Maruthi kavasam in Tamil
நம் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை நீக்கி, மகிழ்ச்சியாக வாழ ஸ்ரீ ஆஞ்சநேயரின் திருமந்திரத்தை மனமுருகி கூறி வழிப்பாடு செய்ய வேண்டும்.
மார்கழி மூலம் அனுமன் பிறந்தான்
அனைவர்க் அருள அவனியில் வந்தான்
அஞ்சனை மாருதம் அளித்த நற்செல்வன்
அனுமனை போற்றி அவனியில் வாழ்த்த
வஞ்சனை நீக்கும் அஞ்சனை செல்வன்
கதாயுதனை காற்றின் மைந்தனை இன்சொல்
அதேகொண்டு அவனை அனைத்தும் காக்க
சதா சபிடேகம் சாற்றுவர் உவந்து
காக்க காக்க அனுமன் காக்க
நோக்க நோக்க நுணுகி நோக்க
தீர்க்க தீர்க்க தீவினை எல்லாம்
சேர்க்க சேர்க்க செம்பொருள் அனைத்தும்
ஆர்க்கும் பகைவர் அலறிஓடிட
வேர்க்குள் பகையாய் விழைந்தவர்அழிய
காக்க காக்க கண்ணுதல் காக்க
பார்க்குள் அவன்போல் இறைவன் இல்லை
ஓம்ரீம்ஸ்ரீஜெய ராம் எனும் அனுமன்
க்ரீம்க்ளீம் ஸ்ரீராம் பக்த அனுமன்
ஹம்க்ரீம் என்றே கொடியில் ஆர்க்கும்
ஸ்ரீஜெய ராம பக்த அனுமன்
காக்க காக்க கவசம் இதனை
போக்க போக்க பொய்யை தீய்மையை
தீய்க்க தீய்க்க தீவினை எல்லாம்
சேயாய் பிறந்து செய்வினை அறிந்து
சேவை செய்ய வாயு உகந்தான்
ஆவி அனைய அஞ்சனை மாதும்
அதனை உகந்தாள் அவனி உதித்தான்
மாருதி என்போன் மாருதம் அனையன்
பாரதில் என்றும் நிலவும் சீரோன்
பாரதம் போற்றும் பண்பு டையாளன்
காரணம் அவனே காருண்யம் அவனே
நாராயணன் ராமன் நடவெனச் சொன்னான்
ஆதவன் மகிழ்ந்து கல்வியைத் தரவும்
பூதவம் செய்ததால் பூமியில் வாழ்ந்தும்
மாதவம் இயற்று சிரஞ்சீவி அவனே
ஆதவன் குலத்தின் ஆணி அவனே
ராமனும் கண்ணனும் வாழ்ந்த நற்பூமியில்
ராமனைத் தன்னுடை நெஞ்சினில் வைத்தான்
ராகவன் தூதன் ஆதவன் குலத்தைக்
காத்து நின்றவன் காக்க என்னை
காக்க காக்க அனுமன் காக்க
காக்க காக்க கால்கள் இரண்டை
காக்க காக்க கணுக்கால் முழந்தாள்
காக்க காக்க கருணையில் காக்க
தீக்குள் புகையாய் திகழும் பொய்மை
போக்க போக்க புன்மையைப் போக்க
குருதி அதனில் ஒருரணம் இன்றி
மாருதி காக்க மாருதம் போல
இறுதி இல்லா இறைவன் காக்க
உறுதி அளிக்கும் உயர்வோன் காக்க
அஞ்சனை செல்வன் அடியினை காக்க
வஞ்சனை ஏதும் வாட்டா வண்ணம்
ஆஞ்ச நேயனே அடிவயிறு காக்க
துஞ்சம் போதும் துயருறா வண்ணம்
காக்க அனுமன் கண்ணினை காக்க
போக்க எந்தப் பொல்லா வினையும்
நோக்க நோக்க உண்மையை உறுதியை
தீங்குள் இலங்கை செற்றான் காக்க
போக்கும் வரத்தும் கபீந்திரன் காக்க
நோக்க காக்க நுணுகி நோக்க
பிட்டம் அதனை அனுமன் காக்க
வட்டக் குதத்தை வாலினால் காக்க
அட்டமச் சனியால் அடையும் துன்பம்
அனைத்தும் நீக்கி அனுமன் காக்க
சிற்றிடை அதனை அஞ்சனை செல்வன்
சிறப்புடன் காக்க சேர்க்கப் பெருமை
நற்றவ மிக்கோர் நவையறு நல்லோர்
நாணங் கயிற்றை அனுமன் காக்க
நற்குறி தன்னை காற்றின் செல்வன்
காக்க காக்க காக்கவந் துவந்தே
மார்பின் மதாணி மதகரி கேள்வன்
மாருதி காக்க மதிக்க வந்துவந்தே
ஆர்முன் பின்னென் றதுஒரு கேள்வி
ஆகா வண்ணம் அனுமன் காக்க
சீர்வனம் உறும்இறை செல்வன் காக்க
சீர்த்திகள் அருள்க செந்திரு மாலென
கூர்நக முடைய குரங்கினத் தலைவன்
காக்க காக்க கதிர்முடியாலே
ஆர்க்க ஆர்க்க அனைத்துயர் போர்க்களம்
வேர்க்க வேர்க்க சூர்ப்பகை வெருள
தீர்க்க தீர்க்க தினகரன் மாணி
தீராக் கொடுமை எல்லாம் தீர்க்க
ஈரல் இரைப்பை இதனைக் காக்க
ஆவலைத் தூண்டும் அரியவன் நீயே
ஆமரி அவனின் ஒர் துணை நீதான்
போயெவர்க் கூறினும் போற்றுதல் அறியார்
நீயறி இதனை நினைவாய்க்கொண்டே
நித்தம் நேர்ந்திடில் நிரம்ப சந்தோஷமே.
மார்பைக் காக்க மாருதி மகிழ்ந்தே
மற்றுள உறுப்பை மகிமையன் காக்க
சார்புள உறுப்பை சற்குணன் காக்க
சற்று மேலான கழுத்தை அனுமன்
ஆர்வமுடனே அணைத்தொனைக் காக்க
அருவிழி இரண்டு சூர்ப்பகை காக்க
அனைத்துப் பெருமை எனக்கு உறினும்
தருவெனும் அனுமன் என் சிரம் காக்க
நாசியை வாசியை நல்லவன் காக்க
பெருமைகொள் அனுமன் பிடரியைக் காக்க
பேசிடும் நாவைப் பெரியோன் காக்க
அருவிழி தன்னில் அனுமன் காக்க
அரஹர சிவசிவ ஸ்ரீஜெய ராமமென
அனைவரும் துதிக்கும் அனுமனே காக்க
காக்க காக்க கவலைகள் நீக்க
ஐயும் கிலியும் சௌவும் நீக்கி
அனைத்தும் அழிக்கும் அரியவன் காக்க
பொய்யும் களவும் போதாறு கென்றே
புரையா அன்பு மறைமுதல் காக்க
எய்யும் கணைபோல் இறைவர்க் காமோர்
இமையே போலும் தூதன் காக்க
செய்யும் செயலில் செம்மை வல்லான்
செம்பொருள் காக்க சிறந்திட காக்க
[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
நவகோள் தோஷம் நீங்க
சனியின் தந்தை உன்னகுரு நாதன்
சற்குணன் பருதி அதனால் தொல்லை
இனியெனக் கில்லை என்றும் காக்க
இமையாத் தேவர் வியப்பினில் ஆழ
கனியெனும் எம்மிறை கண்ணுதற் பெருமான்
உனைவடித் திட்டனர் உத்தமப் பொருளாய்
பனிமிகும் மார்கழி மூலம் கேது
பார்புகழ் வலியவன் காலில் தோன்றினை
இனியன நல்குவை எத்தோஷ மாயினும்!
இன்குரு வீட்டினில் பிறந்தவ னன்றோ!
இராகு செவ்வாயும் உன்னருள் இருப்பின்
இராவுமத் துன்பம் இதுதான் உண்மை
புராதனன் புனிதன் இராமன் போற்றும்
புண்ணிய மூர்த்தி கண்ணியன் அனுமன்
விராதனை வென்றோன் வேண்டிய நல்கும்
வினயமே ஆஞ்ச நேயன் என்றறிநீ.
குராமணம் கொண்ட கூந்தற் கோவியர்
திரேதாயுகத்தில் இவைனைத் தேர்ந்தான்
தேர்ந்தவன் தன்னை சேர்ந்தனன் அதனால்
தீர்த்தனன் பெரும்பகை செழும்புகழ் கொண்டான்
நேர்ந்தனன் மனத்தில் நினைவில் கனவில்
ஓர்ந்தனன் அவனை அவனே அனுமன்
சூரிய சுக்கிர புதபக வானும்
ஆரியன் உன்சொல் அறியாரோகாண்
வேரியங் கமலைச் செல்வி ஸ்ரீதேவி
வேட்டனளே உனைச் சிரஞ்சீவி என்றே
இதைப்போன்ற பல மகிமைமிக்க மந்திரங்களை காண கிளிக் செய்யவும் 👉👉 மந்திரம்
வருக வருக அனுமன் வருக
வருக வருக அனுமன் வருக
வருக வருக அஞ்சனை சிறுவன்
கெருவம் தீர்க்க வருக அனுமன்
அருவரு அதுவாய் அனுமன் வருக
ராமசாமியின் தூதன் வருக
நாமம் ஆயிரம் சாற்றுவோன் வருக
காமம் நீக்கிய கடவுள் வருக
எமப்புணையாம் எம்மிறை வருக
அருளுரு வாகிய ஐயா வரக
தெருளினை மாற்றும் தேவா வருக
உருகவே வைக்கும் ஒருவர் வருக
மருளற வைக்கும் மாருதி வருக
விந்தைக் கிறையாம் வித்தே வருக
முந்தித் தவம்செய் மூதறி முதல்வா
சிந்தித்து இன்னே சீக்கிரம் வருக
வந்தித்தோம் உனை வருகவென்று உவந்தே.
முந்துக முந்துக முந்துக
முந்துக முந்துக முதல்வன் முந்துக
செந்தணல் படவழ கெழுதிய ஓவியம்
முந்துக முந்துக முறையுடன் முந்துக
இந்தனம் அதநில் இலங்கையை எரித்த
அந்தண முந்துக அறவோன் முந்துக
நந்தியின் நாதனும் நாரண தேவனும்
அந்தியும் பகலும் சிந்தித் திருக்கும்
சிந்தையன் முந்துக சீரியன் முந்துக
சீமான் அனுமன் செம்பொருள் முந்துக
இம்மந்திரத்தை அனுமானுக்கு உகந்த நாட்களில், பகவானை நினைத்து ஜபித்து பூஜை செய்து வந்தால், அவரின் பரிபூர்ண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]