மார்கழி மாதத்தின் சிறப்புகள்

பொதுவாக மார்கழி என்றாலே, கடவுளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் வாசலில் கோலமிட்டு, பூசணிப்பூவால் அலங்கரித்து பூஜை செய்வது வழக்கம். இம்மாதத்தில் பூஜை செய்து வந்தால் வீட்டில் நீண்டகாலமாக தீராமல் இருக்கும், கஷ்டங்கள் கூட எளிதில் முடிவிற்கு வந்துவிடும்.
நம் வாழ்வில் முன்னேற்றம் அடையவும், நம் வேண்டுதல்கள் உடனே கடவுளின் செவிகளில் விழவும், இவ்வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும்.
ஆண், பெண் இருவருமே அதிகாலையில் எழுந்து நீராடியபின், அருகிலுள்ள பெருமாள் ஆலயத்திற்கு சென்று பூஜை செய்து வழிபடவேண்டும்.
அதேசமயம் அவ்வாலயத்தில் அரசமரம், வேப்ப மரம், வில்வ மரம் போன்ற மரங்கள் இருந்தால், அதன் அடியில் அமர்ந்து மனதை ஒரு நிலைப்படுத்தி, தியானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மன அமைதி அடைந்து நிம்மதி கிடைக்கும்.
இவ்வாறு செய்வதன் மூலம் நாம் செய்யும் பரிகாரங்களை விடவும் அதிக பலன் கிடைக்கும். ஆகையால் மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய பரிகாரம் இதுதான்.
மார்கழி மாதம் மட்டுமல்லாமல், மற்ற ஒவ்வொரு அதிகாலையிலும் எழுந்து குளித்துவிட்டு இறைவனை மனதில் நினைத்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் நாம் எண்ணிய எண்ணம் உடனே நிறைவேறும். அதேசமயம் நம்மிடம் சூழ்ந்திருக்கும் தீமைகள் நம்மை விட்டு விலகிச் செல்லும்.
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
இதையும் படிக்கலாமே
🔥 Trending
Latest
danur month, margazhi month, significance of margazhi month, margazhi month, margali masam, danur month, significance of marghazi month, importance of kolam in the Margazhi month or danur month