Manickavasagar Temples in Tamilnadu – தமிழ்நாட்டில் மாணிக்கவாசகர் கோயில்கள் உள்ள இடங்கள்…
திருவாசகம் பாடிய மாணிக்க வாசகர், சிவன் கோயில்களில் தேவாரம் பாடிய மூவருடன் இருப்பார். இவருக்கு தனி சன்னதி சில கோயில்களில் உள்ளன. கீழ்க்கண்ட இடங்களில் நாம் மாணிக்கவாசகரை தரிசிக்கலாம்.
கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில். மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல சிவனே, திருவாசகத்தை எழுதிய தலம். மாணிக்கவாசகர் சிவனுடன் ஐக்கியமாகிய தலம். தில்லைக்காளி கோயில் அருகில் தனி சன்னதி உள்ளது.
தேனி மாவட்டம்சின்னமனுார். இங்கு மாணிக்கவாசகரே மூலவர். சிவன் மற்றும் அம்பிகை பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.