Manickavasagar Temples in Tamilnadu – தமிழ்நாட்டில் மாணிக்கவாசகர் கோயில்கள் உள்ள இடங்கள்…
திருவாசகம் பாடிய மாணிக்க வாசகர், சிவன் கோயில்களில் தேவாரம் பாடிய மூவருடன் இருப்பார். இவருக்கு தனி சன்னதி சில கோயில்களில் உள்ளன. கீழ்க்கண்ட இடங்களில் நாம் மாணிக்கவாசகரை தரிசிக்கலாம்.
- கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில். மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல சிவனே, திருவாசகத்தை எழுதிய தலம். மாணிக்கவாசகர் சிவனுடன் ஐக்கியமாகிய தலம். தில்லைக்காளி கோயில் அருகில் தனி சன்னதி உள்ளது.
- தேனி மாவட்டம் சின்னமனுார். இங்கு மாணிக்கவாசகரே மூலவர். சிவன் மற்றும் அம்பிகை பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.
[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
- மதுரை மாவட்டம் திருவாதவூர் தலம். இங்குதான் மாணிக்கவாசகர் அவதரித்ததாக கூறுவர்.
- ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயில். இங்கு சிவபெருமானே மாணிக்கவாசகருக்கு ஆகமங்களை உபதேசித்த தலம்.
- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாதர் கோயில். இந்த இடத்தில்தான் மாணிக்கவாசகருக்கு சிவன் குருவாக இருந்து உபதேசித்ததாக கூறுவர்.
Manickavasagar Temple Names in Tamil Nadu
- Aathmanathar Temple – Avudaiyarkoil, Pudukkottai Dt.
- Thiruvathavur Temple (Birth Place of Manikka Vasakar) – Madurai Dt.
- Chinnamanur Temple – Theni Dt.
- Uthirakosamangai (Mangalanathar) Temple – Ramanathapuram Dt.
- Thillai Nataraja Temple – Chidambaram, Cuddalore Dt.
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]