Bhagavath geethai lines in tamil – பகவத் கீதை பொன்மொழிகள்
வாழ்க்கை ஒரு சவால் அதனைச் சாதியுங்கள்.
வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு சாகசப்பயணம் அதனை மேற்கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு கடமை அதனை விளையாடுங்கள்
வாழ்க்கை ஒரு வினோதம் அதனை கண்டறியுங்கள்
வாழ்க்கை ஒரு பாடல் அதனைப் பாடுங்கள்
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு பயணம் அதனை முடித்துவிடுங்கள்
வாழ்க்கை ஒரு உறுதிமொழி அதனை நிறைவேற்றுங்கள்
வாழ்க்கை ஒரு காதல் அதனை அனுபவியுங்கள்
வாழ்க்கை ஒரு அழகு அதனை ஆராதியுங்கள்
வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர் கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு குழப்பம் அதனை விடைகாணுங்கள்.
வாழ்க்கை ஒரு இலக்கு அதனை எட்டிப் பிடியுங்கள்.
கீதாசாரம்
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.
– பகவான் கிருஷ்ணர்
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]