Homeமந்திரங்கள்ஸ்ரீ கால பைரவரின் சிறப்பை உணர்த்தும் 108 போற்றிகள்!

ஸ்ரீ கால பைரவரின் சிறப்பை உணர்த்தும் 108 போற்றிகள்!

Bairavar 108 Potri in Tamil

பைரவரின் முழு ஆசியையும் பெற கீழுள்ள 108 போற்றிகளைக் கூறி பூஜை செய்தால், நம் மனதில் ஏற்படும் பயத்தை நீங்கி, தைரியம் உண்டாகும்.

ஸ்ரீ பைரவர் 108 போற்றி

  1. ஓம் பைரவனே போற்றி
  2. ஓம் பயநாசகனே போற்றி
  3. ஓம் அஷ்டரூபனே போற்றி
  4. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
  5. ஓம் அயன்குருவே போற்றி
  6. ஓம் அறக்காவலனே போற்றி
  7. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
  8. ஓம் அடங்காரின் அழிவே போற்றி
  9. ஓம் அற்புதனே போற்றி
  10. ஓம் அசிதாங்க பைரவனே போற்றி
  1. ஓம் ஆனந்த பைரவனே போற்றி
  2. ஓம் ஆலயக்காவலனே போற்றி
  3. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
  4. ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
  5. ஓம் உக்ர பைரவனே போற்றி
  6. ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
  7. ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
  8. ஓம் உன்மத்த பைரவனே போற்றி
  9. ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
  10. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி
  1. ஓம் எல்லை தேவனே போற்றி
  2. ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
  3. ஓம் கபாலதாரியே போற்றி
  4. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
  5. ஓம் கர்வ பங்கனே போற்றி
  6. ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
  7. ஓம் கதாயுதனே போற்றி
  8. ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
  9. ஓம் கருமேக நிறனே போற்றி
  10. ஓம் கட்வாங்க தாரியே போற்றி
  1. ஓம் களவைக் குலைப்போனே போற்றி
  2. ஓம் கருணாமூர்த்தியே போற்றி
  3. ஓம் கால பைரவனே போற்றி
  4. ஓம் காபாலிகர் தேவனே போற்றி
  5. ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
  6. ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
  7. ஓம் காசிநாதனே போற்றி
  8. ஓம் காவல்தெய்வமே போற்றி
  9. ஓம் கிரோத பைரவனே போற்றி
  10. ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
  1. ஓம் சண்ட பைரவனே போற்றி
  2. ஓம் சட்டை நாதனே போற்றி
  3. ஓம் சம்ஹார பைரவனே போற்றி
  4. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
  5. ஓம் சிவத்தோன்றலே போற்றி
  6. ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
  7. ஓம் சிக்ஷகனே போற்றி
  8. ஓம் சீர்காழித்தேவனே போற்றி
  9. ஓம் சுடர்ச்சடையனே போற்றி
  10. ஓம் சுதந்திர பைரவனே போற்றி
  1. ஓம் சிவ அம்சனே போற்றி
  2. ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
  3. ஓம் சூலதாரியே போற்றி
  4. ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
  5. ஓம் செம்மேனியனே போற்றி
  6. ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
  7. ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
  8. ஓம் தலங்களின் காவலனே போற்றி
  9. ஓம் தீது அழிப்பவனே போற்றி
  10. ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி
  1. ஓம் தெற்கு நோக்கனே போற்றி
  2. ஓம் தைரியமளிப்பவனே போற்றி
  3. ஓம் நவரச ரூபனே போற்றி
  4. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
  5. ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
  6. ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
  7. ஓம் நாய் வாகனனே போற்றி
  8. ஓம் நாடியருள்வோனே போற்றி
  9. ஓம் நிமலனே போற்றி
  10. ஓம் நிர்வாணனே போற்றி
  1. ஓம் நிறைவளிப்பவனே போற்றி
  2. ஓம் நின்றருள்வோனே போற்றி
  3. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
  4. ஓம் பகையளிப்பவனே போற்றி
  5. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
  6. ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
  7. ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
  8. ஓம் பால பைரவனே போற்றி
  9. ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
  10. ஓம் பிரளயகாலனே போற்றி
  1. ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
  2. ஓம் பூஷண பைரவனே போற்றி
  3. ஓம் பூதங்களின் நாதனே போற்றி
  4. ஓம் பெரியவனே போற்றி
  5. ஓம் பைராகியர் நாதனே போற்றி
  6. ஓம் மல நாசகனே போற்றி
  7. ஓம் மகோதரனே போற்றி
  8. ஓம் மகா பைரவனே போற்றி
  9. ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
  10. ஓம் மகா குண்டலனே போற்றி
  1. ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
  2. ஓம் முக்கண்ணனே போற்றி
  3. ஓம் முக்தியருள்வோனே போற்றி
  4. ஓம் முனீஸ்வரனே போற்றி
  5. ஓம் மூலமூர்த்தியே போற்றி
  6. ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
  7. ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
  8. ஓம் ருத்ரனே போற்றி
  9. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
  10. ஓம் வடுக பைரவனே போற்றி
  1. ஓம் வடுகூர் நாதனே போற்றி
  2. ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
  3. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
  4. ஓம் வாரணாசி வேந்தே போற்றி
  5. ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி
  6. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
  7. ஓம் விபீஷண பைரவனே போற்றி
  8. ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!

ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலையில் அருகில் உள்ள சிவன் ஆலயத்திற்கு சென்று, ஸ்ரீ கால பைரவர் சன்னதியில் நெய் விளக்கு ஏற்றி, இந்த 108 போற்றி உச்சரித்து பூஜை செய்தால் மனக்கஷ்டங்கள் படிப்படியாகக் குறையும். அதே சமயம் தைரியத்தை உண்டாக்கும்.

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


இதையும் படிக்கலாமே

Latest

bhairavar 108 potri, bhairavar 108 potri in tamil pdf free download, kala bhairavar 108 potri, 108 bhairava names, most powerful kala bhairava temple in tamilnadu, Most powerful kala bhairava mantra, 108 bhairav names, sorna, bairavar 108 potri in tamil, kala bhairavar 108 potri in tamil, 108 names of bhairava in tamil, bhairav 108 names benefits, 108 names of kaal bhairav, kala bhairava stotram benefits, tulja bhavani 108 names

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular