Home கோவில்கள் அருள்மிகு சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Sokkalingeswarar Temple, பெரியநாயக்கன் பாளையம்

அருள்மிகு சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Sokkalingeswarar Temple, பெரியநாயக்கன் பாளையம்

அருள்மிகு சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Sokkalingeswarar Temple, பெரியநாயக்கன் பாளையம்

Arulmigu Sokkalingeswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Sokkalingeswarar Temple

அருள்மிகு சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

சொக்கலிங்கேஸ்வரர்

அருள்மிகு சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோயில் தாயார்:

மீனாட்சி

அருள்மிகு சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

பெரியநாயக்கன் பாளையம்

அருள்மிகு சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

பதின்மூன்றாவது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில். மேற்குப் பார்த்து அமைக்கப்பட்ட சிவன்கோயில்கள் சிறப்புமிக்கவை. அவற்றுள் இதுவும் ஒன்று. அக்காலத்தில் பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகள் கூடலூர் என்றே அழைக்கப்பட்டது. கோயில் அமைந்திருக்கும் இடம் சற்றே பள்ளமானதாக இருந்ததோடு, சுற்றிலும் நீரும் தேங்கியுள்ளன. பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான சிவவாக்கியார், கூடலூர் பெரும்பள்ளம் சொக்கனே போற்றி என்று இத்தல நாயகனை போற்றிப் பாடியபாடல் கோவை அருகே கோயில் பாளையத்திலுள்ள ஈஸ்வரன் கோயில் கல்வெட்டில் உள்ளது. சொக்கலிங்கேஸ்வரர் சன்னிதியின் அருகில் அன்னை மீனாட்சியின் சன்னிதி இருக்கிறது. பழமையான இந்த கோயில் காலப்போக்கில் வெகுவாக சிதிலமடைந்தது. பின்னர் சிவனடியார்களின் ஒத்துழைப்போடு திருப்பணிகள் நடைபெற்று இன்று பொலிவுடன் திகழ்கிறது.

இத்தலத்தில் நவகிரக வழிபாடு மிகவும் விசேஷம். முதலில் மூலவருக்கும், அம்பாளுக்கும் மாலை அணிவித்து தேங்காய், பழம் மற்றும் கோயிலில் செய்த சர்க்கரைப் பொங்கலை சமர்ப்பித்து அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு அனைத்து நவகிரகங்களுக்கும் புது வஸ்திரங்கள் மற்றும் மாலை அணிவித்து தேங்காய், பழம் சமர்ப்பித்து அர்ச்சனை செய்ய வேண்டும். இதன் மூலம் விரைவில், விரும்பிய மணவாழ்க்கை பெறலாம் என்கிறார்கள்.

அருள்மிகு சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

மூலவர் முதல் பரிவார தெய்வங்கள் வரை அனைத்துக் கடவுளரும் தம்பதி சமேதராக அருளும் தலம்.

அருள்மிகு சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், மார்கழி மாத திருக்கல்யாணம், அமாவாசை போன்றவை சிறப்பாக நடைபெறுகின்றன. கார்த்திகை மாதம், நான்காவது சோமவாரத்தின்போது ஆயிரத்தெட்டு சங்குகள் கொண்டு சொக்கலிங்கேஸ்வரருக்கு நடக்கும் அபிஷேகத்தைக் காண்பது ஏழு பிறவிக்கான பாவங்களையும் தீர்க்குமென்கிறார்கள். மீனாட்சி அன்னைக்கு ஆடிவெள்ளி, ஆடிப்பூரம், கேதார கவுரி விரதம், தைவெள்ளி ஊஞ்சல் உற்சவம் ஆகியன வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன. மதுரை சென்று மீனாட்சியை தரிசிக்கு டாய்ப்பில்லாதவர்கள் இந்த மீனாட்சியை தரிசிக்கலாம்.

அருள்மிகு சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

தம்பதி சமேதராக இருக்கும் சொக்கலிங்கேஸ்வரரை தரிசித்தால் திருமணத் தடைகள் நிவர்த்தியாகும், தீராத நோய் நொடி நீங்கும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

பிரார்த்தனைகள் நிறைவேறியதும் புது வஸ்திரம் மாலை அணிவித்து அர்ச்சனை செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர்.

அருள்மிகு சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Sokkalingeswarar Temple:

அருள்மிகு சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோயில்,
பெரியநாயக்கன் பாளையம்,
கோயம்புத்தூர் – 641020

அருள்மிகு சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here