்குளம் அருகேயுள்ள முனியாண்டி கோயிலுக்கு சென்று அங்கு சேவல் காவு கொடுக்கப்பட்டு, அசைவம் படைக்கப்படும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அசைவம் படைக்கப்படும். மஹா சிவராத்திரியன்று, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து அங்காள பரமேஸ்வரி புறப்பாடாகி, குருநாத சுவாமி கோயிலில் எழுந்தருள்வார். சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, அதிரசம், தோசை, பயறு வகைகள் படைக்கப்படும். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து சிவாச்சாரியார்கள் வந்து பூஜை நடத்துவர். சிவராத்திரியிலிருந்து 3 அல்லது 5 அல்லது 7வது நாளில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். அன்றையதினம் பூசாரி குடும்பத்தினர் மூங்கிலில் கத்தி, வில், அம்பு தயாரித்து அதில் வேப்பிலை சுற்றி, தோளில் கட்டி சோறு சுமந்து, ஆஞ்சநேயர் கோயில் அருகேயுள்ள காட்டுப்பேச்சியம்மன் கோயிலுக்கு சென்று வேட்டை சாத்துதல் நிகழ்ச்சியும், இரவு, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து கொண்டுவரப்படும் பூ சப்பரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் புறப்பாடாகி பாரி வேட்டை நிகழ்ச்சி நடைபெறும். மறுநாள் சம்பா சாதம், உளுந்த வடை படையல் முடிந்து, அங்காள பரமேஸ்வரி அம்மன், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருள்வார்.இந்த பாரிவேட்டை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.
அருள்மிகு குருநாத சுவாமி திருக்கோயில் சிறப்பு:
கோயிலில் சிவராத்திரி அன்று சீலைக்காரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். மஹா சிவராத்திரிக்கு இரண்டு நாட்களுக்கு முன், கப்பரை பூஜை நடக்கும்.
அருள்மிகு குருநாத சுவாமி திருக்கோயில் திருவிழாக்கள்:
மஹா சிவராத்திரி, பவுர்ணமி, பிரதோஷம்
அருள்மிகு குருநாத சுவாமி திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு குருநாத சுவாமி திருக்கோயில் பிரார்த்தனைகள்:
நினைத்த காரியங்கள் கைகூட இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
அருள்மிகு குருநாத சுவாமி திருக்கோயில் நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
அருள்மிகு குருநாத சுவாமி திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Kurunatha Swamy Temple:
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில் திருப்பரங்குன்றம், மதுரை.
அருள்மிகு குருநாத சுவாமி திருக்கோயில் கூகுள் மேப்: