ஜகத்குரு ஆதிசங்கர பகவத்பாதாள் அருளிய ஸ்ரீ ரங்கநாதர் அஷ்டகம்
ரங்கநாதர் அஷ்டகம்
ஆனந்தரூபே நிஜபோதரூபே
ப்ரஹ்ம ஸ்வரூபே ச்ருதிமூர்த்திரூபே
சசாங்கரூபே ரமணீயரூபே
ஸ்ரீரங்க ரூபே ரமதாம் மனோ மே.….. 1
ஆனந்த மந்திரங்களின் வடிவினரும், சத்திய ஞானசொரூபரும், பரபிரம்மமாக உள்ளவரும், ச்ருதிகளின் (வேதங்களின் வடிவானவரும் கையில் சங்கேந்தியிருப்பவரும், அழகிய உருவமுடையவரும், ஸ்ரீரங்கத்தில் அருளாட்சி செய்பவருமான அந்த ரங்கநாதரிடம் என் மனம் லயிக்கின்றது.
காவேரிதீரேகருணா விலோலே
மந்தாரமூலே த்ருதசார கேலே
தைத்யாந்த காலே அகிலலோகலீலே
ஸ்ரீரங்கலீலே ரமதாம் மனோ மே.….. 2
காவேரி தீரத்தில் அதீதமான கருணையுடன் அருள்புரிபவரும், மந்தார மரத்தின் மேல் அமர்ந்தபடி புரியும் தனது அழகான லீலைகளால் மனத்தைக் கவர்பவரும் அசுரர்களின் அந்திம காலத்தை முடிவுக்கு கொண்டு வந்து அகில உலகையும் விளையாட்டாகவே காப்பவருமாகிய ஸ்ரீரங்கனுடைய லீலைகளின்பால் என் மனம் ஈடுபடுகின்றது.
லக்ஷ்மீ நிவாஸே ஜகதாம் நிவாஸே
ஹ்ருத்பத்ம வாஸே ரவிபிம்ப வாஸே
க்ருபா நிவாஸே குணவ்ருந்த வாஸே
ஸ்ரீரங்க வாஸே ரவதாம் மனோ மே.… 3
லட்சுமி தேவியின் இருப்பிடமாக உள்ளவரும் (திருமாலின் மார்பை விட்டு என்றும் நீங்காதிருப்பவள் மகாலட்சுமி) அகில உலகிற்கும் ஆதாரமானவரும் பக்தர்களின் தாமரை போன்ற இதயத்தில் வசிப்பவரும், சூரிய மண்டலத்தில் ஒளிர்பவரும், கருணையின் இருப்பிடமாய் இருப்பவரும், காருண்யத்துக்கு ஆதாரமானவரும், ஸ்ரீரங்கத்திலே வசிப்பவருமான அந்த ரங்கநாதரின் பால் என் மனம் வசப்படுகிறது.
ப்ரஹ்மாதி வந்த்யே ஜகதேக வந்த்யே
முகுந்த வந்த்யே ஸுரநாத வந்த்யே
வ்யாஸாதி வந்த்யே ஸநகாதி வந்த்யே
ஸ்ரீரங்க வந்த்யே ரமதாம் மனோ மே.… 4
Sri ranganatha ashtakam lyrics in tamil
பிரம்மா முதலிய தேவர்களால் வணங்கப்படுபவரும், உலக உயிர்கள் அனைத்தினாலும் வழிபடத் தகுந்தவரும், முகுந்தனால் துதிக்கப்படுபவரும், தேவேந்திரனால் நமஸ்கரிக்கப்படுபவரும், வியாசர் மற்றும் சனகாதி முனிவர்களால் போற்றப்படுபவரும் ஸ்ரீரங்கத்தில் வசிப்பவருமான ரங்கநாதரை தரிசிக்க என் மனம் விழைகின்றது.
ப்ரஹ்மாதிராஜே கருடாதி ராஜே
வைகுண்ட்ட ராஜே ஸுரராஜ ராஜே
த்ரைலோக்ய ராஜே அகிலலோக ராஜே
ஸ்ரீரங்க ராஜே ரமதாம் மனோ மே.… 5
[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
பிரம்மாவுக்கு அதிபதியும் கருடனுக்கு எஜமானரும், வைகுண்டத்தின் அரசரும், தேவராஜனுக்கு ராஜாவும், மூன்று உலகங்களுக்கும் அரசனும், ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கும் அதிபதியும் ஸ்ரீரங்கத்தில் வசிப்பவருமாகிய ரங்கநாதனிடம் என் மனம் நாட்டமுடையதாகிறது.
அமோக முத்ரே பரிபூர்ண நித்ரே
ஸ்ரீ யோக நித்ரே ஸஸமுத்ர நித்ரே
ச்ரிதைக பத்ரே ஜகதேக நித்ரே
ஸ்ரீரங்க பத்ரே ரமதாம் மனோ மே.… 6
உயர்வான அபய முத்திரையை உடையவரும், முழுமையான நித்திரையையுடையவரும், யோக நித்திரையில் ஆழ்ந்தவரும் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவரும், அடைக்கலமடைந்தவர்களின் தேடுதலுக்குச் செவிசாய்த்து அருள்பவரும், பிரபஞ்சத்தில் நிலையாக இருக்கும் ஒரே ஒருவருமான ஸ்ரீரங்கவாசரின் பால் என் மனம் எப்போதும் ஈர்க்கப்படுகிறது.
ஸசித்ர சாயீ புஜகேந்த்ர சாயீ
நந்தாங்க சாயீ கமலாங்க சாயீ
க்ஷீராப்திசாயீ வடபத்ரசாயீ
ஸ்ரீரங்கசாமீ ரமதாம் மனோ மே.… 7
[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
ஆச்சரியப்படும் வடிவினில் படுத்திருப்பவரும், ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருப்பவரும், நந்தன் மடியில் படுத்திருப்பவரும், பிராட்டியாரின் மடியில் தலை வைத்துப் படுத்திருப்பவரும், ஸ்ரீரங்கத்தில் சயனித்திருப்பவரும் ஆகிய ரங்கநாதரின் மேல் என் மனம் எப்போதும் ஒன்றியுள்ளது.
இதம்ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்
புனர் நாசங்கம் யதி சாங்க மேதி
பாணௌ ரதாங்கம் சரணேம்பு காங்கம்
யாநே விஹங்கம் சயனே புஜங்கம்.… 8
இது வல்லவா ஸ்ரீரங்கம்! இத் தலத்தில் மரணிப்பவர்கள் மறு பிறப்பால் அவதிப்படுவதில்லை. அப்படி மறு சரீரம் பெற்றால் (மறு பிறவியில் பிறந்தால்) கையில் சக்கரம், காலில் கங்கா ஜலம், பயணிக்கும்போது கருடன், சயனத்தில் சர்ப்பம் என்று சாட்சாத் மகாவிஷ்ணுவின் சாருப்யத்தையே அடைவர். (பகவான் தன்னோடு அவர்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதால் அவர்களும் அவரது வடிவையே பெறுவர் என்பது உட்பொருள்).
ரங்கநாதாஷ்டகம் புண்யம் ப்ராதருத்தாய: யஹ் படேத்
ஸர்வாந் காமாநவாப்நோதி ரங்கிஸாயுஜ்யமாப்நுயாத்.… 9
எவரொருவர் இந்த ரங்கநாத அஷ்டகத்தை தினமும் காலையில் படிக்கிறாரோ அவரது நியாயமான எல்லா ஆசைகளும் நிறைவேறுவதோடு, ரங்கநாதரின் சாயுஜ்யத்தையும் அவர் பெறுவார் என்பது நிச்சயம்!
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]
ranganathar astagam, ranganathar, vishnu, perumal, navagraha temples, personal temple, private temple Sri Ranganatha Ashtakam Lyrics Tamil | ஸ்ரீ ரங்கநாதாஷ்டகம் பாடல்