Home கோவில்கள் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Viruthakriswarar Temple, வெங்கனூர்

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Viruthakriswarar Temple, வெங்கனூர்

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Viruthakriswarar Temple, வெங்கனூர்

Arulmigu Viruthakriswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Viruthakriswarar Temple

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

விருத்தகிரீஸ்வரர்

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் தாயார்:

பாலாம்பிகை, விருத்தாம்பிகை

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

வெங்கனூர்

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட புறநகர் பகுதியான துறைமங்கலத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்த குறுநில மன்னர்  பண்டகுல ஆதலிங்க ரெட்டியார், அண்ணாமலை ரெட்டியார் சகோதரர்கள் ஒவ்வொரு பிரதோசத்தின்போதும் விருத்தாசலம் (முதுகுன்றம்) சென்று பழமலைநாதரை (அருள்மிகு விருத்தாசலேஸ்வரர்) வணங்கி வருவது வழக்கம். ஒரு முறை இருவரும் செல்லும்போது வெள்ளாற்றின் குறுக்கே இருகரையும் கரை புரண்டு வெள்ளம் ஓடியது. அன்றைய தினம் இருவரும் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்தனர்  அப்பொழுது இறைவனை பிராத்தனை செய்து ஆற்றில் இறங்கியபோது ஆறு வழிவிட்டு நின்றது. இருவரும் விருத்தாசலம் சென்று சுவாமி தரிசனம்  செய்துவிட்டு அன்று இரவு அங்கேயே இருவரும் தங்கிவிட்டனர். அன்று இரவு இருவரது கனவில் இறைவனும், இறைவியும் தோன்றி எனக்காக சிரமப்பட்டு இங்கு வர வேண்டாம். உங்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் கிளை நதிக்கு அருகில் வன்னி விருச்சத்துக்கு பக்கத்தில் பூச்செண்டும், எலுமிச்சை பழமும் கிடைக்கும் அவ்விடத்தை அகழந்து பார்த்தால் அம்மையும், அப்பனும் இருப்போம் எனக்கூறி மறைந்தனராம். கனவில் வந்தபடி இவ்விடத்தில் இருந்ததால் வெங்கைமா நகரில்  கோயில் உருவாக்கப்பட்டது.

இக்கோயில் அறநிலைதுறை பராமரிப்பில்  உள்ளது. இக்கோயில் சுமார் 9ம் அல்லது 10ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம். இந்த தலம் சிவப்பிரகாச சுவாமிகளால் பாடப்பட்டது.

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

இங்குள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒலி எழுப்பும் தூண்கள் உள்ளது. அருஉருவம், திருஉருவம் இந்த கோயிலில் ஒரே இடத்திலிருந்து தரிசனம் காணலாம்.

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி, நவராத்திரி உற்சவம், சோமவார உற்சவம், தைபூசம்.

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 6 மணி 12 முதல் மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 7.15 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

வேலைவாய்ப்பு, உத்யோக இடமாற்றம், திருமண தடை நீக்கம், குழந்தை பாக்கியம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Viruthakriswarar Temple:

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் வெங்கனூர் அஞ்சல், வேப்பந்தட்டை தாலுகா, பெரம்பலூர்-621116

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here