Arulmigu Sundaramakalingam Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.
Details of Arulmigu Sundaramakalingam Temple
அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் மூலவர்:
சுந்தரமகாலிங்கம்
அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் தாயார்:
அங்காள ஈஸ்வரி
அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் தல விருட்சம்:
வில்வ மரம், அரச மரம்
அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:
பழையனுார், திருப்புவனம்
அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் வரலாறு:
சுதந்திரத்திற்கு முன் ராமநாதபுர ராஜா சேதுபதி பரம்பரையைச் சேர்ந்த சந்தனதேவன் என்பவரை பழையனுபர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை பாதுகாக்கும் பொருட்டு காவல்வீரர்களுடன் நியமிக்கப்பட்டார். கிராமமக்கள் வழிபட சுந்தரமகாலிங்கம் கோயில் உருவாக்கினார். இதற்காக பழையனுபரில் அரண்மனையும் பராமரிப்பு செலவிற்காக விவசாய நிலங்களும் வழங்கப்பட்டன.
விவசாய நிலங்களில் சோளமும், வரகு போன்ற தான்ய வகைகளும் பயிரிடப்பட்டன. விவசாயம் செழித்து நன்கு விளைந்த கரிசல் பூமி என்பதால் விளைச்சலின் ஒரு பகுதி ராமநாதபுர அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. செல்வ செழிப்பு மிக்க இப்பகுதி பற்றி கேள்விப்பட்ட ஆங்கிலேயர்கள் இப்பகுதியை கைப்பற்ற படையெடுத்து வந்தனர். அதில் நடந்த சண்டையில் சந்தனதேவன் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடலும் கோயில் வளாகத்தில் புதைக்கப்பட்டது. சந்தன தேவரின் வாரிசுகளையும் சுட்டு கொல்ல ஆங்கிலேயர்கள் முயன்ற போது சுந்தரமகாலிங்கம் கோயிலினுள் புகுந்து உயிர் தப்பியதாகவும் அதனாலேயே குழந்தை வரம் வேண்டி நேர்த்திகடன் செலுத்துவது பக்தர்களின் வழக்கம். சந்தனதேவன் வகையறாவை சேர்ந்தவர்கள் பரம்பரை டிரஸ்டிகளாக உள்ளனர். தற்போது மூன்று பேர் கோயில் டிரஸ்டிகளாக உள்ளனர்.
–
அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் சிறப்பு:
பழையனுார் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களின் காவல் தெய்வம், குழந்தைப் பேறு அருளும் தலம் என்பதால் சுற்றுவட்டார கிராமமக்கள் பலரும் இங்கு வந்து வேண்டுவது வழக்கம், முதல் குழந்தைக்கு எல்லா மக்களும் சந்தன என ஆரம்பிக்கும் எழுத்தில் பெயர் வைப்பது வழக்கம், உதாரணமாக சந்தனகுமார், சந்தனராஜா, சந்தானம், சந்தான ஈஸ்வரி, சந்தான வள்ளி.
அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் திருவிழாக்கள்:
சிவராத்திரி என்று அழைக்கப்படும் மாசி களரி திருவிழா 4 நாட்கள் நடைபெறும்.
அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 1 மணி வரை, இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை.
அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் பிரார்த்தனைகள்:
குழந்தைப்பேறு, விவசாயம் செழிக்க, உடல் நலம் காக்க பிராத்தனை செய்கின்றனர்
அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் நேர்த்திக்கடன்:
பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Sundaramakalingam Temple:
சந்தன கருப்பண சாமி திருக்கோயில்,
பழையனுார், திருப்புவனம் தாலுகா,
சிவகங்கை மாவட்டம் 630611
அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் கூகுள் மேப்: