Homeகோவில்கள்அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் - Arulmigu Kalahastiswarar Temple, காளம்பாளையம்

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Kalahastiswarar Temple, காளம்பாளையம்

Arulmigu Kalahastiswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Kalahastiswarar Temple

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

காளஹஸ்தீஸ்வரர்

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் தாயார்:

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

வில்வமரம்

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

காளம்பாளையம்

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

இங்கு காளஹஸ்தீஸ்வரர் என்ற திருநாமத்தோடு சிவபெருமான் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக அருள்பாலித்து வருகிறார். காளன், புஜங்கன் என இரு நாகங்களும் தங்களுக்கு ஏற்பட்ட பாவதோஷத்தை போக்கிக் கொள்ள இத்தலத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரரை வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்றனர். இப்பாம்புகளுள் காளன் ராகுவின் அம்சம் எனவும், புஜங்கன் கேதுவின் அம்சம் என்றும் கூறப்படுகிறது. கரிகால் சோழன் கொங்கு மண்டலத்தை ஆண்டபோது இத்தலத்தைக் கட்டியதாக தொல்லியல் துறை பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மைசூர் சமஸ்தானம் முப்பது ஏக்கர் நிலத்தை இத்தலத்துக்கு நன்கொடையாக அளித்ததற்கான சான்றும் உள்ளது.

இப்போதும் ஒரு சிலசமயங்களில் மூலவர் பிராகாரத்துக்கு மேற்கிலும், வடக்கேயும் உள்ள புற்றிலிருந்து வரும் நாகங்கள் காளஹஸ்தீஸ்வரரை சுற்றி வந்து தரிசித்துவிட்டுப் போவதைப் பலர் பார்த்திருப்பதாகச் சொல்கின்றனர். பாம்புகள் வழிபட்ட தலம் என்பதாலும், இறைவன் திருநாமம் காளத்தீஸ்வரர் என இருப்பதாலும் இத்தலத்தை ராகு, கேது தோஷ நிவர்த்தித் தலமாகக் கருதுகின்றனர். திருக்காளஹஸ்தி செல்ல இயலாதவர்கள் இங்கே வந்து பரிகாரங்களைச் செய்து கொள்வதும் வழக்கமாக இருக்கிறது.

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

மஹா சிவராத்திரி அன்று காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் மூலவர் மீது சூரியஒளி விழும். அப்போது சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெற்று தீப ஆராதனைகள் காட்டப்படுவது சிறப்பு. ராகு-கேது பெயர்ச்சி சமயத்தில் விசேஷ ஹோமங்கள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் மழைவேண்டி வருணஜபம் செய்தால், கண்டிப்பாக மழை பெய்யும் என இப்பகுதி விவசாயிகள் உறுதிபட சொல்லி மெய்சிலிர்க்கிறார்கள். இத்தலத்தின் தனிச்சிறப்பாக திங்கட்கிழமைகளில் காளகஹஸ்தீஸ்வரருக்கு ருத்ர திரிசதி அர்ச்சனை செய்யப்படுகிறது. இதில் கலந்து கொள்வதால் மனக் குழப்பம், பயம், தொழில் பிரச்னைகள், ஜாதக தோஷங்கள், செய்வினைக் கோளாறுகளிலிருந்து விடுபடலாம் என்கின்றனர்.

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை தினங்களில் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டு நடைபெறும் வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். ஆருத்ரா தரிசனமும், மஹா சிவராத்திரியும் இத்தலத்துக்கு முக்கிய விழா தினங்கள்.

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைகள், நன்கு அறிவு வளர்ச்சியும், நல்ல ஞாபக சக்தியும் பெற்று சிறந்து விளங்க பெற்றோர்கள் இந்த அம்பாள் சன்னதியில் அர்ச்சனை செய்து வேண்டுகிறார்கள். தேர்வுகளுக்கு முன் குழந்தைகளை அழைத்து வந்து அம்பாளை வேண்டுவோரும் அதிகம்.

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

ஞானப்பூங்கோதை அம்பாளுக்கு லலிதா சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்வதன் மூலம் திருமணயோகம், குடும்ப சுபிட்சம், மாங்கல்ய பலம் போன்ற பலன்களை அடையலாம்.

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Kalahastiswarar Temple:

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், காளம்பாளையம், கோயம்புத்தூர்

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular