Home பாடல்கள் Pagai kadithal lyrics in tamil | பகை கடிதல் பாடல் வரிகள்

Pagai kadithal lyrics in tamil | பகை கடிதல் பாடல் வரிகள்

Pagai kadithal lyrics in tamil | பகை கடிதல் பாடல் வரிகள்

பகைகடிதல் | Pagai kadithal lyrics in tamil | pamban swamigal mantra

பாம்பன் சுவாமிகளால் அருளப்பட்ட பகை கடிதல் (Pagai kadithal) பாடல் வரிகளை இந்த பதிவில் காணலாம்.

Pagai kadithal lyrics | பகை கடிதல் பாடல்

திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே
அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே
இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே
குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே (1)

மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே
பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
இறையிள முக உருவே எனநினை எனதெதிரே
குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே (2)

இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே
மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே
குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே (3)

பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே
நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால்
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே (4)

அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே
மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே
இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே
குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே (5)

இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே
இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே
கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர்
குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே (6)

எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே
வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான்
பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே (7)

இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே
பலபல களமணியே பலபல பதமணியே
கலகல கல எனமா கவினொடுவருமயிலே
குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே (8)

இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே
சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே
தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே
குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே (9)

கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே
மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே
குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே (10)

பகைகடிதல், pambanswamigalmantra, பாம்பன்சுவாமிகள்அருளியகுமாரஸ்தவம், பாம்பன் சுவாமி பாடல்கள், பகை கடிதல் மந்திரம், shanmuga kavasam lyrics in tamil, kumarasthavam lyrics in tamil, பகை கடிதல் பொருள், பகை கடிதல் பாராயண பலன், pagai kadithal pdf, குமாரஸ்தவம் pdf, சண்முக கவசம் pdf download

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

pagai kadithal, pakai kadithal, pagai kadithal with lyrics, pagai kadithal – with lyrics, pagai kadithal lyrics, 1. pagai kadithal – lyrics by pamban swamigal, 1. pagai kadithal – lyrics by pamban swamigal – பகை கடிதல், pagai kadithal mp3, pagai kadithal meaning, pagai kadithal in tamil, pagai kadithal lyrics in tamil, pagai kadithal pamban swamigal, pamaban swamigal pagai kadithal, pagai kadithal mp3 song free download, pagai kadithal lyrics meaning in tamil, kadithal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here